எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, August 10, 2007

நானும் கவிஞர்தாங்க!!!

எந்த வேலைகளும் இல்லாத ஒருநாள் மாலை நேரம்.

ஆசிப் அண்ணாச்சியிடம் இருந்து போன்.

எப்படி இருக்கிங்க தம்பி அண்ணன்.

ஆஹா அண்ணாச்சி நல்லா இருக்கேங்க உங்க புண்ணியத்தில என்று சொனேன். எங்கே
இருக்கிங்க என்றேன்.

பேரணில இருக்கேன் தம்பி

என்னது துபாயில பேரணியா?!! என்ன சொல்றிங்க...

ஆமாய்யா முன்னால நூறு வண்டி பின்னால நூறு வண்டி நடுவில நானு இப்டி
போனா பேரணின்னுதான்யா சொல்லணும்.

அப்டின்னா தினமும் பேரணி காணும் தலைவர் நீங்க என்று சிரித்தேன்.

ஆமாம் துபாய்ல இருந்து ஷார்ஜா போற எல்லாருமே தினமும் பேரணி காணும்
தலைவர்கள்தான்.

இன்னிக்கு வழில பேச்சுத்துணைக்கு நீதான்யா சிக்கின. தினமும் அட்டவணை போட்டு
ஒவ்வொருத்தர்கிட்டயா பேசுவேன் இன்னிக்கு ஒன்னோட முறை என்று சொல்லி
கிட்டத்தட்ட நாப்பது நிமிடங்களுக்கு மேலாக பேசினார். இடையில் இரண்டு முறை
இணைப்பு தானாகவே துண்டித்துக்கொண்டது ஆனாலும் மனிதர் விடவேயில்லை
அடுத்த நொடியே மறுபடியும் அழைத்து பேசிக்கொண்டே இருந்தார்.

யாருடன் பேசினாலும் தனது உற்சாக நிலைக்கே கொண்டு வரும் சிறந்த
நகைச்சுவையாளர். அவ்வளவு நேரம் எப்படி பேசினேன் என்றே தெரியவில்லை.
நேரம் போனதே தெரியவில்லை அவ்வளவு உற்சாகம்.

யோவ் தம்பி போன வைய்யா விட்டா பேசிகிட்டே இருப்ப போலருக்கு. என் வீடு
வந்திடுச்சி என்று போனை வைத்துவிட்டார்.

துபாயில இருந்து ஷார்ஜாவுக்கு தினமும் போறவங்களுக்கு தெரியும் ட்ராபிக்கின் வலி.
காரை விட்டுட்டு நடந்து போனாவே அரை மணி நேரத்துல போயிடலாம் போலன்னு
தோணும். அப்படி ஒரு கொடுமையான விஷயம். அந்த நேரத்துல அவருக்கு போர் அடிக்ககூடாதுன்னு பேசினாராம். நல்லாருங்கப்பு என்று சொல்லி வைத்தேன்.

நானும் அய்யனாரும் ஒரு விழாவில் அண்ணாச்சியை சந்தித்தோம். விழாவுக்கு வந்த நண்பர்களிடம் இவர்தான் கவிஞர் தம்பி, இவர் பின்நவீனத்துவ கவிஞர் அய்யனார்
என்று கொஞ்சம் கூட சிரிக்காமல் அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகம் செய்து வைத்தவர்களில் ஒருவர் "நானும் கவிஞர்தாங்க" என்று கைகுலுக்கினார். எனக்கு
சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஏங்க இப்படி கவிஞர், கவிஞர்னு சொல்லி அறிமுகபடுத்தறிங்க என்றதற்கு, ஆமா
இல்லையா பின்ன? என்றார்.

கடந்த வாரம் அதிகாலை குறுஞ்செய்தியை படித்தபோது மனது கனத்துபோனது.
அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஜெஸிலா ஒரு பதிவிட்டிருந்தார். நான்
இறந்து போனால் எந்தளவுக்கு வருத்தப்படுவீர்கள் என்று கேட்டிருந்தார். விளையாட்டு
போல சொன்னேன் அஞ்சு பத்து நிமிசம் வருத்தமா இருக்குங்க அப்புறம் சரியா
போயிடும் என்று. ஆனால் அதுபோல இல்லை என்பதை உணர்ந்தேன்.

