எல்லையற்ற அன்பு கொள்வோம்
Friday, November 02, 2007
நான் லீனியர் கனவுகள்.
வேகவேகமாய் ஓடிப்போய் கந்தசாமியண்ணன் மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டேன்.
"நாளைக்குதாம்பா ஊர்போய் சேரமுடியும் நீ பஸ்ல போயிக்கோ"
வீட்டுல இருக்க பிடிக்கல அதான் இன்னிக்கே கிளம்பிட்டேன். அங்க இருந்தாலும்
பசங்களோட ஜாலியா இருக்கலாம்னுதான் அப்படியே உங்க வண்டியில போனா
பொழுதுபோக்கா இருக்கும் ஒரு டூர் போனமாதிரியும் இருக்குமேன்னுதான் ஏறிகிட்டேன்.
கந்தசாமியண்ணன் தங்கச்சி கல்யாணத்துக்கு சீதனமா கொடுக்கபோறதா சொன்ன
மாட்டுவண்டியதான் ஓட்டிகிட்டு போறார் அவர்கூடவே இப்ப போயிட்டு இருக்கேன்.
சாயங்காலம்தாம்பா போய் சேரமுடியும் அதுவுமில்லாம வண்டில உன்னால்லாம்
வரமுடியாது சொன்னா கேளு.
"கயித்த குடுங்க பீடிய பத்தவச்சிகிட்டு பின்னாடி உக்காருங்க. வண்டி நான் ஓட்டறேன்"
"மாடு மெரளும் ஊர்தாண்டின பொறவு நீ ஓட்டு"
சரி.
அண்ணே போற வழில எங்கக்கா வீட்டுக்கு போவணும்னே லைட்டா வண்டிய
திருப்புனீங்கன்னா ஒரு எட்டு பாத்துட்டு வந்திருவேன்.
காலேஜி படிக்கற பையன் மாட்டுவண்டில ஏறிப்போறத இப்பதான் பாக்கறேன்.
அவனவன் பிகர தூக்கிட்டு மலைக்கு பின்னாடி போயிட்டு இருக்கான் நீ
என்னடான்னா மாட்டுவண்டி ஓட்டணுன்ற.
ஒரு பீடி குடுங்க.
இதுவேறயா? துண்டுல மடிச்சி வச்சிருக்கேன் பாரு எடுத்துக்க.
ம்
உங்க மாமா வர்றாரு பீடிய கீழ போட்றா!
சரிண்ணே!
மாப்ள வீட்டுக்கு வந்துட்டு போறது...
போறவழிதான் மாமா, பாத்துட்டு போறேன்.
டைம் ஆச்சு நான் ஆபிஸ் போறேன்.
சரிங்க மாமா.
பையனுக்கு கிறுக்கு புடிச்சிகிச்சுன்னு நினைக்கிறேன். நூறு மைல் இருக்கும் மாட்டு
வண்டில போறானாம். முட்டாப்பய. என்று நினைத்தபடியே கலவரமான முகத்துடன்
ஆக்சிலேட்டரை அழுத்தினார்.
வேலு ஒம்மாமன் மொகத்தை பாத்தியா!
பாத்தேன் பாத்தேன். அவங்களுக்கெல்லாம் இது புரியாது நீங்க போங்கண்ணே!
சாமியண்ணன் ஊர்க்கதை பேசிகிட்டே வண்டிய ஓட்டிகிட்டு வந்தார். அவர்
சொல்றது ஒண்ணு கூட நம்பற மாதிரி இல்ல. ஊர்ல உள்ள சரிபாதி பொம்பளைங்க
நடத்தை சரியில்லன்னு சொல்றாரு. பகல்லதாண்டா அவளுங்க பத்தினி வேசம்
போடறாளுங்க உனக்கு விவரம் பத்தாது. உங்கிட்ட இத பத்தி பேசறதே தப்பு
வா வந்து வண்டிய ஓட்டு நான் பின்னாடி படுத்துக்கறேன்.
ரெண்டு ஊர்தாண்டி அக்கா வீடு வந்தது.
என்னக்கா பசங்க எல்லாம் அதுக்குள்ள ஸ்கூல் போயிட்டாங்களா?
