எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, July 07, 2007

எனது ஈரான் பயணம் - 1

கடந்த வாரம் ஈரான் நாட்டின் தீவு ஒன்றுக்கு விசா மாற்றல் விஷயமாக
சென்றிருந்தேன். இரண்டுமாத விசிட் விசாவில் வருபவர்கள் மறுபடியும் வேறு விசா
மாற்ற வேண்டும் என்றால் நாட்டை விட்டு வெளியேறி பிறகு புதிய விசாவில் உள்
நுழைய வேண்டும். முன்னர் வேலை பார்த்த கம்பெனி விசாவில் இருந்து புதிய
கம்பெனி விசாவுக்கு மாறுவதால் நானும் செல்ல வேண்டியதாயிற்று. முன்னரே இரண்டு
மூன்று முறை சென்று வந்த அனுபவம் இருந்தாலும் அதே விமானத்தில் சென்று
திரும்பியதால் ஊர்சுற்ற நேரமில்லை. இந்த முறை அபுதாபி திரும்ப விமானம்
இல்லாததால் இரண்டு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை.

நான் கொண்டு சென்றிருந்த N95 மொபைல் கேமராவில் பிலிம் போட மறந்ததால்
கூகிளில் சிக்கிய படம் இங்கே. அதுவுமில்லாமல் கொளுத்தும் வெயில் வேறு
கவுந்தடித்து தூங்கவே நேரம் சரியாக இருந்தது.

Photo Sharing and Video Hosting at Photobucket

ஈரானிய மக்களில் பெரும்பாலோனோர்கு பார்சி தவிர வேறொரு மொழியும்
தெரியவில்லை. தமிழ்நாட்டில் யாருக்கும் இந்தி தெரியாதது போல. ஒன்றிரண்டு
பேர் சுமாராக ஆங்கிலம் பேசினார்கள். விமான நிலைய அதிகாரிகள் கூட சைகை
மொழிதான் பேசினார்கள். எங்கள் ஊர் பேருந்து நிலையத்தை விட சற்று பெரிதான
விமான நிலையம். அறுபது பேர் அமரக்கூடிய விமானம். விமானத்தில் ஏறியதும்
பாதி விலைக்கும் வாங்கி வந்த விமானமோ என்று எண்ணத்தோன்றியது. விமானம்
கிளம்ப ஆரம்பித்ததும் அவரவர் குலசாமியை கும்பிடுவது போல பாவத்துடன்
காணப்படுவதை அவர்கள் முகமே காட்டிக்கொடுத்தது.

உலகத்திலயே சேச்சிகள்தான் அழகு என்ற எண்ணத்தை ஈரானிய பணிப்பெண்ணை
பார்த்ததும் சற்றே தளர்த்த நேர்ந்தது (சேச்சிகள் மன்னிக்க). ஈரானிய பெண்கள்தான்
உலத்திலேயே மிக அழகு என்று யாரோ எங்கோ சொல்லக்கேட்ட ஞாபகம்
வந்துபோனது. அந்த பெண்ணிற்கே கூச்சம் வரும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று வில்லன் போல விமான பணிப்பையன் வந்துவிட்டான். (விமானத்துல
எல்லாம் எவண்டா பையன வேலைக்கு வைக்க சொன்னது?) விமானநிலையத்தில
இறங்கியதும் ஏதோ பணய கைதிகளை நடத்துவது போல விமான பணியாளர்கள் நடத்தினார்கள். அவர்கள் பேசும் மொழியின் தோரணைதான் அப்படியே தவிர
அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.

விமானநிலையத்தில் இறங்கியதும் நம் ஊர் ஆட்டோக்காரர்களை போல் அல்லாமல்
நாகரீகமாக எங்கள் ஹோட்டலில் தங்குங்கள் என்று கையை பிடித்து இழுத்தார்கள்.
எல்லோரும் வேனில் ஏறவே தயக்கத்துடன் கடைசி ஆளாக ஏறி ஹோட்டல் வந்ததும்
முதல் ஆளாக இறங்கினேன். நேராக பதிவு செய்யும் அலுவலகம் சென்றேன். அங்கேயும்
முக்காடிட்டு அழகான இரு பெண்கள் அவர்களிடம் அடுத்த விமானம் எப்போது என்று
விசாரித்தேன். அதெப்படி இவங்க மட்டும் மெழுகு மாதிரி முகத்தில மாசு மருவில்லாமல்
இருக்கிறார்கள் எந்த சோப்பு போட்டு குளிக்கறிங்கன்னு கேவலமான கேள்வி கூட கேட்க
நினைத்தேன்.

