எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, January 07, 2008

குளிர், குமரிகள், குழந்தைகள்

குளிர்காலத்திற்கும் பெண்களுக்கும் ஏதோ ஒரு ஆதியோடந்தமாய் தொடர்பிருப்பதாக
நினைப்பதுண்டு. குளிர்காலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் வெகுகாலத்திற்கு நினைவை
விட்டு அகலாமல் இருப்பதும் காரணம். ஒரு குளிர் காலத்தில்தான்
திருவண்ணாமலைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் பணிமாற்றம்
செய்யப்பட்டார் என் தந்தை. எங்களுக்குள் பெரிய இடைவெளி எப்போதுமே
சூழ்ந்திருக்கும் அது விவரம் தெரிந்த நாள் முதலே உண்டானது அதை மாற்றிவிட
அவருக்கும் தோன்றவில்லை எனக்கும் தோன்றவில்லை.

கல்லூரியில் என் திறமையைக்கண்டு வியந்து "வந்தால் உன் பெற்றோருடன் வா"
என்று அனுப்பி இருந்தார்கள். பனி நிறைந்த இரவில் பேருந்து ஏறி அவரைக்
காண புறப்பட்டேன் விடியல்காலையில் நான்கு மணி சுமாருக்கு கதவைத்
தட்டி உள்ளே அறைக்கு சென்றேன்.என் பேச்சுலர் அறைக்கும் அவர்
அறைக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை. வெளியே சென்று டீ வாங்கி
வந்தார். குளிக்க வெந்நீர் போட்டு தந்து பக்கத்திலுள்ள கோவிலுக்கு கூட்டிச்
சென்றார். இருள்கவிழ்ந்த கோயிலில் இருவருமாக உள்நுழைந்தோம்.

எங்களைத்தவிர யாரும் அந்த அதிகாலையில் வரவில்லை. கண்கள் மூடியபடி
வெகுநேரம் நின்றிருந்தார் நானும் சிறிதுநேரம் கண்கள் மூடி இருந்தேன். கண்
திறந்தபோது என் எதிரே ஒரு தாவணி அணிந்த பெண்ணும் அவளுக்குப்பின்னே
அவளது அம்மா, அப்பா, அண்ணன் தம்பிகள் என ஒரு படை சூழ வந்தாள்
அவளுக்குத்தான் பிறந்தநாளாக இருக்கக்கூடும், சற்றுமுன் அய்யர் மந்திரம்
சொல்லுமுன் ஏதோ ஒரு பெயரை கேட்ட ஞாபகம் அந்த நேரத்தில் பெயர்
முக்கியமல்ல என எண்ணி அவள் பின்னே பிரகாரச்சுற்றுக்குள் சென்று விட்டேன்
இரண்டாவது சுற்று வரும்போதுதான் அப்பா என்னையே முறைப்பது தெரிந்தது
மூன்றாவது சுற்றின் முடிவில் அனைவரும் வாசலுக்கு பக்கத்தில் உட்கார்ந்து
பேசிக்கொண்டு இருந்தார்கள். என் வயதோ என்னை விட ஒன்றிரண்டு வயதோ
அதிகமிருக்கலாம் அவளுக்கு. எதுவும் பேசாமல் அப்பாவின் பக்கத்தில் போய்
நின்றேன் ஏற்கனவே வைத்திருந்த விபூதியின் கீழ் குங்குமத்தை வைத்தார்.
பிறகு கார் ஏறி அந்த குடும்பம் பறந்து போனது. விடுமுறை எடுக்க முடியாத
காரணத்தால் முதல்வருக்கு கடிதம் எழுதி உறையுனுள் வைத்து தந்தார்.
அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் மறக்க ஆரம்பித்தாலும் அவள்
வண்டியில் ஏறி சென்ற காட்சி இன்றும் மனதினுள் அழியாமல் இருக்கிறது.