இப்பதான் வண்டியேத்தி அனுப்பினேன். நீ வரன்னு சொல்லியிருந்தா நிறுத்தி
வச்சிருந்துருப்பேன்.
வண்டில வந்தியா இல்ல பஸ்ல வந்தியா?
வண்டிலதான் வந்தேன். ஆனா மாட்டு வண்டி என்று சொல்லி சிரித்தேன்.
உனக்கு வர வர பைத்தியம் பிடிச்சிடுச்சின்னு நினைக்கிறேன். அதான் இப்படி
நடந்துக்கற. இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்குல்ல லீவ் அதுக்குள்ள என்ன
அவசரம்?
போர் அடிக்குதுக்கா அதான் சாமியண்ணன் கூடவே வண்டில கெளம்பிட்டேன்.
சரி நான் வரேங்கா...
காசு வேணுமா?
இல்ல.
என்னடா போனவேகத்துல வந்துட்ட?
இல்லண்ணே பசங்கலாம் ஸ்கூல் போயிட்டாங்களாம். அதுவுமில்லாம உங்களுக்கும்
நேரமாகுதுல்ல அதான்.
சரி கெளம்பலாம்.
அடுத்ததாக முத்து ஒயின்சில் வண்டியை நிறுத்தி மாட்டுக்கும் எங்களுக்கும் தண்ணி
காட்டிக் கொண்டோம்.
டேய் ஊமக்குசும்பன் மாதிரி இருந்துகிட்டு எல்லா வேலையும் செய்யிற இன்னும்
என்னென்ன பழக்கமெல்லாம் இருக்குதோ தெரில.
மையமாக சிரித்தேன்.
ஒரு கட்டத்துக்குமேல் பயணம் மிகுந்த வேதனையை தந்தது. குண்டும் குழியுமான
ரோட்டில் வண்டியும் குலுங்கி உடலையும் குலுக்கி பாகங்களை இடம்மாற
செய்தது.
நீ வேணா பஸ்ல ஏறி போயிக்கோ. நான் வண்டில வர்றேன் சாமியண்ணன்
சொன்னார்.
இல்லண்ணே இன்னும் கொஞ்ச தூரம்தான், போயிறலாம்.
விடாப்பிடியாக பஸ் ஏற்றி விட்டார்.
அண்ணாச்சி கடையில் இறங்கி ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன். அவர்
ஆச்சரியமாக பார்த்தார்.
ஹாஸ்டலில் எவருமே இல்லை. வெறிச்சொடி இருந்தது. எவருமே இல்லாத
விடுதியை பார்ப்பது இதுவே முதல் முறை. ஒருவிதத்தில் கலக்கமாகவும்
சந்தோஷமாகவும் இருந்தது. உடல் அசதி வேறு படுத்தி எடுத்தது. அறையினுள்
நுழைந்து தாழிட்டுக் கொண்டேன்.
கனவுகளை மீட்டு அதை பத்திரப்படுத்துவது எப்படி என்று அவள்தான் கற்றுத்தந்தாள்.
முன்பெல்லாம் படுக்கையிலிருந்து எழுந்ததும் மசமசப்பான கனவுகள் என்னை விட்டு
தூரத்தில் செல்வது போலவும் அதை நான் துரத்தியபடியும் சென்று தோற்றுப்போய்
இறுதியில் மறுபடியும் உறங்கிவிடுவது போலவும் திரும்ப கண்விழிக்கும்போது அவள்
வந்து சொல்வாள் இதுபோலதான் தினமும் கனவுகளை மறந்துகொண்டிறேன் என்று.
ஒருசிலயோசனைகள் அன்று கூறத்துவங்கினாள் ஒவ்வொருமுறை கனவுகாணும்போது
அங்கு காண்பவர்களிடம் கேள்விகளை கேட்டுக்கொண்டே இரு விடியும்போது
ஏதோ ஒருகேள்வியில் துவங்கி மொத்தத்தையும் ஞாபகத்திற்கு கொண்டுவரலாம்
என்று கூறினாள். எதற்கு நான் கேள்வி கேட்கவேண்டும் என்றும் எதற்கு நான் மீண்டும்
எல்லாவற்றையும் ஞாபகத்திற்கு கொண்டுவரவேண்டும் எனக்கேட்டேன். அதற்கு
அவள் சொன்னாள். நீ தினமும் கனவுகளை நினைவிற்கு கொண்டு வர தவித்துக்
கொண்டிருப்பதை பார்த்துதான் உதவ வந்தேன்.