அபிஅப்பா போன் செய்து ஆசிப்பின் தொலைபேசி எண் கொடுத்தார். எந்த
தொனியில் பேசுவது என்று யோசித்து யோசித்து பார்த்து விட்டுவிட்டேன். எவ்வளவு யோசித்தும் நாடகபாணி ஆறுதல் வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன.
மட்டுமில்லாமல் நான் ஆறுதல் கூறி தேற்றும் நிலை அவருக்கல்ல என்று
நினைத்தேன்.

நல்ல பேச்சாளர், சிந்தனையாளர், நகைச்சுவை உணர்வுள்ளவர் தானாகவே இந்த
சோகத்திலிருந்து மீண்டு வருவார் என்று தெரியும்.

இரண்டு நாட்களுக்கு முன் மீண்டு(ம்) வருகிறேன் என்ற அவர் பதிவை பார்த்ததும்
மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆச்சரியப்படவில்லை.

*********************************************

அமீரகத்தில் இருக்கும் பதிவர்களுக்கு போரடித்தால் உடனே அய்யனாருக்கு போன்
செய்து கலாய்ப்பது வழக்கம். ரொம்ப போர் அடிக்கவே போன் செய்தேன்.

என்னய்யா சாயந்திரமாச்சின்னா கட்டிங் போடாம கைநடுங்கறதா கேள்விப்பட்டேன்
உண்மையா?

ஆமாய்யா இப்பலாம் வியாக்கிழமையாச்சுன்னா பனோரமா ராதிகாவ பாக்கலன்னா
ரத்தம் சூடாகிபோகுது.

ரொம்ப முத்திப்போச்சு சீக்கிரம் டிக்கெட்ட போட்டு நல்ல பீஸா பாத்து கல்யாணம் பண்ணிக்கறதுதான் நல்லது இல்லன்னா வேற மாதிரி ஆகிபோகும் பாத்துக்குங்க.

நாமள்லாம் ரிசர்வேஷன்பா. எவ்வளவு ஆட்டம் போட்டாலும் ஊர்ல ஒரு பீஸ்
நமக்காக ரிசர்வ் பண்ணி வச்சிருக்காங்க. தானாக முளைக்கும் கொம்புகளுக்காக
காத்திருப்பதை தவிர வேறொன்றும் இல்லை.

தம்பி ஒர் சந்தேகம் கேட்டா சொல்லுவியா?

நீ கேளு சாமி தெரிஞ்சா சொல்றேன். தெரிலன்னா லைன் சரியில்லன்னு கட் பண்றேன்,

நான் எழுதற எல்லா பதிவுகளும் பூங்காவில வந்திடுது. ஏன் தமிழ்மண நிர்வாகம்
என்னோட பதிவுகளுக்கு சிலபல டாலர்கள பரிசளிக்க கூடாது?.

தோ பார்றா... இது வேறயா நான் தமிழ்மண நிர்வாகிய பாத்தேன்னா இது குறித்து
பேசுகிறேன் என்று எஸ்கேப் ஆனேன். :-)

ஏதோ நல்லா இருந்தா சரிதான்.

**********************************************

கடந்த வாரம் அதி அற்புதமான கேள்வி ஒன்றை நம் குசும்பன் அவர்கள் கேட்டார்
(ஜெஸிலா வேண்டுகோளுக்கிணங்க குசும்பர் என்றே மரியாதையாக அழைப்போம்)
அதாவது குசும்பர் அவர்கள் கேட்ட கேள்வி "உலகிலேயே மிக விலை மதிக்க முடியாத
வைரம் எங்கே இருக்கிறதென ஸ்டேட்டஸ் மெசேஜில் கேள்வி எழுப்பி இருந்தார்.