**************************

துபாயை போல கட்டிட நெரிசல்கள் அதிகம் இல்லாத நகரம் இது, மரங்களும்
மணல்வெளிகளும் நிறைந்த இடம் இதுவாகையால் எங்குமில்லாத வாட்டிடும்
குளிர் இங்கு. ஒருநாள் மாலை காலீத் என்ற சூடானியர் அவர் வீட்டு கம்பியூட்டரில்
இன்டெர்நெட் வேலை செய்யவில்லை என்றும் வந்து சரி பண்ணி தர முடியுமா
என்றும் கேட்டுக்கொண்டார். நான்கு மாதங்களுக்கு முன்பும் இதே போல
ஏதோ பிரச்சினை என்று அவர் வீட்டிற்கு சென்றுள்ளேன். அவர் வீட்டில் அழகான்
குட்டிப்பெண் இருக்கிறாள் பெயர் ஈலாஃப் என்று ஞாபகம். அந்த குட்டி மறந்து
போயிருப்பாள் என்று நினைத்தேன். ஒரு ஆப்பிரிக்க சிறுமி என்னிடம் இவ்வளவு
அன்பு வைத்திருப்பாள் என்று நினைக்கவேயில்லை. காலீத் வீட்டில் நுழையும்போதே
Mr.கதிர் என்றபடியே ஓடிவந்து கைகொடுத்தாள் வாழ்வின் மிக நெகிழ்ச்சியான
தருணம் அது. அவளின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போனேன்.

கம்ப்யூட்டரை சரி செய்த பின்னர் நான் தங்கியிருக்கும் இடத்துக்கே என்னை
கொண்டு வந்து விட காரை எடுத்தார் காலீத்.எடுக்கும்போது யாரோ காரின்
கதவை தட்டும் சத்தம் கண்ணாடி வழியே யாரும் தெரியவில்லை. கதவை
திறந்தால் ஈலாஃப் நிற்கிறாள். அவளையும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு
புறப்பட்டோம். வழிநெடுக நிறைய பேசினேன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை
அரபியை தவிர வேறெதுவும் தெரியாது, பள்ளியில் இன்னும் சேர்க்கவில்லையாம்.
நடு நடுவே அவள் பேசியது ஒன்றும் எனக்கு புரியவில்லை. நான் இறங்கும்
இடம் வந்ததும் தன் சிறிய உதடுகளை குவித்து கன்னத்தில் முத்தமிட்டாள்
ஈலாஃப் நான் பெற்ற முத்தங்களில் மிகச்சிறந்த முத்தம் அது. பனித்துண்டங்களை
ஒன்று சேர்த்து உதடு வடிவத்தில் செய்து பின் கன்னத்தில் ஒற்றியெடுத்ததுபோல.
காரின் பின் கண்ணாடி வழியே கையை அசைத்து போவது மங்களான பனியின்
புள்ளிகளுக்கு இடையே தெரிந்தது. நான் ஓவியனா இருந்தால் அந்தக்காட்சியை
வரைந்து வைத்து பின்னாளின் பார்த்து நினைவுகூர்ந்து கொள்ளலாம் என்று
தோன்றியது.

***************************

காதலை சொல்ல குளிர்கால காலைகள் உகந்ததல்ல என்பது அவளிடம் காதலை
சொன்னபோதுதான் தெரிந்தது. தினமும் காலையில் கோபால் நாயுடுவின் மரம்
போன்ற செம்பருத்திச்செடியில் பூக்கள் பறிப்பாள். முதல் நாள் பார்ப்பதுபோலவே
எல்லா நாளும் தோன்றிய நாட்கள் அவை. பள்ளியின் இறுதி பருவத்தின் இருந்த
காலம் அதுவாதலால் நயமாக என் ஆசையை தெரிவிக்க இயலாதவனாகிவிட்டேன்.
என்னை மறுத்தவள் நம் சரக்கல்ல என்று தோன்றியதால் காலப்போக்கில் அவளை
காதலித்ததிற்கான தடயங்கள் என் மனத்தில் அழிந்து போயிருந்தது. ஒரு குளிர்கால
அதிகாலை, திருச்சிக்கு போகும் வழியில் ஒரு கிராமத்து பேருந்து நிறுத்த
நிழற்குடையின் அருகில் முகப்பொலிவுகள் இழந்த ஒரு பெண் இரு குழந்தைகளுடன்
நின்றிருந்தாள். அவளேதான் முப்பது வயதை தாண்டியது போல அம்முகம்
மாறிவிட்டிருந்தது. பேருந்திலிருந்து இறங்கி அடுத்த பேருந்தில் வந்தடைந்தேன்.
நிழற்குடையில் பார்த்த அந்த பத்து நொடிகளை மறந்துவிடு என்றும், பூப்பறிக்கும்
அவள் முகத்தை மட்டும் நினைவடுக்குகளில் பதியவும் போராடி இரண்டுமே
இன்றுவரை என் நினைவில் இரண்டுமே நிலைத்திருக்கிறது.

