எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, September 29, 2007

பாவனா ஒரு கேள்விக்குறி!!!

சமிபத்தில் (ஒரு வாரத்துக்கு முன்னாடி)என் நலம் விரும்பி ஒருவர் பாவனாவின்
சமீபத்திய (அதுவும் இப்பதான்னு நினைக்கிறேன்)பேட்டி ஒன்றை மடல் அனுப்பி
இருந்தார். வெகு நாட்களுக்கு அப்பால் பாவனாவை பார்க்க போகிற ஆவலில்
தரவிறக்கம் செய்து இரண்டு மூன்று முறை பார்த்தேன்.

வழக்கமான ஊறுகாய் நாயகிகள் போல அல்ல பாவனா என்பது ஓரிரண்டு
படங்களை தவிர்த்து பார்த்தால் தெளிவாக புரிந்து விடும். (கி.க.சா, ஆர்யா,
கூடல் நகர் இதெல்லாம் சேர்த்தி இல்லிங்க). வழக்கமான நடிகைகளின் பேட்டி
மாதிரி இல்லாமல் தோழியுடன் பேசுவது போல ஒரு உணர்வு.(ஓவரா இருக்குதோ)

பேட்டி கண்டவரின் மொக்கைத்தனமான கேள்விகளுக்கு வழக்கமாக நடிகைகள்
தரும் போலிப்புன்னகைள் பதிலைப்போல இல்லாம நிஜமாகவே பதில் அளித்தது
போல இருந்தது. அந்த முடிக்கற்றைகளை ஒதுக்குவதிலும், சிரிக்கும்போது வாயை
பொத்துவதையும் தவிர்த்து பார்த்தால்(எல்லா நடிகைகளும் அதத்தான செய்றாங்க)
நல்லாவே பேசி இருக்காங்க.

காதலைபத்தி கேள்வி கேட்டதும் அவங்க சொன்ன பதில் உண்மையாகவே இன்றைய
பெண்களின் மனதை பிரதிபலிப்பது போல இருந்தது. நிறைய டப்பு உள்ள
பையனைத்தான் காதலிப்பாங்களாம், கல்யாணம் பண்ணிப்பாங்களாம். யாருக்குதான்
இந்த எண்ணம் இல்ல? :)

எந்த சூட்டிங் போனாலும் ரத்த காயம் ஆச்சுன்னா அந்த படம் சூப்பர் ஹிட்
ஆகிடுமாம் அத தெரிஞ்சிகிட்ட ஒரு துபாய் சேட்டன் ஒரு பொட்டி நிறைய
பேண்டேஜ் அனுப்பினாராம் சிரிச்சிகிட்டே சொன்னாங்க. யாருப்பா அந்த சேட்டன்?

மேலே சொன்னது போல வாழ்க்கைக்கு உபயோகமாக பல விஷயங்களை தெரிஞ்சிக்க
முடிஞ்சது.

இந்த பேட்டியை வளரும் சிறுவர்களும், வளர்ந்த பெரியவர்களும் காண சிபாரிசு செய்கிறேன்.

வெள்ளெருக்கு

அய்யனாரும் பிற பதிவர்கள் சிலரும் ஏற்படுத்திய முன்விவரணைகள் மூலமாக
அந்நூல் எனக்கு பரிச்சயமானது. பக்கங்கள் அதிகம் நீளும் நாவல்களில்
அதிகம் விருப்பமில்லை. பொட்டுதெறித்தது போல சிறுகதைகள் ஏற்படுத்தும்
சிலிப்புகளே அதிகம் என்னை ஈர்த்தது. நிறைய சொற்களை உள்ளடக்கிய
நாவல்களை விட வாழ்க்கையை ஆதாராமாக சிறு உரையாடல்கள் மூலம்
வெளிப்படுத்தும் சிறுகதைகள் ஏராளம் இருக்கின்றன. அந்த வரிசையில் அமைந்து
விடாமல் வெள்ளெருக்கின் அனைத்துக்கதைகளும் எதற்கும் பொருந்தாமல்
இருக்கின்றன. தமிழில் அதிகம் தெற்கைபற்றிய சிறுகதைகளே அதிகம்
எழுதப்பட்டிருக்கின்றன, புனையப்பட்டிறுக்கின்றன. நான் வாசித்த வரையில்
தென்னாற்காட்டின் வாழ்க்கைமுறையை எவரும் பதித்ததில்லை. இச்சிறுகதை
தொகுப்பு அதனை பூர்த்தி செய்கிறது.

