எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, January 13, 2008

எறும்புகளின் வாக்குமூலம்.



எறும்புகளில் ஏழாயிரத்து முந்நூற்று அறுபத்து நான்கு வகைகள் உள்ளது என
டிஸ்கவரி சேனலில் சேனலில் அறிமுகத்தோடு உங்களுக்கு அறிமுகப்படுத்தும்
நிகழ்ச்சி அல்ல இது. மாறாக உங்களுக்கு தெரிந்த, அல்லது உங்களை கடித்த
எறும்புகளின் குறிப்பாக இது அமையும் என்பது எங்கள் கருத்து. எந்த ஒரு முன்
முடிவுகளுக்கும் வந்துவிடாதீர்கள், ஆனால் சில குறிப்புகள் உங்கள் ஆழ்
மனதை பிரதிபலிப்பதாகவும் அமையலாம் ஆகவே சிறு அசுவாரசியத்தோடு
இதை படிக்க ஆரம்பித்தேயேர்களானால் எனக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்.
இது ஆராய்ச்சிக்கட்டுரையின் நோக்கத்தோடு எழுதப்பட்டதன்று. ஆகாவேதான்
இத்தனை மன்றாடல்கள்.

அனேக சமயங்களில் நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போதோ, அல்லது
சுவாரசியமான சில சமயங்களிலோ சில எறும்புகள் உங்களைக் கடித்திருக்க
கூடும் நீங்களும் அனாயசமாக உங்களின் இடக்கை சுட்டு விரலால் அதை
நசுக்கி வெற்றிச் சிசிப்பு சிரித்தபடி உங்கள் அடுத்த கண சுவாரசிங்களில்
ஈடுப்பட்டிருக்கலாம். அப்படி உங்களால் சாகடிப்பப் பட்ட எறும்பு எதைத்
தேடி வந்ததென்று உங்களில் ஒருவர் யோசித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி
யோசித்ததனால் வந்ததுதான் இது. முன்பே சொன்னது போல நீங்கள்
ஆச்சரியப்படும் வகையில் இங்கே ஒன்றும் இல்லை என்பதை உங்களின்
தாழ்வான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.


சாரணர் இயக்கம் கூட எங்களிமிருந்து கற்றுக்கு கொண்டதுதான் என அறிவியல்
பூர்வமாக நம்புங்கள். என்னவர்களின் முன்னோர்கள்தான் யுகம் யுகமாக பாம்புகளுக்கு
வசிப்பிடம் தயாரிக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? மாட்டீர்கள்,
எங்களிடம் சுரக்கும் உன்னத வாசனைதான் எங்களை விரட்டுகிறது. நாங்கள் கட்டும்
புற்றுக்களே எங்கள் வாழ்விடங்களாக இல்லாமல் போகும் சோகம் முன்
எப்போதோ எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

உங்கள் வீட்டில் கோழி வளர்த்திருக்கிறீர்களா? வளர்த்திருந்தீர்கள் என்றால்
கோழிக்குஞ்சுகளுக்கு செல்லை இட்டிருப்பீர்கள். கழுத்தின் அடியில் அந்த
செல்கள் உருள்வதை உங்கள் கைகளால் தடவி உணர்ந்திருப்பீர்கள். அவையும்
எங்கள் வழித்தோன்றல்களே. உங்கள் வீட்டில் இனிப்பு பொருள்களை மூடி
வைப்பது எங்களைப் போன்ற நாசக்காரர்களால்தான் எங்களால் உங்களுக்கு
பெரிய இழப்பொன்றுமில்லை. ஆனால் மனிதருள் கோடியிலும் சிறிய உருவமான
எங்களைக் கண்டு உங்களுக்கு இளப்பம், மேலும் எங்களின் எண்ணிக்கையைக்
கண்டு உங்களுக்கு பயமாக இருக்கக் கூடும்.