*******************************

ஒரு குளிர்கால அதிகாலையில்தான் பள்ளியில் இருந்து தொலைவில் உள்ள கோமுகி
அணைக்கரை தாவடியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றான் என் நெருங்கிய
நண்பன். இன்றும் தெளிவாக நியாபகம் இருக்கிறது அது மலைப்பிரதேசத்தின்
அடிவாரத்தில் அமைந்த அம்மன் கோயில் அதன் நான்குபுறமும் பிரம்மாண்டமான
மூங்கில் மரங்கள் அடர்ந்து பெரிய வனம் போல காட்சி அளித்தது. இங்கு தினமும்
வந்து சாமி கும்பிடுவாள் என்றும் சொன்னான். மேலும் இன்று தன் காதலை
வெளிப்படுத்த போவதாகவும் சொன்னான். அவனை விட இரண்டு வயது மூத்தவள்
அவள், பத்தாவது தவறி இரண்டாண்டுகள் கழித்து தேறியவள். வழக்கமான கிராமத்து
பெண் அவள். நாசூக்கான மறுப்புகள் சொல்லத்தெரியாதவள். என்னவோ புணரத்தான்
அழைத்தது போல அவள் ஆர்ப்பாட்டம் செய்து செருப்பை நீட்டிவிட்டாள். மறுநாள்
குளிர்பிரிந்த காலையில் வயலின் நடுவே இருந்த மரத்தில் தொங்கிவிட்டான்.
இதிலென்ன அவமானம் இருக்கிறதென தெரியவில்லை.

********************************

அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்து ரசித்த பெண்ணொருத்தி குளிர் கால
விடியலில் என்னிடம் லிப்ட் கேட்டாள். அந்த நிகழ்வு எனக்கு சுவாரசியமானது.
ஒரு குளிர்காலத்தின் விடியலிள் அவள் பள்ளித்தோழிகளுடன் நடந்து
வந்துகொண்டிருந்தாள் உடன் இருவர் இருந்தனர். அப்போதுதான் புதிதாக சுசுகி வாங்கியிருந்தார்கள். யாருமில்லாத சாலையில் ஓட்டிப்பழக எடுத்துச்சென்றேன்.
பத்திருபது கிராமங்களை அணைத்து போகும் அந்த சாலை பல வளைவுகளை
கொண்டது. தோழிகளுடன் வந்துகொண்டிருந்தவள். ஏதோ உற்சாக மிகுதியில்
லிப்ட் கிடைக்குமா என்று கத்தி விட்டாள். சற்று தூரம் கடந்திருந்த நான் வண்டியை திருப்பினேன்.

அவளை நெருங்கியவுடன் அவள் இரண்டு தோழிகளுக்குப்பின் முகம்
மறைத்துக்கொண்டாள் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், மன்னிச்சிடுங்க என்று
சொன்னாள். சிரித்துக்கொண்டே கிளம்பினேன். பிறகு பேருந்திலோ, கடைத்தெருவிலோ, தெருவை கடக்கையிலோ சின்னவெட்கத்துடன் கூடிய புன்னகையை உதிர்த்து முகம்
மறைக்க இடம் தேடுவாள்.

********************************

ஒரு குளிர்கால இரவில்தான் எங்கள் ஊரில் உள்ள கூந்தல் நீளமான பெண்ணொருத்தி
ஒன்பதாவது பெயிலானாள் என்று தீக்குளித்துக்கொண்டாள். அவளின் கூந்தல் எனக்கு
மிகவும் பிடித்தமான ஒன்று. இங்கே கூந்தல் நீளமான கேரளத்து சேச்சிகளை காணும்
போதெல்லாம் முத்துலஷ்மி என்ற அப்பெண்ணின் நினைவு வரும். பெயிலானதுக்கெல்லாம்
தீக்குளிக்க ஆரம்பித்தால் நான் பதினெட்டுக்கும் அதிகமான முறை தீக்குளிக்க வேண்டும்.