முதன்முறையாக வெள்ளெருக்கை கையில் எடுத்தபொழுது எனக்குள் எதிர்
பார்ப்புகள் அதிகமாக இருந்தன. அவை எவற்றையும் பொய்யாக்காமல்
அத்தனையும் திரைக்காட்சிகள் போல வாசிக்கையில் என் முன் நிழலாடியது
போன்ற ஒரு உணர்வு.

பொதுவான இடத்தில் நமது பேச்சுக்கள் தலைவர்களின் மேடைப்பேச்சு போலதான்
அழகுற அமைந்திருக்கிறது. அதைத்தான் உலகமும் நம்புகிறது. ஆனால் அது
உண்மையல்ல. எந்த ஒரு சம்பவத்தையுமே நேரில் பார்த்தவன் எழுதும்போதுதான்
அதைப்பற்றிய பிம்பம் வாசிப்பவனுக்குள் முழுமையாக நிழலாட சாத்தியமுண்டு
என்பதை ஆழமாக நம்ப வைத்திருக்கிறது இந்த தொகுப்பு.

குறிப்பிட்டு சொல்லும்படியாக இத்தனை சிறுகதைகள்தான் என ஒரு முடிவுக்கும்
வரமுடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டேன். அத்தனை எதார்த்தமான
வெளிப்பாடுள்ள கதைகள். கதைகள் என்பதை விட நடந்தவை என்றுதான் சொல்ல
முடியும். எவரும் இதை கதை என்று ஒப்புக்கொள்ளவே மறுப்பர்.

ஒரு விஷயம் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது என்றால் அது அரிதாக நடக்கும்
ஒன்றாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும்
வார்த்தைகளும், நம்பிக்கைகளும் இக்காலத்தில் காணவே முடியாதபடி மாறிவிட்டிருக்கிறது.
ஒருகாலத்தில் நடந்தவை நான் சிறுவயதில் தூண்மறைவில் நின்று பார்த்திருக்கிறேன்
என்ற விஷயங்களை எழுத்தில் பார்க்கிற போது ஒரு உற்சாகம். இதுவரை யாரும்
எழுதவில்லையே என்ற ஆதங்கமும் ஒன்று சேர்ந்து என்னை சந்தோஷப்படுத்தியது.

இச்சிறுகதை தொகுப்பில் ஒவ்வொரு கதையிலும் என்னைப் பொருத்திப் பார்க்கும்
படியாக ஒரு கதாபாத்திரம் கண்டிப்பாக காண முடிந்தது. நான் இல்லாவிட்டாலும்
நான் பார்த்த மனிதர்கள் எழுத்தில் தெரியும்போது நூலிற்கும் எனக்குமான நேரடி
உரையாடலாகவே இந்த வாசிப்பனுபவம் எனக்கு தந்தது.

இச்சிறுகதைகளின் மிகப்பெரிய பலம் கிராமத்து மனிதர்களின் எள்ளல் பேச்சு
படிச்சிட்டு சிரிக்காம இருக்கவே முடியாது.

இந்நூலை வாசித்து முடித்த பிறகு இதுவரை எத்தனையோ சத்தில்லாத குப்பைகளை
படித்து தொலைத்து வீணடித்திருக்கிறோம் என்னும் மெல்லிய குற்ற உணர்ச்சி
என்னை தாக்கியது.

சிறுகதைப் பிரியர்கள் தவற விடக்கூடாத தொகுப்பு இது.

வெள்ளெருக்கு
கண்மணி குணசேகரன்
தமிழினி பதிப்பகம்.
விலை ரூபாய் 70

பறவையே எங்கு இருக்கிறாய்?



என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்
Still i rememnber my first letter
ப்ரபா நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும்
நானும் அம்மாவும் இங்க மகாராஷ்ட்ராவில தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம்
நீ வர்றதுக்கோ லட்டர் எழுதறதுக்கோ ஏதும் சமயம் வர்றப்ப நான் சொல்றேன்

நேரத்துக்கு சாப்பிடு
வாரத்துக்கு மூணு நாளாவது குளி
அந்த சாக்ச தொவைச்சு போடு
நகம் கடிக்காத
கடவுள வேண்டிக்கோ...

-ஆனந்தி

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே...

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே...

அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே
பார்க்கும் இசைகளிலெல்லாம் பாவை முகம் வருதே
நீங்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே...

உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மவுனங்கள் போதும்
இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா?
முதல் முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல்
உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே
இதுபோதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா?
என் தனியான பயணங்கள் இன்றுடம் முடியாதா?

முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...

பாடலைக் கேட்க (மூணாவது பாட்டு க்ளிக் பண்ணி கேளுங்க. டைரக்ட் லிங்க் குடுக்க போயி டவுசர் கிழிஞ்சிடுச்சி.)

தமிழ் MA படத்தில் இளையராஜா பாடியிருக்கும் பாடல்தான் மேலிருப்பது.
எனக்கென்னவோ அவரின் இசையத்தவிர மகன்களின் இசையில் பாடும்
பாடல்கள்தான் மிகவும் பிடிக்கிறது. உதாரணத்துக்கு
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
யாரோ யார் யாரோ யாரோடு யாரோ
அறியாத வயசு புரியாத மனசு
வரிசையில் இந்த பாடலும் மனதில் ஆழமாக பதிகிறது.

சோகத்திற்கென மீட்டப்படும் கருவிகளில் ஒன்றாக ராஜாவின் குரல்
இருக்கிறதோ என்று கூட எனக்கு சந்தேகம் இருக்கிறது.

இந்த பாடலில் வரும் பெண்ணின் குரலைக் கேட்கும்போது நமக்கிது போல
யாரும் இல்லையே என ஆதங்கப்பட வைக்கிறது. வரிகளுக்கு போட்ட
இசையைவிட அந்த பெண்ணின் குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

Monday, September 17, 2007

பேரன்பு கொண்டவள்



பலநூறு ஆண்டுகள் வேர் விட்ட ஆலமரத்தின்
நிழலைப்போல உன் அன்பு என் மீது படர்ந்திருக்கிறது.
அங்கே நிழலைத்தவிர வேறெதுவும் கண்டதில்லை
இலையுதிராத மரத்தின் மடியினைப்போல எவ்விதமான
காலநிலையிலும் நிழல் பரப்பும் உன்னதம்.
புகமுடியாக் கானகத்தின் உயர்ந்த கிளையிலிருந்து
வெடித்தெழுந்த பஞ்சு ஒன்று தென்றலென என்மீது
அமர்ந்தது போல நம் உறவு.
கட்டமைத்த வார்த்தைகளுக்குள் சிக்காதது
எவ்வித அலங்காரமும் அற்ற வார்த்தைகளின்
வடிவம் அது.
காதல்
நட்பு
வரம்
மகிழ்ச்சி
துயரம்
பகிர்தல்
பிரிவு
போன்ற வழமையான வார்த்தைளைக் கொண்டு
சிறப்பிக்க முயன்ற நான் தோற்றுப்போய்
இறுதியாக கண்டெடுத்த வார்த்தை
ஆகப்பொருத்தமாய் நீயும் ஓர் தாயடி.

பீனாவானா ஆகணும்னா.......

இப்ப தமிழ்மணத்துல எல்லாரும் பின்நவீனத்துவ கதைகள் எழுத முயற்சி எடுத்துகிட்டு
இருக்காங்க. கவிதைய முன்ன பின்ன எழுதி பழக்கமே இல்லாதவங்க கூட
கொலவெறியோட கலப்பைய புடிச்சிகிட்டு திரியரதா டீவில கூட் பாத்தேன்.
அதுவுமில்லாம புனைவு எழுத புற்றீசல் போல அனைவரும் புறப்பட்டுட்டாங்க.
இதெல்லாம் எங்க போய் முடியும்னு தெரியாம முழிச்சிகிட்டு இருக்கும்போதே நேத்து
நம்ம வலைய படிக்கற ஒருத்தர் போன் பண்ணி இருந்தார்.

எவ்வளவு செலவானாலும் பரவால்லிங்க தம்பி! நான் எப்படியாச்சும் பின்நவீனத்துவாதின்னு பேர் எடுக்கணும். அதுக்கு நீங்கதான் உதவி பண்ணனும்.
ரொம்ப நாள் இல்லாம கொஞ்ச சீக்கரமே ஆயிட்டா பரவால்ல.

அண்ணே நீங்க தப்பான அட்ரசுக்கு வந்திருக்கிங்க. எனக்கு கவுஜைய கூட ஒழுங்கா
எழுத தெரியாது.

உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம். எல்லாரும் சொன்னாங்க. நீங்க ரொம்ப நல்லா
சொல்லித்தருவிங்க.