உங்கள் வீட்டின் பருப்பும், சர்க்கரையும், எள்ளும் இன்ன பிற தானியங்களையும்
நாங்கள்தான் கொள்ளையடிக்கிறோம். வேண்டுமானால் இதை வெள்ளைத் தாளில்
எழுதிக் கொள்ளுங்கள். எழுதும் முன்பு ஏன் கொள்ளையடிக்கிறோம் என்று நீங்கள்
யோசிதிருக்கிறீர்களா? இல்லையென்றால் சொல்கிறேன். எங்கள் ராணியின் கட்டளைக்கு
ஏற்ப மழைக்கால சேமிப்பு கிடங்குகளுக்கே உங்கள் தானியங்கள் கடத்தப்படுகின்றன.
கமிஷன் வைத்து அலசினால் கூட எவ்வளவு காணாமல் போனது என்பதை கண்டு
பிடிக்க முடியாமல் போகும் அளவைத்தான் நாங்கள் உருட்டிச் செல்கிறோம்.
வழியில் தென்படும் ஒன்றிரண்டு உறும்புகளை நீங்கள் கொல்வதால் எங்களுக்கு
ஏராளமான தகவல்கள் வந்து சேராமல் போகின்றன, மேலும் அவ்வெறும்புகள்
என்னவாயின என்பதை தேட சிறு படையை அனுப்புகிறோம். உங்களைக்
காட்டிலும் அற்பமான உயிரினம் நாங்கள். அடுத்தமுறை எங்கள் படையினத்தின்
இடையூறுகளை மன்னித்து விடுங்கள், உங்கள் பலம்பொருந்திய மூச்சுக் காற்றினால்
ஊதுவீர்களேயானால் நாங்கள் பறந்து விடுவோம். தயவு செய்து நசுக்கியோ
தேய்த்தோ விடாதீர்கள்.

கொசுக்களைப் போல ஈனத்தனமான சத்தமிட்டோ அல்லது ஈக்களைப் போல
ரீங்காரமிட்டோ உங்களின் மகிழ்ச்சியை கெடுப்பதில்லை என்பதை நீங்கள்
நினைவு கொள்ளவேண்டும். உங்கள் வீட்டினில் கூட சுவரோரமாகவோ அல்லது
சுவற்றின் மேலோதான் எங்களின் படை அணிவகுத்துச் செல்லும் அவை
எல்லாமே தத்தமக்கு இட்ட கட்டளைகளின் போக்குக்கு செல்கின்றன அடுத்த
முறை கவனிக்கும்போது அவற்றை கலைத்து விடாதீர்கள். எங்களில் சில வகை
எறும்புகள் உங்களை கடித்து துன்புறுத்தியிருக்கலாம் அதை ஒப்புக் கொள்கிறோம்.
ஆனால் அது திட்டமிட்ட செயல் அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள
வேண்டும். எதிர்ப்படும் உணவுப்பொருளின் சுவையறியவே அப்படி செய்கிறோம்.
எங்களுக்கு வாசனைதான் இயற்கை மூலமாக அறியப்பட்டதே தவிர
அதன் சுவை எங்களுக்கு தெரியாதது.