*******************************

குளிர்கால அதிகாலையில்தான் என்னை வளர்த்த பாட்டி இறந்து போனாள்.

ஒரு குளிர்கால இரவில்தான் வெளித்திண்ணையில் இருந்த நாய்க்குட்டி குளிரில்
விரைத்து செத்துப் போயிருந்தது.

ஒரு குளிர் நிரம்பிய இரவில் கல்லூரி விடுதியில் படுத்திருந்த சக மாணவனுக்கு
வலிப்பு வந்தது. அதன்பிறகு வலிப்பு வரும் காட்சியை பார்த்தாலே அந்த
நண்பனும் பின் குளிர் நிரம்பிய இரவும் நியாபகம் வரும்.

ஒரு குளிர் நிரம்பிய அதிகாலையில்தான் கொடைக்கானலின் லாட்ஜ் ஒன்றில் மிக
அதிகபட்சமாக குடித்திருந்தேன்.

குளிர் நிரம்பிய இந்த இரவில்தான் பாம்பே ஜெயஸ்ரி பாடிய பாரதியின் கவிதைகளை
கேட்டுக்கொண்டிருக்கிறேன். வரும்கால குளிர் இரவுகளில் பாரதியும் பின் ஜெயாவின்
குரலும் என் நினைவுக்கு வரலாம்.

வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சிகளையும், அதனினும் மிகுந்த துயரங்களை இந்த
குளிர்காலம் தந்திருந்தாலும் வெயிலைப்போல அத்தனை கொடுமையாக
இருக்கவில்லை. வெயில் கால நினைவுகளுடன் பிறகு வருவேன்.
(விடமாட்டோம்ல )

41 comments:

ஆயில்யன் said...

//பனித்துண்டங்களை
ஒன்று சேர்த்து உதடு வடிவத்தில் செய்து பின் கன்னத்தில் ஒற்றியெடுத்ததுபோல.//

அருமையான வர்ணிப்பு


அனைத்தையும் ரசித்தேன் கடும் குளிர் நிலவிக்கொண்டிருக்கும் இந்த இனிய காலைப்பொழுத்தில்

நன்றி! (எங்களுக்குள்ளும் இருந்த பல கடந்து போன,மறக்க முடியாத முகங்களை ரீப்பிட்டிவீட்டீர்கள் )

Anonymous said...

chinna chinna uthiriyana sila nigalvukalai kai thaerntha sippy pola vadithu koduthirukireerkal

nam eluthai pirarai padikka kavarvathae oru kalaithano

கப்பி பய said...

:)

J K said...

அருமையானா இருக்கு.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

nice!

enjoyed reading on a very very mild winter evening. :) (it's going to be +12 tomorrow when it would normally be in the negative 10 to negative 20.)

-Mathy

குசும்பன் said...

அய்யனார் அருமையாக எழுதி இருக்கீங்க அய்யனார்:)

எப்படி அய்யனார் உங்களால் மட்டும் இப்படி எழுத முடிகிறது.

அய்யனார் மிகவும் அருமை அய்யனார் இந்த பதிவு:)))

குசும்பன் said...

அய்யனார் அடுத்த பதிவு எப்பொழுது அய்யனார், பதில் சொல்லுங்க அய்யனார், பதில் சொல்லுங்க:)))

அய்யனார் said...

கண்ணா உன்னோட மிகச் சிறந்த இடுகை இதாண்டா அள்ளிடுச்சி மனச :)

அய்யனார் said...

நான் எது எழுதினாலும் அவர் மாதிரி இருக்கு இவர் மாதிரி இருக்குன்னு சொல்ற நீ இப்பலாம் எது எழுதினாலும் என்ன மாதிரியே இருக்குன்னு ஒலகம் சொல்லுதே :)

தம்பி said...

நன்றி ஆயில்யன், அனானி, கப்பி :), J.K

தம்பி said...