அவள் குரல் எனக்கு மிக பரிச்சியமானதாக இருந்தது. எங்கோ எப்போதோ
மிக நெருக்கத்தில் கேட்டிருக்கிறேன். மறக்க முடியாததாக இருக்கிறது. நான்
கேட்டேன் நீ என்னோடு இதற்கு முன்பு பேசியிருக்கிறாயா என்று. அதற்கு
அவள் சொன்னாள் உன்னோடு உறங்கியே இருக்கிறேன் நாம் இருவரும்
மிக நெருக்கமான தோழர்கள் எனவும் நாமிருவரும் பள்ளித்தோழர்கள்
என்றாள். அதற்கு மேலும் நமக்குள் ஒரு உறவுண்டு.
என்னால் ஒரு அவள் குரலைத் தவிர வேறெதுவும் நினைவில்லை. எப்படி
யோசித்து பார்த்தாலும் நினைவை மீட்க முடியவில்லை.
என் குழப்பமான முகத்தை பார்த்து அவள் சிரிக்க ஆரம்பித்தாள். அப்படி
சிரித்தது எனக்கு எரிச்சலை தந்ததாக அவள் எண்ணியிருக்கக் கூடும்.
சிரிப்பை நிறுத்திவிட்டு பேச்சினை தொடர்ந்தாள்.
நீ யார்னு கொஞ்சம் சொல்லேன்.
என்னடா என்னை மறந்துட்டியா? நான் சொல்லமாட்டேன் நீயா கண்டுபிடி.
எப்படி நான் கண்டுபிடிப்பேன்? குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு.
ஆனா சரியா தெரில.
ப்ளீஸ் நீயே சொல்லேன்.
சரி. ஒரு தீபாவளி அன்னிக்கு முதல்நாள் நீ என்னோட கைல மருதாணி வச்சி
விட்ட, வச்சி முடிச்ச பிறகு என்னோட உதட்டுல முத்தமிட்டாய்..
நான் மருதானி கையாலே உன்னோட முகத்துல அறைஞ்சேன். உன்னோட
முகமெல்லாம் மருதாணி அப்பிகிச்சு. இப்பவாச்சும் ஞாபகம் வருதா?
சுகந்தி....
என்னால் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லை. சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே
தெரியவில்லை. ஏழு வருடங்களுக்கு முன்பு எட்டாவதோ ஒம்பதாவதோ இருக்கலாம்
ஒரே தெரு,ஒரே வீட்டின் மாடியில் அவள். ஒரே வகுப்பு. எல்லாம் ஒன்றுதான்.
தோழன், தோழி, காதலி, நண்பன் எல்லாமாக சேர்ந்து ஆண்டவன் எனக்கு
கொடுத்ததுதான் சுகந்தி.
பால்ய காலத்துக் காதல். என் முதலும் கடைசியுமான ஒரே காதலி.
பலவாறு சிந்தனைகள் ஓடியது கூடவே அழுகையும் வந்தது.
மவுனத்தை அவளே கலைத்தாள்.
ஏண்டா பேசமாட்டேங்கற? என் மேல கோவமா?
கிட்டே நெருங்கி வந்து என் கண்ணீரை துடைத்தாள். அவள் மேல் இதுவரை
உணர்ந்தரியாத ஒரு வாசனை வீச்யது அது என் அறை முழுக்க பரவி
சுகந்தமளித்தது.... சுகந்தி...
சுகந்தி உன்கிட்ட ஒரே ஒரு கேள்விதான் கேக்கணும் ரொம்பநாளா நினைச்சுகிட்டே
இருந்தேன். கேக்கட்டுமா?
என்கிட்ட ஏன் நாடக்கதனமா பேசற? தாராளமா கேளு.
ஏன் சுகந்தி நீ செத்து போன? அதுவும் உடம்புல மண்ணென்னை ஊத்திகிட்டு
உடம்பெல்லாம் கரியாகி... ச்சே நீ அப்படி செத்துருக்கவேணாம் சுகந்தி
உன்ன வாழையிலைல வச்சு பாக்கும்போது எப்படி இருந்துச்சு தெரியுமா?