எங்கள் இன எறும்புகளில் கறுப்பு நிறத்திலும் உருவத்திலும் சிறியதாக இருக்கும்
இனங்களை நீங்கள் சாமி எறும்பு என்கிறீர்கள். கடிக்கும் எறும்புகளுக்கு என்ன
பெயர் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியாது. என்னது? சித்தெறும்பு
என்னை கடிக்குது என்று பாட்டு கூட எழுதி இருக்கிறீர்களா? சரிதான் எங்களைக்
காட்டிலும் உருவத்திலும், கொடுக்கிலும் பெரிது வாய்க்கப்பெற்ற எறும்பைத்தான்
சொல்கிறீர்கள். ஆம் அவைகளுக்கு பற்கள் கொஞ்சம் நீளம்தான் அவைதான்
உங்களை துன்புறுத்துகின்றன என்றால் எங்களின் ராணி எறும்புக்கு ஒரு தகவலை
அனுப்பி விடுகிறோம். அவைகள் இனி எந்த யுகத்திலும் உங்களை துன்புறுத்தாது.
சித்தெறும்பு பற்றி பாடியதாக அறிந்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். அதே
சமயம் இன்னொன்றையும் உங்களுக்கு சொல்ல விருப்பம். எங்களின் ஆதிகால
முன்னோர்கள்தான் சித்தெறும்பை விட பன்மடங்கு பெரிதான உருவத்தில்
இருந்தார்கள். அவை கொட்டினால் நீங்கள் உடனடி மரணம் அடைவீர்கள்.
இன்றும் அடர்வனங்களின் ஏதாவதொரு மரப்பட்டையின் உள்ளே என் மூதாதையர்
வசித்திருக்க வாய்ப்புள்ளது. அதைப்பற்றிய கவலை வேண்டாம். அவை இப்போது
தன் வீரியம் இழந்திருக்கக் கூடும். ஒருவேளை வீரியமுள்ள எறும்பு கொட்டினால்
கூட உங்களின் மிஞ்சியிருக்கும் சுவடிகளில் ஏதாவதொன்றின் மூலையில் நிவாரண
குறிப்புகள் இருக்கக்கூடும். என்னது அலோபதி மருத்துவம் பார்க்கிறீர்களா?
கவலைப்படாதீர்கள் இயல்பாகவே நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் இதன் பாதிப்பு
அதிகம் தெரியாது. எங்களின் சுபாவம் இரத்த ஓட்டத்தில் கலப்பதல்ல. எனவே
நீங்கள் தைரியம் கொள்ளலாம். இதனால் அதிர்ச்சி கொள்ள வேண்டால் அவ்வினம்
அழிந்துதான் நாங்கள் இவ்வுறு பெற்றோம். உங்களுடன் பல நூற்றாண்டு காலம்
வாழ்ந்தாயிற்று.

குழந்தைகளை கடித்ததால்தான் எங்கள் இனங்கள் மீது தாய்மார்கள் கடுஞ்சினம்
கொண்டுள்ளதாக தாமதமாக அறியப்பெற்றோம் ஆகவே ஒரு சுற்றறிக்கையும்
கூடவே மிருதுவான பொருள் எவற்றின் மீது உங்களின் பிரயோகம் இருக்க
வேண்டாம் என சுற்றரிக்கையும் அனுப்பினோம். இனி உங்கள் குழந்தை அழுதால்
இடுக்குகளில் எறும்பு கடித்திருக்கிறதா என தேடவேண்டாம் அவை பாலுக்காக
கூட அழலாம். எங்களுக்கும் கல்வியறிவு புகட்டி விட்டீர்களானால் நாங்களும்
பகுத்தறிந்து எங்கு எது உள்ளது என தேடிப்பெற்றுக்கொள்வோம்.

எங்களின் குரல்கள் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்துபவனாக இருக்கும் என்று
நினைக்கிறேன். அதனால் ஒரு சுவாரசியமான சம்பவம் சொல்கிறேன். எங்களின்
கிழக்குப் பகுதி வீட்டில் ஒரு தனியன் வசிக்கிறான். காலையில் காபியும் மாலையில்
ஏதோ ஒரு திரவத்தையும் உட்கொண்டு உயிர்வாழ்பவன். அந்த பகுதியில் இருந்து
எங்களுக்கு வரும் தகவல்கள் வினோதமானவை. காலையில் அணிவகுத்துச்செல்லும்
எறும்புகள் சர்க்கரைத்துகள்களை சேகரித்தும் மாலையில் அணிவகுத்துச்செல்லும்
எறும்புகள் மடிந்துபாதியும் சித்தம் கலங்கி மீதியும் வருகின்றன
. எங்களுக்கு பெரிய
ஆச்சரியம். கமிட்டி அமைத்து விசாரித்து பார்த்ததில் அவன் காபியையும் மதுவையும்
ஒரே கோப்பையில் குடிப்பவனாக இருக்கிறான். அந்தநாள் முதல் எங்கள் இனங்களுக்கு
மது சம்பந்தப்பட்ட வாசனையை பிறித்தறிய விசேஷ பயிற்சிகள் கொடுத்து பழக்கினோம்.
இதனால் எங்களுக்கு ஏராளமான வீரர்கள் விரயமாகாமல் இருப்பது பின்பு ஒரு
எண்ணிக்கை கணக்கெடுப்பில் கண்டுபிடித்தோம்.