மதி,

இப்ப எல்லா நாடுகள்லயும் குளிர் பருவம்தான் போலருக்கு. அதான் எல்லாரும் ரசிச்சு படிக்கிறாங்க.

நன்றி.

தம்பி said...

//அய்யனார் அருமையாக எழுதி இருக்கீங்க அய்யனார்:)

எப்படி அய்யனார் உங்களால் மட்டும் இப்படி எழுத முடிகிறது.

அய்யனார் மிகவும் அருமை அய்யனார் இந்த பதிவு:)))//

எலேய்
எம்புட்டு காசு வாங்கின?

போய் சில்லுன்னு தண்ணியகுடி தண்ணியகுடி...

தம்பி said...

//அய்யனார் அடுத்த பதிவு எப்பொழுது அய்யனார், பதில் சொல்லுங்க அய்யனார், பதில் சொல்லுங்க:)))//

அப்படி என்னய்யா அவசரம்?

லொடுக்கு said...

// அய்யனார் said...
நான் எது எழுதினாலும் அவர் மாதிரி இருக்கு இவர் மாதிரி இருக்குன்னு சொல்ற நீ இப்பலாம் எது எழுதினாலும் என்ன மாதிரியே இருக்குன்னு ஒலகம் சொல்லுதே :)
//

தவறு அய்யனார். ஒப்பீடு தவறு அய்யனார்.

தம்பி நன்றாக எழுதுகிறார். :)

தம்பி said...

//தவறு அய்யனார். ஒப்பீடு தவறு அய்யனார்.

தம்பி நன்றாக எழுதுகிறார். :)//

நீங்க ஒருத்தராச்சும் இருக்கிங்களே! ரொம்ப சந்தோஷம்.

லேய் குசும்பா வந்து பதில் சொல்லுடே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தம்மி!
உங்க குளிர் ரம்மியமான குளிர். இங்கே குளிர் இழுத்து மூடச் சொல்லும் குளிர்; தெருவிலோ;பேருந்து நிறுத்தங்களிலோ நிற்கும் சகமனிதன்; ஆணோ பெண்ணோ என அடையாளம் காணமுடியாத; இருகாலில் எழுந்து நிற்கும் கரடி போல் ; கம்பளம் பந்தாக இருப்பார்கள்.
நீங்கள் கூறும் உணர் வேதும் எழாது...
நன்கு எழுதியுள்ளீர்.
அந்த லிவ்ற் கேட்டது...மிக நல்ல பகிடி;;;நம்ம ஊரிலும் இப்படிக் குசும்புப் பொண்ணுகள்;இருந்துள்ளார்கள்.

CVR said...

கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக குளிர்காலத்தில் மிக வெதுவெதுப்பான தட்பவெட்பம் இங்கு நிலவி வருகிறது!!
நல்லா எழுதறீங்க அண்ணாச்சி!!
நான் வந்த புதுசுல பாத்த தம்பியின் எழுத்துக்களுக்கும் இப்போ வர எழுத்துக்களுக்கும் நிறைய மாறுதல்கள்!
வாழ்த்துக்கள்!! :-)

கண்மணி said...

எலே தம்பி கத உடாதே குளிர் காலத்துல பரீட்சை ரிசல்ட்டுக்கு தற்கொலையா [அக்டடொபர் அட்டெம்ப்டா]

அதுசரி அப்பவே உம்ம லந்தை ஆரம்பிச்சிட்ட போல

குசும்பன் said...

தம்பி said...

//தவறு அய்யனார். ஒப்பீடு தவறு அய்யனார்.

தம்பி நன்றாக எழுதுகிறார். //

நீங்க ஒருத்தராச்சும் இருக்கிங்களே! ரொம்ப சந்தோஷம்.

லேய் குசும்பா வந்து பதில் சொல்லுடே.///


ஆமாம் அய்யனார் பதிவில் நீ எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கிற:)))))

கோபிநாத் said...

நல்ல பதிவு..அழகான வர்ணிப்பு ;)

ரசித்தேன் கதிர் ;)

பினாத்தல் சுரேஷ் said...