"எவன் சொன்னான் அந்த மாதிரி. எனக்கு அதெல்லாம் தெரியாது மரியாதையா
ஆள விடு இல்லன்னா அய்யனார்கிட்ட புடிச்சி குடுத்துடுவேன்.

"ஆமா தம்பி ஆமா தம்பி. அவர மாதிரி ஆயிட்டன்னா கூட பரவால்ல"

யோவ் என்னய்யா இப்படி சொல்லிட்ட? அவர் மாதிரி ஆகறது என்ன அவ்வளவு
சாதாரண விஷயமா? அதுக்கெல்லாம் நிறைய படிக்கணும், அதவிட நிறைய
குடிக்கணும்.

"என்னது குடிக்கணுமா?"

நீங்க சரிப்பட்டு வரமாட்டிங்க போலருக்கு. எனக்கும் நிறைய வேலையிருக்கு.

"தம்பி, தம்பி ப்ளீஸ் தம்பி சபதமெல்லாம் போட்டுருக்கேன் எண்ணி நாப்பதே
நாள்ல பீனாவானா ஆகி காமிக்கிறேன்னு. கொஞ்சம் தயவு பண்ணுங்க தம்பி".

சரி உங்கள பாத்தாலும் பாவமாதான் இருக்கு.
சரி ம்ம்...
சுலபமான விஷயத்துலருந்து ஆரம்பிப்போம்.

சினிமா பாப்பிங்களா?

நிறைய பாப்பேங்க. ஜுராசிக்பார்க், காட்சில்லா, டைட்டானிக், அனகோண்டா
படத்தையே அஞ்சு முறை பாத்திருக்கேங்க. சமீபத்துல ரிலீஸ் ஆன கானல்
நீர், துள்ளல், காசு இருக்கணும். இதெல்லாம் கொஞ்சந்தான் இன்னும் நிறைய
மறந்துட்டேன்.

யோவ் நிறுத்துய்யா போதும். நான் சொல்றது அந்த மாதிரி படங்கள் இல்ல.
நீ முதல்ல தமிழ், ஆங்கிலப்படம் பாக்கறத நிறுத்தணும். புரியுதா?

"நீலப்படம் பாக்க சொல்றீங்களா?"

கூட கூட பேசாதய்யா...

"ப்ரெஞ்சு, ரஷ்யா, மாண்ட்ரீன், துளு இன்னும் பழங்குடியினர் பேசற பாஷை
படங்கள சப் டைட்டிலே இல்லாம பாக்கணும்."

"எனக்கு அந்த மொழியே தெரியாதுங்களே அய்யா"

யோவ் பாக்கறவனுக்கு மட்டும் தெரியுமா? படத்தை பார்த்ததும் புரிஞ்சிதோ
இல்லையோ அதுக்கு விமர்சனம்ற பேர்ல நீயா யோசிச்ச ஒரு கதையை பதிவா
எழுதணும்.

"தலைவா இப்படிலாம் பதிவு போட்டா யாராச்சும் படிப்பாங்களா? பின்னூட்டமாச்சும்
போடுவாங்களா?"

யோவ் என்னய்யா இப்படி கேட்டுபுட்ட? இந்த மாதிரி பதிவுகளுக்காகவே பல பேர்
கொலவெறியோட சுத்திகிட்டு இருக்காங்க தெரியுமா உனக்கு?

அந்த மாதிரி படம்லாம் எங்க தம்பி கிடைக்கும்?

எதாச்சும் ஒரு வீடியோ கடைக்கு போ, அங்க எவனுமே சீண்டாத சிடி,டிவிடி எதுன்னு
கேளு அவனே எடுத்து கொடுப்பான் அதெல்லாம் நல்ல படங்கள்தான்.

அப்புறம் இந்த பீனாவானா கவுஜ....

"இவ்ளோ சொன்னேன் அத சொல்ல மாட்டனா? ஏன் இந்த அவசரம்?

"இல்லிங்க மறந்துடுவிங்களோன்னு பயந்துட்டேன்"

"மெயின் மேட்டரே அங்கதான் சார் இருக்கு"

"கடையில இருந்து எடுத்துட்டு வந்த டிவிடிய அப்படியே பாக்க கூடாது. அதெல்லாம்
பாக்கறதுக்குன்னு சில முறை இருக்கு?

தலைகீழ கவுந்தடிச்சி பாக்கணுங்களா தம்பி?

யோவ் இந்த மாதிரி கூட கூட பேசறத நிறுத்துய்யா மொதல்ல.

மன்னிக்கனும். என்ன மொறைல பாக்கணும் தம்பி?.