அழுகை கேவலாக மாறி நிறுத்த முடியாத அளவுக்கு வந்துவிட்டது.
அவளும் மெல்லியதாக விசும்பினாள்.
ஏன் சுகந்தி நீ செத்துப்போன?
நான் காரணம் சொன்னா நீ தாங்க மாட்ட...
பரவால்ல சொல்லு.
ஒருநாள் எங்க வீட்டு கதவை திறந்து உள்ளே போனபோது உங்கப்பாவும்
எங்கம்மாவும் ஒரே கட்டில்ல... அதற்கு மேல் அவளால் பேசமுடியவில்லை.
எனக்கு என்ன பண்றதுன்னே தெரிலடா... அதுக்குபிறகு அம்மா என்னை
அடிச்சிட்டே இருந்தா. எனக்கு வாழவே பிடிக்கலடா வேற வழியும் தெரில
அதான் செத்துபோயிட்டேன்.
உடம்பெல்லாம் வியர்த்து ஊற்றியது உடைகள் ஈரமாகி விட்டது. நான்கு பேர்
என்னை வெள்ளைத்துணியில் சுருட்டி குழிக்குள் இறக்கியது போல இருந்தது.
எல்லாம் கலைந்து எழுந்தபோது இந்த உலகத்தில் யாருமே இல்லாதது போலவும்
என் அறை அந்தரத்தில் தொங்குவது போலவும் உணர்ந்தேன்.
எழுந்து சென்று ப்ரிட்ஜை திறந்து சில்லென்ற தண்ணீரை குடித்தேன்.
சத்தம் கேட்டு அம்மா விழித்துக்கொண்டாள். தலைமுடியை அள்ளி முடிச்சு
போட்டவாறே சுவற்றில் சுவிட்சை தேடி அழுத்தினாள்.
என் முகத்தை பார்த்ததும் கலவரமானாள். பேசாமல் சென்று படுக்கையில்
மீண்டும் விழுந்தேன்.
சாமியறையில் இருந்து விபூதியை அள்ளிவந்து நெற்றியில் பூசிவிட்டுச் சென்றாள்.
ஜன்னலின் வழியாக இரண்டு மூன்று கேள்விகள் சென்று கொண்டிருந்தன. ஏனோ
அவற்றை பின் தொடர்ந்து சென்று முழுக்கனவையும் நினைவுக்கு கொண்டு வர
முயற்சிக்க தோன்றவேயில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
நல்லா இருக்கு ராசா...
அதே சமயம் சேர்க்கையாலா தான் இப்படியானு ஒரு கேள்வியும் வருது :)
ஏம்பா!
என்னப்பா ஆச்சு???
ஏதாச்சும் பிரச்சினைனா ஜி-டாக்குல சொல்லு!!
//கனவுகளை மீட்டு அதை பத்திரப்படுத்துவது எப்படி என்று அவள்தான் கற்றுத்தந்தாள்.//
intha varigal ethetheetho ninaivukaLai kilarukinrana...
நல்லா இருக்கு ராசா...
அதே சமயம் சேர்க்கையாலா தான் இப்படியானு ஒரு//???
மிக நெருடலான விஷயம்.
அருமையா இருக்கு கதிரு,
வேறு தளங்களிலிருந்தும் கதை கொண்டுவர்ற திறமை ஒனக்கு அதிகமாக இருக்கு ராசா.... =D>
வா புலி!
நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி!
என்ன சேர்க்கை? என்ன கேள்வி கொஞ்சம் விவரமா சொல்லுப்பா!
//ஏம்பா!
என்னப்பா ஆச்சு???
ஏதாச்சும் பிரச்சினைனா ஜி-டாக்குல சொல்லு!!//
எதுவும் பிரச்சினை இல்லயே! ஏம்பா இந்த பதட்டம்? :)
//intha varigal ethetheetho ninaivukaLai kilarukinrana...//
ஆஹா இதே கனவு வந்துச்சா உங்களுக்கும்.