பின் தொடரும் பிரம்மாண்டத்தின் வெக்கை உதிர்ந்து வெறுமை எய்திய வேனில் காலத்துப் பிரதிகளின் எதிர்க்குரலாக வலுத்து வெளிப்பட்டிருக்கின்றது உன் குரல். அதன் மௌனத்தின் சப்தம் தாங்காமல் கிரீச்சிடும் குளிர்காலக் குருவிகள் ஓசையைக் கூட்டத்தான் செய்கின்றன என்ற பிரபஞ்சப் பேருண்மை உணராதே குளிரூட்டும்.

எழுத்தென்னும் தவத்தில் வெப்ப அளவைக் குறைத்து வாடை ஏற்றி ஆடைகள் கூட்ட அவசியம் ஏற்படுத்துகின்றது உன் சமீபகாலப் பிரதிகள்.புரிதல் என்ற சிறு அளவுகோலுக்குள் அடைபடாமல் தன் பொல்லாச்சிறகை விரிக்கிறது..

சுரேகா.. said...

துண்டுத்துண்டு நினைவுகளில்
குளிர் காலம் ஆடிய ஊஞ்சல்
காதருகில் பனிக்காற்றை மட்டுமல்ல,
அதிகாலை நடை,
மார்கழி கோலங்கள்
பரங்கிப்பூ அலங்காரம்
மெல்லிய சரணகோஷம்
பெருமாள்கோயில் புளியோதரை
ஆகியவற்றையும்
சுவாசிக்கவைத்துவிட்டது.

வாழ்த்துக்கள் தம்பி!
நன்றியும் சேர்த்து!

இனியவன் said...

//
கல்லூரியில் என் திறமையைக்கண்டு வியந்து
//

அவ்ளோ நல்லவரா நீங்க?

பிரிதொரு குளிர்காலத்தில், இன்று குளிர்காலையில் படித்த இந்த பதிவு ஞாபகம் வரலாம்.

தம்பி said...

//தம்மி!
உங்க குளிர் ரம்மியமான குளிர். இங்கே குளிர் இழுத்து மூடச் சொல்லும் குளிர்; தெருவிலோ;பேருந்து நிறுத்தங்களிலோ நிற்கும் சகமனிதன்; ஆணோ பெண்ணோ என அடையாளம் காணமுடியாத; இருகாலில் எழுந்து நிற்கும் கரடி போல் ; //

வாங்க யோகன்,

+16 க்கே இங்க நடுக்கமெடுக்குது, அங்க எப்படி குளிரும்னு உணர முடியுதுங்க பாரீஸ். அது மாதிரி குளிர்ல இருக்கணும்னு ஆசை. :)

//கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக குளிர்காலத்தில் மிக வெதுவெதுப்பான தட்பவெட்பம் இங்கு நிலவி வருகிறது!!
நல்லா எழுதறீங்க அண்ணாச்சி!!
நான் வந்த புதுசுல பாத்த தம்பியின் எழுத்துக்களுக்கும் இப்போ வர எழுத்துக்களுக்கும் நிறைய மாறுதல்கள்!
வாழ்த்துக்கள்!! :-)//

வாங்க வலையுலக பி.சி.ஸ்ரீராம்!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. எழுத்துல மாற்றம் வரலன்னா என்ன வாசிச்சு என்ன புண்ணியம். அங்க இங்க பாக்கறதுதான் எழுதறேன். உங்களுக்கும் கூட நிறைய மாற்றங்கள் இருக்குதே!

நன்றி.

தம்பி said...

//எலே தம்பி கத உடாதே குளிர் காலத்துல பரீட்சை ரிசல்ட்டுக்கு தற்கொலையா [அக்டடொபர் அட்டெம்ப்டா]//

இதுக்குதான் டீச்சர் வேணும்னு சொல்றது. ஒம்பதாவதுல ரெண்டாவது வருஷம் படிச்ச ஒரே பொண்ணு இந்த பள்ளில நீதான்னு எல்லாம் கிண்டல் பண்ணாங்க. சின்ன சின்ன தப்புக்கு கூட மக்குத்தனம்னு சொல்ற வாத்தியார், கூடவே நண்பர்களில் கேலி, வீட்டுலயும் தொல்லை, அளவுக்கு மீறின உடல் வளர்ச்சி, இன்னுமா ஒம்பதாவது படிக்கிறான்னு பாக்கறவங்கள்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்துல எல்லை மீறி போக தீக்குளிச்சிட்டா!