அப்படி கேளுய்யா சிங்கம். படம் பாக்கறதுக்கு முன்னாடி கொறஞ்சது மூணு கட்டிங்
போடணும். அப்பதான் படம் தெளிவா புரியும்.

"நான் பதினஞ்சு நாளைக்கு ஒருக்கா தாங்க கட்டிங் போடுவேன்."

"யோவ் நான் நெப்போலியன் கட்டிங் சொல்றேன். நீயெல்லாம் பீனாவானா ஆகி
என்னத்த பண்ண போறியோ போ!

மன்னிக்கனும் நீங்க சொல்லுங்க தம்பி.

மூணு கட்டிங் அப்புறம் அரைவாசி படம் முடியும்போது ரெண்டு கட்டிங் போடணும்.
உன்னப்பாத்தா ஒரு கட்டிங்கே தாங்க முடியாத மாதிரி இருக்கு இருந்தாலும் பராவல்ல
அப்புறம் எப்பாடுபட்டாவது கிளைமேக்ஸ் மட்டும் பாக்காத ஆனா விமர்சனத்துல
நீ பாத்த மாதிரி உன்னோட கற்பனைய தட்டி விட்டு எழுதணும்.

ஒரிஜினலா படம் பாத்தவங்க படிச்சி திட்டுவாங்களே!

அதுக்கெல்லாம் கவலபடாத ராசா! அந்த மாதிரி படத்தை நாட்டுக்கே ஒருத்தந்தான்
பாக்க முடியும். விமர்சன பதிவா எழுதும்போது ஆகா, அருமை, கலக்கல்னு
ட்ரேட் மார்க் பின்னூட்டமா வரும். அதான் ஊக்கமா எடுத்துக்கணும்.

பீனாவானா கவுஜ...

கட்டிங்க போட்டு திரையில நீ பாக்கற பிம்பங்கள் அலை அலையா தெரியும்
அந்த கிறுகிறுப்புலயே பதினஞ்சி வரி, உனக்கு தோணுறதெல்லாம் எழுதிடு
கெட்ட வார்த்தையா இருக்குதேன்னு கவலபடாத. அதெல்லாம் இருந்தாதான்
பீனாவானா.

அப்புறம் இந்த புனைவு...

இப்ப கேட்டியே இது ஒரு நல்ல கேள்வி.

பதினஞ்சி வரி எழுதினா அதுக்கு பேரு பீனாவானா கவுஜ. அதையே கொஞ்சம்
நெருக்கியடிச்சி 150 வரி எழுதினா அதுக்கு பேரு புனைவு.

"தம்பி என்னால 150 வரியெல்லாம் டைப் அடிச்சிகிட்டு இருக்க முடியாதுப்பா"

அப்ப ஒண்ணு பண்ணு. கலப்பைய கம்பியூட்டர்ல இன்ஸ்டால் பண்ணாம உன்
வாயில இன்ஸ்டால் பண்ணிக்க. நீ பேசறது எல்லாம் திரையில தெறிச்சி
விழும் பாத்துக்க...

ஓகேவா இதுதான் எனக்கு தெரிஞ்ச பீனாவானா. இத புடிச்சிகிட்டு பெரியாளா வந்துடு.
"யாருக்கு தெரியும் நீயே நாளைக்கு பெரிய பீனாவானா ஆனாலும் ஆகலாம்."

வர்ட்டா....

Sunday, September 16, 2007

கலவர பூமிய பாத்தாவது திருந்துங்கடே


Neurotic Iraqi Wife is an Iraqi-British woman living and working in the Green Zone. Here's her blog on the most important recent event: Iraq's victory over Saudi Arabia in football's Asian Cup.

Monday, 30 July 2007:
As our team scored its goal, we all started jumping up and down. They all got up from their chairs screaming, shouting, dancing, singing. It was amazing. I cried, I cried for it was extremely emotional. One of the US generals also joined the celebrations.

...It was nice to see everyone enjoying the moment. Everyone, without any exceptions.

In a war-torn country filled with rivers of blood and streets of charred flesh, it was as if God was smiling on us again.

How I wish I was in the Red Zone. How I wish I was amidst all this. The Green Zone came alive, and so did the rest of the country."


படிக்கணும்னா இங்க கிளிக்குங்க

**************************

he victory was a rare chance for Iraq's many refugees to forget the violence that drove them out of their country. Nabil is 19. He left Baghdad and arrived in Jordan last month.

