எல்லையற்ற அன்பு கொள்வோம்
Sunday, November 22, 2009
பிரிதுயர்
வெட்டப்படாத நகங்களைப்போல உனது
நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன
குத்திக்கிழிக்க காத்திருப்பது போலவும்
வன்மம் கொண்டலைகின்றதது
ஒரு சிணுங்கள்கலோடு
ஒரு முத்தத்தோடு
ஒரு பொய்க்கிள்ளுதோடு
ஒற்றைப்புருவம் உயர்த்திய கோபத்தோடு
மென் மார்புகளின் வெம்மையோடு
இப்போதும் என்னுள் இருப்பதாய்
உணரும் ஒவ்வொரு கணத்திலும்
கசங்கிய புன்னகையை வலியுடன்
தவழவிடும் என் உதடுகளை
எதைக்கொண்டு மறைப்பது?
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
மிக அருமையாகத்தான் இருக்கே அப்புறம் ஏன் கவுஜ போட்டிங்க?
கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு கதிர்.
புரியுது, புரியுது...
///ஒரு சிணுங்களோடு
ஒரு முத்தத்தோடு
ஒரு பொய்க்கிள்ளுதோடு///
சிணுங்கலோடு...!
கிள்ளுதலோடு....!
சரியா கதிர்?
நல்லாவே பீல்ல்ல்ல்லல் பண்ணி இருக்கீங்க!
நல்லாயிருக்கு தம்பி.
இவ்வ்ளவு எழுத்துப்பிழையோடு எழுதினதுக்காக வெக்கப்படறேன் வேதனைப்படறேன் :(
//அப்புறம் ஏன் கவுஜ போட்டிங்க?//
கவிதைன்றதுக்கான அர்த்தம் இன்னமும் தெளிவா தெரியாத காரணத்தால எழுதறது எல்லாமே கவுஜ ன்னு நாமளே சொல்லிக்க்றது. வேற யார்னா சொல்லும்முன்னாடி. :)
கருத்திட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி
ரொம்ப நல்லாயிருக்கு கதிர்...
நல்லாயிருக்கு
//கதிர் said...
இவ்வ்ளவு எழுத்துப்பிழையோடு எழுதினதுக்காக வெக்கப்படறேன் வேதனைப்படறேன் :(//
அடடே.. அடடடடே... நல்லாயிருய்யா.. :)
கவுஜையும் நல்லாருக்குது.
ஊருல இருக்கியா. இருந்தா போன் நம்பர் மெயில் செய்
//மிக அருமையாகத்தான் இருக்கே அப்புறம் ஏன் கவுஜ போட்டிங்க?//
athe.
kavaithai natru nanba...
கவிதை நன்றாக வந்துள்ளது!!
.ரொம்ப நல்லா இருக்கு
கவிதை நல்லா இருக்கு நண்பரே
ஜேகே
.ரொம்ப நல்லா இருக்கு
Post a Comment