அந்த பொண்ணை நான் பாத்திருக்கேன், பேசினதில்ல, பக்கத்து ஊர், குடும்ப உறவினர் என்பதினால் ஓரளவுக்கு தெரியும். ஆனா அவளுக்கு அழகான கூந்தல்.

எல்லாத்தையும் விவரமா சொல்லிட்டுருக்க முடியாதுங்க டீச்சர். பதிவ படிச்சா அனுபவிக்கணும், லென்ஸ் போட்டுகிட்டு ஆராயக்கூடாது.
பாவம் உங்க ஸ்டூடண்ஸ். :)

//அதுசரி அப்பவே உம்ம லந்தை ஆரம்பிச்சிட்ட போல//

அப்படின்னா?

தம்பி said...

//ஆமாம் அய்யனார் பதிவில் நீ எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கிற:)))))//

சின்னபுள்ளத்தனமா விளையாடிட்டு இருக்காத ராசா, போய் வேல எதுனா இருந்தா பாரு.

கோபி,

இந்த பதிவெழுத காரணம் நீதான். அதனால எல்லாரும் கோபி அன்னனுக்கு நன்றி சொல்லிடுங்க.

தம்பி said...

பினாத்தல்,
மன்னிச்சிடுங்க இனிமே இந்த மாதிரி எழுத மாட்டேன். :)

நன்றி.

சுரேகா,

அழகா வர்ணனை பண்ணறிங்களே, உங்க சூழல் நாங்கள்லாம் பாக்காதது
ஒருநாள் நிகழ்வுகள பதிவா ரசிச்சு எழுதுங்க நல்லாருக்கும்.

இனியவன்,

பிறிதொரு குளிர்காலத்திலும் இந்த பதிவு உங்களுக்கு ஞாபகம் இருந்தா உங்களுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்குன்னு அர்த்தம் - நன்றி.

இராம்/Raam said...

கதிரு,

ரொம்பவே அழகான பதிவு... ஒன்னோட எதிர்பாலின ஈர்ப்புகள் பதிவிற்கு அடுத்து நான் ரொம்பவே ரசித்து படித்த பதிவு... :)

பதிவை வாசித்து முடிந்ததும் =D> (stand and clap..)

முத்துலெட்சுமி said...

கொஞ்ச நாளா வாடைக்காலம் கோடைக்காலம் நடுவில் எதும் காலம் இருக்கான்னு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இதுக்குத்தானா.... அடுத்டு வெயில் காலம் சரி அதுக்கப்பறம் என்ன காலம் எழுதபோறீங்க... நல்லா இருக்கு ...

எப்படியும் உங்க எழுத்து நடையில் சில மாற்றம் வந்திருக்க்குன்னு எல்லாருமே கண்டுபிடிச்சிருக்காங்க..

தேவ் | Dev said...

குளிருதுப்பா குளிருது....

செந்தழல் ரவி said...

என்ன ஓய்...சுகம்தானே ? நியூ இயர் எல்லாம் எப்படி போச்சு ? இந்த வருசத்துலயாவது எதாவது உருப்புடியா நடக்குமா ?

Sathiya said...

உக்காந்து யோசிச்சீங்களோ? நல்லா இருக்கு. உங்களுக்கு ஒரு கொக்கி போட்டிருக்கேன். நீங்க வந்து தொடரணும்...
http://vadakkupatturamasamy.blogspot.com/2008/01/2007.html

மஞ்சூர் ராசா said...

குளிர்கால நினைவுகள் இந்தக் கடும்குளிர் நிலவும் பகல நேரத்தில் நடுங்கிக்கொண்டே படிப்பது சுவாரஸ்யம்.

//பனித்துண்டங்களை
ஒன்று சேர்த்து உதடு வடிவத்தில் செய்து பின் கன்னத்தில் ஒற்றியெடுத்ததுபோல.//

நல்ல உவமை.