நான் சொன்னேன். "உனக்குள்ளே வைரங்கள் இருக்கு அதை வெளியே தேடாதே" என்று.

என்ன புரிந்து கொண்டாரோ தெரியவில்லை."கருமம் புடிச்சவன்யா நீ" என்று ஓடிவிட்டார்.

**********************************************

கம்பெனியால் ஒதுக்கப்பட்ட அறையொன்றில் நானும் பங்களாதேஷை சேர்ந்த ஒரு
செக்யூரிடி ஆபிசரும் தங்கி இருக்கிறோம். ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமை நாளிலும்
ஏதோவொரு காரணம் சொல்லி அறையிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம்.

ஏனென்றால் ஒரு பியரை குடித்துவிட்டு அய்யனாருக்கும் மேலாக உளருவது அவன்
வழக்கம் அதிலிருந்து எஸ்கேப் ஆகவே வெள்ளிக்கிழமை எங்காவது வெளியில் சென்று
விடுவது வழக்கம். இந்த வாரம் எங்கு செல்லவும் விருப்பம் இல்லாததால்
அறையிலேயே இருந்தேன்.

மதிய சாப்பாட்டுக்கு முன் ஒரு பியரை குடித்து முடித்திருந்தான். (கடைசி வரை
அவ்ளோதான் குடித்திருந்தான் என்பது வேறு விஷயம்). : - )

kathir "I am very soft one beer kick me lot" என்று போதையில் உளர ஆரம்பித்தான்.
எலேய் இதுக்குதாண்டா நான் ரூம்லயே தங்குறதில்ல என்று சொல்லாமல் அவனிடம்
பேச ஆரம்பித்தேன்.

எங்க ஒரு பியர் குடு குடிச்சிதான் பாக்காலாம் எவ்வளவு போதை வருதுன்னு
பாப்போம் என்று அவனிடம் இருந்து ஒவ்வொன்றாக வாங்கி பேசிக்கொண்டே
முடித்து விட்டேன்.

பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு குடித்த போதையனைத்தும் இறங்கிவிட்டது.

மவனே இனிமே ஒரு பியருக்கெல்லாம் ஆட்டம் போட்டேன்னு வச்சிக்க இதுதாண்டி
நடக்கும்னு சொல்றதுக்கு முன்னாடியே ஆள் ப்ளாட் ஆயிட்டான்.

*********************************************
கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக பாவனா பெயரில் மெயிலும், மற்றுமொரு பதிவர்
பாவனா எனக்கு ராக்கி அனுப்புவது போலவும் மெயில் அனுப்பி இருந்தார்கள்.
அவர்களுக்கு எல்லாம் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உலகத்தில் யார் வேண்டுமானாலும் எனக்கு அக்கா, தங்கச்சி ஆகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால்
பாவனாவுக்கு மாத்திரம் அந்த உரிமை கிடையாது என்பதனை அவர்களுக்கு
சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

சொல்லிக்கொள்ளும்படியாக வேறொன்றும் அதிசயமாக கடந்தவாரத்தில் நிகழ்ந்து
விடவில்லை அதனால்தான் இந்த மேலதிக சேர்ப்புகள்.

31 comments:

அபி அப்பா said...

நல்லா தான்யா எழுதற தம்பி!விஷயம் ஒன்னும் கிடைக்கலைன்னா இப்புடி கூட எழுதலாமோ:-))

வெற்றி said...

தம்பி,

/* இரண்டு நாட்களுக்கு முன் மீண்டு(ம்) வருகிறேன் என்ற அவர் பதிவை பார்த்ததும் மிகவும்
சந்தோஷப்பட்டேன். */

உண்மைதான். அவரைத் தமிழ்மணத்தில் பார்த்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

/* நான் எழுதற எல்லா பதிவுகளும் பூங்காவில வந்திடுது. ஏன் தமிழ்மண நிர்வாகம் என்னோட
பதிவுகளுக்கு சிலபல டாலர்கள பரிசளிக்க கூடாது?. */

:-))


/* மவனே இனிமே ஒரு பியருக்கெல்லாம் ஆட்டம் போட்டேன்னு வச்சிக்க இதுதாண்டி
நடக்கும்னு சொல்றதுக்கு முன்னாடியே ஆள் ப்ளாட் ஆயிட்டான்.*/

:-))

Ayyanar Viswanath said...