Monday, 30 July



You should have seen what happened here in Amman. All the Iraqis went out to the streets in their cars carrying Iraqi flags and singing Iraqi songs, especially the song "Elyoum yomak ya batal", which means "Today is your day, you are a hero".

The feeling we had today will never be forgotten, Iraqis here were all united, there weren't Sunni or Shiite or Kurdish people, they were all Iraqis, just Iraqis.

Saudi people were the best, I really respected them today, they went out in their cars carrying Iraqi flags that said "Iraqi... Iraqi... you deserve it".

It was really a very happy day but the bad thing was the response of the Jordanian authorities.

They started stopping cars and taking Iraqi flags from people. They arrested several people and beat up several guys.


படிக்கணும்னா இங்க கிளிக்குங்க

*********************************************

Sunshine is a 15-year-old girl in Mosul, northern Iraq. For her, the football euphoria wore off too fast.

Friday, 10 August

After we won the game , I hoped that the coming days and months would be peaceful and we would live happily ever after!

The situation now is not good at all... last Thursday, Mama came back from her work, and said three mortars fell on the hospital, there were injured and dead people. It was a horrible day. While she was talking to me about her bad day, her Mom called and said "Aunt Nazly died".

Aunt Nazly's brother came to my grandparents to tell them about his sister. He was shocked and in denial...

They don't have close relatives here, they came from Armenia so many years ago, and both of them are not married.

Grandpa started to call the churches, he didn't find any presbyter, or monk; all of them had been threatened and had left Iraq.

Luckily, Grandma found a 75-year-old female relative. She came after a few hours with a young monk. He took Aunt Nazly alone, to the Armenian cemetery in Baquba.

This fabulous woman who dedicated her life to serving the community and was loved by everyone, didn't have the funeral she deserved. She was a nurse and had saved many souls.

[They find her elderly brother died later that day].

Berg and Nazly were my grandparents' neighbours for more than 40 years, so it was very hard for them to lose them both in one day.

The neighbours who kept cooking and taking care of them before they died were Muslims (Sunnis and Shiites) as well as Christians. What you hear about the fight among the castes is not true, the citizens don't do that (only the politicians as I believe).

PLEASE the last thing I need is someone to argue with me and tell me the war is for our own good, because I live in Iraq and I can tell you, we had a better life...

படிக்கணும்னா இங்க கிளிக்குங்க


***********************************************
Mohammed is a 25-year-old dentist in Baghdad. His attempt at a summer holiday was less successful; he and his wife were denied entry to Jordan. He describes their 24 hours in Amman's Queen Alia International Airport.



Thursday, 9 August 2007:

... an officer came to us and told us that we weren't going to enter Amman. He spoke in a most humiliating way, and walked off. I tried to talk to him but he closed the door in my face.

Iraqis sleeping at Amman's international airport
Mohammed and his wife were denied entry to Jordan

I was so angry at the way he treated us. We are locked in a small room now, and my wife is scared of enclosed places.

... After an hour of my wife crying... another humiliating officer talked to us like we were dogs. "Get the hell out of here, and go to that room," he pointed. We saw a dirty corridor with blankets and 3 small rooms. "You will sleep the night here."

He pushed all of us and locked the door. I wanted to kill him for humiliating us.

Why does everyone treat Iraqis like this? We are humans, we aren't aliens, we are not animals to be put in jail for no crime

படிக்கணும்னா இங்க கிளிக்குங்க


தமிழச்சி, பித்தனுங்க, ஜல்லி, மொக்கை கவுஜ, பாப்பான், பறையன், போலி,
டோண்டு, திராவிடம், ஆரியம், புண்ணாக்கு எச்ச்சா எச்ச்ச்ச்சா.......
இதெல்லாம் என்னத்துக்குடா? எவ்ளோ நாளைக்குதாண்டா இதையே பண்ணிகிட்டு
இருப்பிங்க? தினப்படி நடக்கற சம்பவங்கள எழுதறவங்கதான் மேல உள்ளவங்க
எல்லாரும். ஒரு கலவர பூமில இருந்துகிட்டே அழகா எழுத்தை பதிவிக்கிறாங்க.
பாதுகாப்பான வாழ்க்கை வாழற நாமதாண்டா மலத்தை கையில வச்சிகிட்டு
எவன் மேல பூசலாம்னு பாத்துகிட்டே இருக்கோம்.

இப்படிலாம் என்னோட மனசாட்சிதாங்க சொன்னுச்சு. நான் சொல்லவேல்ல. :)

நன்றி பிபிசி