கனவுகள் அற்புதமானவை. அவை பத்திரப்படுத்தவேண்டுபவை. எனக்கு கனவு எதாச்சும் வந்ததுன்னா அதை ஞாபகபடுத்தி பாத்துட்டே இருப்பேன் ஆனா வரவே மாட்டேன்னு அடம்பிடிக்கும். :)
//மிக நெருடலான விஷயம்.//
வாங்க வல்லிம்மா!
நன்றி.
//அருமையா இருக்கு கதிரு,//
நன்றி ராம்
//வேறு தளங்களிலிருந்தும் கதை கொண்டுவர்ற திறமை ஒனக்கு அதிகமாக இருக்கு ராசா.... //
அவரவர்களுக்கு மனதில், கனவில், நிஜத்தில் தோன்றுவதை எல்லாம் வெளிப்பூச்சு மற்றும் நாடகத்தன்மை இல்லாமல் எழுத ஆரம்பித்துவிட்டால் எல்லாரும் சிறந்த படைப்பாளிகள்தான்.
எலே புலி சேர்க்கையெல்லாம் நல்லாத்தானிருக்கு..:)
இவ்ந்தாம் புரட்சி பி.ந வன வாச்சே இப்படிதான்யா எளுதுவான்
நல்லா இருக்குய்யா...:)
கதிர்,
நல்லாயிருக்குங்கிற ஒத்த வார்த்தைய மட்டும் விட்டுட்டுப் போறேன்.
-மதி
சரி.. இன்னுங்கொஞ்சம்.. ;)
நாகை சிவா, சேர்க்கை பத்திச் சொல்லுறது. அய்யனாரைத்தானே? ;) அய்யனார் எழுதின இடுகையொண்ணு நினைவு வந்தது. அதோட சாயல் இருக்குன்னு சொல்ல வரல. நீங்க வேற மாதிரி எழுதி இருக்கீங்க. அவர் வேற மாதிரி.
-மதி
//இவ்ந்தாம் புரட்சி பி.ந வன வாச்சே இப்படிதான்யா எளுதுவான்//
இப்படியெல்லாம் சொன்னா கழுதை குதிரையாகிடுமா? புரட்சியும் கிடையாது ஒண்ணும் கிடையாது வேலைய பாருய்யா!
//நல்லா இருக்குய்யா...:)//
என்னோட எல்லா பதிவிலயும் இதே கமெண்டை விட்டுட்டு போற. எல்லா பதிவையும் நல்லாருக்குன்னு சொல்ற அந்த நல்ல மனசு யாருக்கு வரும்? அந்த வகையில நீ ரொம்ம்ம்ம்ப நல்லவன்யா! :)
//கதிர்,
நல்லாயிருக்குங்கிற ஒத்த வார்த்தைய மட்டும் விட்டுட்டுப் போறேன். //
இதையாச்சும் சொல்றிங்களே!
ஏன்னு நான் கேள்வி கேட்கும் தொனியோட இந்த பின்னூட்டத்தை முடிச்சேன்னு வைங்க அத படிச்சிட்டு திரும்பவும் வந்து விளக்கம் கொடுக்கணும்.
என்னடா இவனுக்கு பின்னூட்டம் கொடுக்க போனா அதுக்கு இன்னொரு பின்னூட்டம் போடணும் போலருக்கு உங்களுக்கு தோணும்.
என்னது தோணாதா?
எனக்கெல்லாம் அப்படிதான் தோணும். :)
அதனால நல்லாருக்குன்னாச்சும் சொன்னிங்களே அதுவே பெரிய விஷயம். :)
அவைகளை அப்படியே விட்டு விடுங்கள். :)
//நாகை சிவா, சேர்க்கை பத்திச் சொல்லுறது. அய்யனாரைத்தானே? ;) அய்யனார் எழுதின இடுகையொண்ணு நினைவு வந்தது. அதோட சாயல் இருக்குன்னு சொல்ல வரல. நீங்க வேற மாதிரி எழுதி இருக்கீங்க. அவர் வேற மாதிரி.//
நீ என்னை விட்டு போயிருக்க வேண்டாம் ஹேமான்னு ஒரு பதிவு போட்டாரு. அதோட சாயல்னுதான் நினனக்கிறேன். :)
Post a Comment