ஹி..ஹி..இதே மாதிரி நானும் ஒண்ணு எழுதிட்டிருக்கன்யா

சாயங்காலமா போடுரேன்

கதிர் said...

//நல்லா தான்யா எழுதற தம்பி!விஷயம் ஒன்னும் கிடைக்கலைன்னா இப்புடி கூட எழுதலாமோ:-))//

வாங்க மொதலி!
ஒங்க கமெண்ட பாத்தா பதிவை படிச்சிட்ட மாதிரி தெரியுதே!! அப்ப இதுக்கு முன்னாடி எழுதின பதிவுகள்ல விஷயம் இருந்துச்சா?

நான் எழுறதுல விஷயம் எதாச்சும் இருக்கும்னு தேடி வந்திங்கன்னா.

சாரி மன்னிச்சிடுங்க :)

கதிர் said...

வாங்க வெற்றி!

//உண்மைதான். அவரைத் தமிழ்மணத்தில் பார்த்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி//

எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்.

கதிர் said...

//ஹி..ஹி..இதே மாதிரி நானும் ஒண்ணு எழுதிட்டிருக்கன்யா//

வேற மாதிரி எழுதுங்க. காபி, பேஸ்ட் பண்ணா நல்லா இருக்காது.

//சாயங்காலமா போடுரேன் //

நீங்க சாயங்காலம் என்ன போடுவீங்கன்னு எனக்கு தெரியும். :))
எதுக்கும் ரெண்டு பெக் கம்மியாவே போடுங்க சாமி.

ராஜ நடராஜன் said...

கொடுத்து வச்ச பங்களாதேசக்காரர்.இங்க பக்கத்து வீட்டுல(குவைத்) வந்து பார்க்கனும் அவங்க சேட்டன் கடை டீ குடிக்கவேப் பையை தேடுறதை.

ALIF AHAMED said...

கலக்க்கிட்டீங்க

கதிர் said...

நன்றி நட்டு.

யோவ் மின்னல்!

இந்த கலக்கிட்டிங்க, ரிப்பீட்டேய், நல்ல பதிவு, அருமை, இந்தமாதிரி டெம்ப்ளேட் கமெண்ட் போடறவங்களுக்கெல்லாம் அபராதம் போடனும்யா. :(

Unknown said...

//ஆமாய்யா முன்னால நூறு வண்டி பின்னால நூறு வண்டி நடுவில நானு இப்டி
போனா பேரணின்னுதான்யா சொல்லணும்.//
இந்தப் பேரணியில தூக்கம் வர மாதிரி இருந்தா தப்பிக்கத்தான் இந்த டெலிபோன் டெக்னிக்.
ஆசிப் அண்ணாச்சி போட்டுக் கொடுத்துட்டேனா!?

Jazeela said...

நல்லவேளை நீங்களாவது இப்படி ஒரு தலைப்பை போட்டீங்களே.

கதிர் என் கூட பழம் தானே? :-) இரு கோடு தத்துவம் மாதிரி நம்ம வாக்குவாதம் ரொம்ப சின்ன கோடா போச்சிது பார்த்தீங்களா?

குசும்பன் said...

தம்பி நீ சொன்ன பதில சபையில் சொல்லிவிடுவேன், ஒழுங்கா இருந்துக்கோ!!!

Anonymous said...

கதிர் என் கூட பழம் தானே? :-)

இன்னா பழம் வாழை பழமா?
இல்ல பலா பழமா?

தம்பி வெள்ளை மணசுகாரன், நல்ல பிள்ளை கோச்சுக்க மாட்டார்.

குசும்பன் said...