இன்று நவீன முறைகளில் எங்களை ஒழிக்க பல கருவிகள் வந்து விட்டன. பல
நிறுவனங்கள் கூட எங்களை நம்பி முதலீடு செய்திருப்பதாக அறிந்தோம். மகிழ்ச்சி.
அவர்கள் தற்காலிகமாக எங்களை ஒழிக்கவே சாதனம் கண்டுபிடித்துள்ளார்கள்
அவர்களால் உங்களுக்கு பூரணத்துவ விடுதலை கொடுக்க வாய்ப்பில்லை.
வேண்டுமானால் எங்களிடம் கேளுங்கள் நாங்கள் சொல்கிறோம்.

மொக்கைகளின் தந்தை செந்தழலாருக்கு சமர்ப்பணம்.

மொக்கை போட அழைத்த சத்யாவுக்கு என்னுடைய வருத்தங்கள். :)

15 comments:

கைப்புள்ள said...

மொக்கைன்னு சொன்னாலும் லாஜிக்கெல்லாம் சும்மா நச்சுன்னு இருக்கு...

//அப்படி உங்களால் சாகடிப்பப் பட்ட எறும்பு எதைத்
தேடி வந்ததென்று உங்களில் ஒருவர் யோசித்திருக்கிறீர்களா?//
இது உண்மையில் யோசிக்க வைத்தது...சீரியஸாச் சொல்றேன். நாம் ஏன் மனுஷனாப் பொறந்தோம்னு யோசிச்சிட்டிருக்கற வேளையில ஒரு சின்ன எறும்பை ஏன் ஆண்டவன் படைச்சான்? அது ஒரு மனுஷனின் சுண்டுவிரலால் நசுக்கி சாகடிக்கப் படும்படி படைத்ததின் நோக்கம் என்ன என உன் பதிவு பலமாக யோசிக்க வைக்கிறது

கதிர் said...

தல!!!
எப்பயிலருந்து இப்படி கன்னாபின்னான்னு யோசிக்க ஆரம்பிச்சிங்க? அதிர்ச்சியா இருக்கு!

பாச மலர் / Paasa Malar said...

மொக்கை ரகத்தில் வருமா இது?

எறும்புகளின் மனதை இவ்வளவு தூரம் யோசித்திருக்கிறீர்கள்..யோசிக்கவும் வைத்திருக்கிரீர்கள்..

கோபிநாத் said...

டேய் எண்டா உனக்கு இந்த வேலை எல்லாம்..;)

Anonymous said...

//ஏன் மனுஷனாப் பொறந்தோம்னு யோசிச்சிட்டிருக்கற வேளையில ஒரு சின்ன எறும்பை ஏன் ஆண்டவன் படைச்சான்? அது ஒரு மனுஷனின் சுண்டுவிரலால் நசுக்கி சாகடிக்கப் படும்படி படைத்ததின் நோக்கம் என்ன //

இந்த யோசனை எனக்கும் வந்திச்சு.

இயற்கையின் அமைப்பில் இப்படியெல்லாம் இருக்கிறதே என்று சலித்துக் கொள்வதில் என்ன தான் லாபமிருக்கிறது?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப அழகான வாக்குமூலம்.. அசுவாரசியமா படிக்க சொன்னாலும் சுவாரசியமாத்தான் படிக்க முடிந்தது..

சும்மா அதிருதுல said...

என்னவர்களின் முன்னோர்கள்தான் யுகம் யுகமாக பாம்புகளுக்கு
வசிப்பிடம் தயாரிக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?
//

நிச்சயமாக மாட்டோம்

ஏனெனில் கரையான் புற்றில்தான் பாம்புகள் வசிக்கும்...!!!


எறும்புகள் பாம்புக்கு எதிரி மாதிரிதான்..!!


சும்மா அதுருதுல :)

குசும்பன் said...

கோபிநாத் said...

டேய் எண்டா உனக்கு இந்த வேலை எல்லாம்..////

ரிப்பீட்டேய் போடாத கோபியை கண்டித்து நான் போடுகிறேன்

ஒரு ரிப்பீட்டேய்

கண்மணி/kanmani said...