அமீரகத்தில் வாழும் நண்பர்களின் சமீபத்திய பதிவுகளில் மிகுந்த முன்னேற்றம் தெரிகிறது.

வாழ்த்துகள்.

தம்பி said...

//கதிரு,

ரொம்பவே அழகான பதிவு... ஒன்னோட எதிர்பாலின ஈர்ப்புகள் பதிவிற்கு அடுத்து நான் ரொம்பவே ரசித்து படித்த பதிவு... :)

பதிவை வாசித்து முடிந்ததும் =D> (stand and clap..)//

ரொம்ப நன்றி ராம் அண்ணே.

தன்யனானேன்.

//கொஞ்ச நாளா வாடைக்காலம் கோடைக்காலம் நடுவில் எதும் காலம் இருக்கான்னு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இதுக்குத்தானா.... அடுத்டு வெயில் காலம் சரி அதுக்கப்பறம் என்ன காலம் எழுதபோறீங்க... நல்லா இருக்கு ...//

வாங்க MLA அவர்களே!

முழிக்காதிங்க "முத்துலட்சுமி அக்கா" அதை சுருக்கினா அப்படிதான் வருது.
வெயில்காலம் எழுதுவேன்.

//எப்படியும் உங்க எழுத்து நடையில் சில மாற்றம் வந்திருக்க்குன்னு எல்லாருமே கண்டுபிடிச்சிருக்காங்க..//

சந்தோஷம்தான!

தம்பி said...

தேவ்!
குளிருதுன்னா ரெண்டு பெக் போடுங்க.. :)
நன்றி.

வாங்க ரெட்பயர் ரவி!
ரொம்ப நாளா உங்கள காணாம தவிச்சி போய்ட்டோம்.

சத்யா!

மொக்கை எங்களது பிறப்புரிமை, அதை போட எனக்கு உரிமை உண்டு.
அடுத்தது அதான் போடபோறேன்.

தம்பி said...

//குளிர்கால நினைவுகள் இந்தக் கடும்குளிர் நிலவும் பகல நேரத்தில் நடுங்கிக்கொண்டே படிப்பது சுவாரஸ்யம்.

//பனித்துண்டங்களை
ஒன்று சேர்த்து உதடு வடிவத்தில் செய்து பின் கன்னத்தில் ஒற்றியெடுத்ததுபோல.//

நல்ல உவமை.

அமீரகத்தில் வாழும் நண்பர்களின் சமீபத்திய பதிவுகளில் மிகுந்த முன்னேற்றம் தெரிகிறது.

வாழ்த்துகள்.//

தொடர்ந்த உங்கள் ஊக்கத்திற்கு நன்றி!

haran said...

தம்பி,

நீண்ட நாட்களாகிறது, எந்த வலைப்பூக்களையும் முகர்ந்து. இந்த நீண்ட இடைவெளி விட்டதிலும் ஒரு நன்மை தெரிகிறது. உங்கள் எழுத்து, அழகிலும், ஆழத்திலும் மெருகேறி இருக்கிறது.

மனம் திறந்த பாராட்டுக்கள். நிறைய படியுங்கள்; நிறைய எழுதுங்கள்.

எப்படியாவது நேரம் ஒதுக்கி இங்கு வருகிறேன்.

துபாய் வரும்போது, விளிக்க மறக்கவேண்டாம்.

ஜி said...

:))) அருமையான பதிவு....

சுல்தான் said...

குளிர் இதமாய் வீசுகிறது கதிர் தம்பி.
//இதிலென்ன அவமானம் இருக்கிறதென தெரியவில்லை.//
தொங்கினது சரியில்லைதான்.
காரணம் ஏமாற்றத்தோடு அவமானமும் சேர்ந்ததால் தாங்க முடியாமல்...
டாக்டர் பொண் நோ சொன்னா நர்ஸ் பொண் ஊம் சொல்லும்னு தெரியல.
பாவம்.

தம்பி said...

நன்றி ஜாபர்,

சீக்கிரம் முடிந்த வரை எங்களோடு ஐக்கியமாக பாருங்கள். வாசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள்.

நன்றி ஜியா, சுல்தான்.

ரசிகன் said...

அருமையா ரசனையா சொல்லியிருக்கிங்க தம்பி...