"சொல்லிக்கொள்ளும்படியாக வேறொன்றும் அதிசயமாக கடந்தவாரத்தில் நிகழ்ந்து
விடவில்லை அதனால்தான் இந்த மேலதிக சேர்ப்புகள். "

தம்பி குளித்து கொண்டு இருக்கிறார் என்று நான் போன் செய்யும் பொழுது உங்கள் ரூம் மேட் சொன்னார், இதை விட என்ன அதிசயம் நடந்து விடவேண்டும்!!!

ramachandranusha(உஷா) said...

கம்பெனியால் ஒதுக்கப்பட்ட அறையொன்றில் நானும் பங்களாதேஷை சேர்ந்த ஒரு
செக்யூரிடி ஆபிசரும் தங்கி இருக்கிறோம்//

தம்பி, இம்புட்டு பெரிய ஆளா? கூடவே செக்யூரிட்டியாமில்லே :-))

அறிமுகம் செய்து வைத்தவர்களில் ஒருவர் "நானும் கவிஞர்தாங்க" என்று கைகுலுக்கினார்//
அடடா ;-))))))))))))

அபி அப்பா said...

// ஜெஸிலா said...
நல்லவேளை நீங்களாவது இப்படி ஒரு தலைப்பை போட்டீங்களே.

கதிர் என் கூட பழம் தானே? :-) இரு கோடு தத்துவம் மாதிரி நம்ம வாக்குவாதம் ரொம்ப சின்ன கோடா போச்சிது பார்த்தீங்களா? //

சண்டை ஏதாவது நடந்துச்சா! எனக்கு சொல்லிவிட்டுருந்தா நானும் வந்திருப்பேனே:-))

இராம்/Raam said...

கதிரு இதொரு நல்ல பதிவு'ன்னு சொன்னா கோவப்படுவீயா மேன்???? :)

கதிர் said...

வாங்க சுல்தான் நீங்களும் அண்ணாச்சி மாதிரிதானா? :)

வாங்க ஜெஸிலாக்கா!

பழமோ பழம்.

நல்லவேளை வந்துட்டிங்க. வரவே மாட்டிங்கன்னு நினைச்சு பயந்து
போயிட்டேன். :)

//நல்லவேளை நீங்களாவது இப்படி ஒரு தலைப்பை போட்டீங்களே. //

"நாங்களும் கவிஞர்தான்னு" வடிவேலு சொல்ற மாதிரி நினைச்சி பாருங்க. சிரிப்பு கன்னாபின்னானு வரும். :)

கதிர் said...

யோவ் குசும்பா!
பழக்கடையில வேலை பார்த்த அனுபவம் கூட இருக்குதா??

//தம்பி குளித்து கொண்டு இருக்கிறார் என்று நான் போன் செய்யும் பொழுது உங்கள் ரூம் மேட் சொன்னார், இதை விட என்ன அதிசயம் நடந்து விடவேண்டும்!!! //

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்யா குசும்ப்ஸ்.

அவனுக்கு தமிழே தெரியாது ராசா!

Anonymous said...

கம்பெனியால் ஒதுக்கப்பட்ட அறையொன்றில் நானும் பங்களாதேஷை சேர்ந்த ஒரு
செக்யூரிடி ஆபிசரும் தங்கி இருக்கிறோம்//

தம்பி, இம்புட்டு பெரிய ஆளா? கூடவே செக்யூரிட்டியாமில்லே // ithai padicha sirippa waruthu!!!!!!! nichayama security thedi yaar wanthalum thambithaan securitynnu ninaippanga....hahaha

Anonymous said...

:((

கோபிநாத் said...

\ அபி அப்பா said...
// ஜெஸிலா said...
நல்லவேளை நீங்களாவது இப்படி ஒரு தலைப்பை போட்டீங்களே.