மொக்கையக் கூட இப்படி அழகா அலசி எழுதி பேர் வாங்கிடுவீங்கன்னு தான் நான் உங்களை மொக்கை போட அழைக்கலை.
எறும்புகளின் சார்பாக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.என்னே ஒரு அலசல்.

கப்பி | Kappi said...

டம்பியண்ணன் இன்று முதல் நீங்கள் 'எறுமபினம் காத்த ஏறு', 'சித்தெறும்பு சித்தர்' , 'கட்டெறும்புகளின் விடிவெள்ளி', 'சாமி எறும்புகளின் சாமி' என்ற பெயர்களில் அறியப்படுவீர்கள்!! வாழ்க நின் தொண்டு!! வளர்க உம் புகழ்!!

சென்ஷி said...

கண்ணா.. என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திடுச்சு...


இந்த பாடலும் எறும்பை பற்றிய பாடலே :))

கதிர் said...

//மொக்கை ரகத்தில் வருமா இது?//

அதுலகூட வராதா?

எறும்புகளின் மனதை இவ்வளவு தூரம் யோசித்திருக்கிறீர்கள்..யோசிக்கவும் வைத்திருக்கிரீர்கள்..//

நன்றி.

//டேய் எண்டா உனக்கு இந்த வேலை எல்லாம்..;)//

வேலையே இல்லன்னுதான மொக்க எழுதறோம், இதுல என்னப்பா லாஜிக்?

//இந்த யோசனை எனக்கும் வந்திச்சு.//

வாங்க நவன்,

இந்தமாதிரிலாம் யோசிக்ககூடாது.

//இயற்கையின் அமைப்பில் இப்படியெல்லாம் இருக்கிறதே என்று சலித்துக் கொள்வதில் என்ன தான் லாபமிருக்கிறது?//

அடுத்த முறை எறும்பை நசுக்காதிங்க, ஊதி விட்டுடுங்க. :)

கதிர் said...

//ரொம்ப அழகான வாக்குமூலம்.. அசுவாரசியமா படிக்க சொன்னாலும் சுவாரசியமாத்தான் படிக்க முடிந்தது..//

வாங்க MLA!
வழக்கமா போடுற கமெண்ட் போட்டுட்டிங்கன்னு நினைக்கிறேன். இது ஒரு மொக்கை போஸ்ட் அதையும் சுவாரசியம்னு சொன்னதுக்கா நன்றி.

//நிச்சயமாக மாட்டோம்//

மாட்டோம்னா என்ன பண்றது?

//ஏனெனில் கரையான் புற்றில்தான் பாம்புகள் வசிக்கும்...!!!//

கொத்தனார் கட்டுன வீட்டுல கூடதான் நீ வசிக்கிற, அதனால அது கொத்தனார் வீடுன்னு ஆகிடுமா? இல்ல நீ கட்டுனதுன்னுதான் சொல்ல முடியுமா?


//எறும்புகள் பாம்புக்கு எதிரி மாதிரிதான்..!!//

Mr. சூ அதிருதுல்ல, நீங்க பொறக்கும்போதே இம்புட்டு அறிவோடதான் பொறந்திங்களா? இல்ல இடையில இம்புட்டு ஞானம் வந்துச்சா?

மொக்க போஸ்ட்டுல வந்து உங்க ஜீவித்தனத்த காட்டுறிங்களே உங்களெயெல்லாம் என்ன பண்றது...

//சும்மா அதுருதுல :)//

ஆமாங்க பயங்கரமா அதிருது. :)))

சும்மா அதிருதுல said...

மொக்க போஸ்ட்டுல வந்து உங்க ஜீவித்தனத்த காட்டுறிங்களே உங்களெயெல்லாம் என்ன பண்றது...
//


பாம்புக்கு காது இருக்கு என்பது போலதான் இதுவும் தவறான தகவல்.

தவறான தகவல் தம்பி முலம் யாருக்கும் சென்றடைய கூடாதே என்ற நல் எண்ணம் தான் !!!


நன்றி

Anu said...

eppidinga ipdi ellam... thaniyaa room pottu yosippeeingalo... ennavo ponga... Erumbugal maanaattuku thalaimai thaanga ungala koopdraangalam.. pathu ponga...