கதிர் என் கூட பழம் தானே? :-) இரு கோடு தத்துவம் மாதிரி நம்ம வாக்குவாதம் ரொம்ப சின்ன கோடா போச்சிது பார்த்தீங்களா? //

சண்டை ஏதாவது நடந்துச்சா! எனக்கு சொல்லிவிட்டுருந்தா நானும் வந்திருப்பேனே:-)) \\

எதுக்கு வேடிக்கை பார்க்கவா ;-)

பாரதி தம்பி said...

என்னாது இது..? அய்யனார், நீங்க எல்லாரும் ஒரு டைப்பா எழுத கெளம்பிட்டீங்க..
அதுசரி.. இந்த சில்வியா குண்டலகேசி, கேத்ரீன் பழநியம்மாள்.. இவங்கல்லாம் யாருன்னு தெரியுமா..?

கதிர் said...

//தம்பி, இம்புட்டு பெரிய ஆளா? கூடவே செக்யூரிட்டியாமில்லே :-))//

வாங்க உஷாக்கா!

ஆமா நீங்க பாத்ததில்லல்ல, நான் கொஞ்சம் பெரிய ஆள்தான். :)

//அறிமுகம் செய்து வைத்தவர்களில் ஒருவர் "நானும் கவிஞர்தாங்க" என்று கைகுலுக்கினார்//
அடடா ;-)))))))))))) //

:))))))))))

கதிர் said...

//சண்டை ஏதாவது நடந்துச்சா! எனக்கு சொல்லிவிட்டுருந்தா நானும் வந்திருப்பேனே:-)) //

சண்டைன்னு ஆகிப்போச்சின்னா அங்க உங்களுக்கு வேலையே இருக்காது. கவலபடாதிங்க, அப்டி ஏதும் ஆச்சுன்னா உங்களுக்கு மட்டும் தகவல் வராது. :)

கதிர் said...

//கதிரு இதொரு நல்ல பதிவு'ன்னு சொன்னா கோவப்படுவீயா மேன்???? :) //

கோவப்பட மாட்டேன் ராயலு, ஏன்னா நான் நல்லவன்.

//ithai padicha sirippa waruthu!!!!!!! nichayama security thedi yaar wanthalum thambithaan securitynnu ninaippanga....hahaha//

நல்லா சிரிங்க. :)

கதிர் said...

//எதுக்கு வேடிக்கை பார்க்கவா ;-) //

நல்லா நச் னு சொல்லீட்ட கோப்ஸ்.

வாங்க ஆழியூரான்.

//என்னாது இது..? அய்யனார், நீங்க எல்லாரும் ஒரு டைப்பா எழுத கெளம்பிட்டீங்க..//

அய்யய்யோ என்னோட கம்பேர் பண்றதுக்கு எதுக்குங்க அய்ஸ சொல்றிங்க. அவர் அறிவு எங்க என்னோட சிற்றறிவு எங்க? ஏணி வச்சாலும் எட்டாதே.

//அதுசரி.. இந்த சில்வியா குண்டலகேசி, கேத்ரீன் பழநியம்மாள்.. இவங்கல்லாம் யாருன்னு தெரியுமா..?//

இவங்கள்லாம் அதிரடி கவுஜ எழுதறவங்கன்னு மட்டும் தெரியும்.

Anonymous said...

கதிர் என் கூட பழம் தானே? :-)
en koodavum thane

கப்பி | Kappi said...

பின்நவீனத்துவ படைப்புகளையிட்டு பின்நவீனத்திற்கே பெருமை சேர்க்கும் தென்னாட்டு ஜானக்சா..ச்சே பெர்னாட்சா தம்பி அண்ணன் வாழ்க வாழ்க!!

காட்டாறு said...

//நான் சொன்னேன். "உனக்குள்ளே வைரங்கள் இருக்கு அதை வெளியே தேடாதே" என்று.
//

தம்பி அண்ணாச்சீ... இப்பிடி தத்துவத்தை பிழியா பிழிஞ்சிட்டீகளே.... அழுவாச்சியா வந்திருச்சி....
;-)

வல்லிசிம்ஹன் said...

oththukkiROm.
neenga kavingar thaan.:))