பாஸ்போர்ட்டை ஒப்படைத்தால்தான் ஹோட்டலில் அறையே தருவார்கள்.
அப்போதுதான் பாக்கெட்டை தடவி பார்த்தேன் காணவில்லை. அடங்கொய்யால
எவனோ அடிச்சிட்டான் போலருக்குன்னு மனசு பதறிப்போச்சு. பாஷை தெரியாத
ஊர்ல பாஸ்போர்ட்ட தொலச்சிட்ட எப்படிடா ஊருக்கு போவன்னு உள்ளுக்குள்ள
உதறல். கொஞ்சநேரம் கழிச்சி நிதானமா வந்த வழி போன வழி எல்லாம் தேடினேன்
நிதானமா உக்காந்து யோசிச்சேன். ஒருவேளை ரிசப்ஷன்ல தவற விட்டிருப்பனோன்னு
நேராக அங்கு சென்று அந்த ஈரானிய பெண்ணிடம் கேட்டேன். கேவலமான நமட்டு
சிரிப்புடன் எடுத்து நீட்டினாள். தேங்க்ஸ்னு சொல்லிகிட்டே திரும்பி பார்க்காமல்
வந்துவிட்டேன்.

தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே பல ஷாப்பிங் மால்கள் இருந்தது நான்
போன நேரம் கல்லா கட்டும் நேரமாதலால் அனைவரும் பூட்டிக்கொண்டு செல்ல
இருந்தனர். உலகத்துலயே சாயங்காலம் ஆறுமணிக்கு கல்லா கட்டுறவங்க இவங்களாதான் இருப்பாங்க. விலையெல்லாம் துபாயுடன் கம்பேர் பண்ணும்போது டபுள் டபுளா
விக்கறாங்க. ஒரு திராம்ஸ் கொடுத்தால் 2400 ஈரானிய ரியால் தருகிறார்கள். பெரும்பாலும்
அனைத்து கடைகளிலும் டாலர்,திராம்ஸ் கொடுத்தால் வாங்கிக்கொள்கிறார்கள். தரை
இறங்கியவுடன் லட்சாதிபதியாகும் ஆசையில் 100 திராம்ஸ் பணத்தை ஈரான் மதிப்பிற்கு
மாற்றிக்கொண்டேன். இரவு உணவுக்கு 28800 ரியால் செலவு செய்ததை இங்கு
பெருமையுடம் கூறிக்கொள்கிறேன்.

ஹோட்டலில் தொண்ணூரு சதவீதம் பேர் பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள்
பேசியது சைனா மக்கள் பேசுவது போல கொய்ங் மொய்ங் என்று இருந்தது. மீதி
பத்து சதவீத ஆட்கள் கேரளத்து சேட்டன்கள். இவனுங்க பண்ண சேட்டை கொஞ்சமா
நஞ்சமா... அறையில் இருந்த சேட்டன் ஒருவர் குஷ்புவுக்கு கோவில் கட்டிய கேணயர்கள்
இந்த தமிழ்காரனுங்கள் என்று கூறினார்

அட நன்னாறி நாய... ஷகிலாவுக்கு கட் அவுட் வச்சிட்டு ஏண்டா இதபேசறிங்க?
என்று சொன்னவுடன் அடக்கி வாசித்தார்.

எவ்வளவு நேரம்தான் இந்த சேட்டன்கள் கூட சண்டை போடறது. அப்படியே பீச் பக்கம்
போலாம்னு போனேன். நம்ம மெரினா பீச் மாதிரியே இருந்தது நிறைய விசைப்படகுகள்
கரையில் நிறுத்தியிருந்தார்கள் ஆனால் அதன் நிழலில் காக்காய் கூட உட்காராமல்
வெறிச்சோடி இருந்தது ஏமாற்றாம்தான்.

வரும்வழியில்தான் ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது.

தொடரும்.

பி.கு: தொடர் எழுதணும்லாம் எழுதலங்க. பதிவு கொஞ்சம் பெருசா இருந்தா
வாசிக்காம போயிடுவாங்கன்னுதான் இரண்டு பதிவா போடறேன்.

18 comments:

அபி அப்பா said...

கலக்குங்க தம்பி!

வடுவூர் குமார் said...

உ.தமிழன் பதிவை விட உங்கள் பதிவு பெரிதல்ல. :-)) அதையே நாங்க விடாமா கடைசி வரை படிக்கிறோம்.
உங்கூரில் அந்த மாதிரி என்றால் இங்கு ஜோஹர் பாரு (மலேசியா) க்கு பஸ்ஸிலேயே போய்விட்டு திரும்பலாம்.

மின்னுது மின்னல் said...

தம்பி எப்படி இப்படியெல்லாம்..

இருந்தாலும் சேச்சிய மட்டம் தட்டுனது கொஞ்சம் கூட நல்லா இல்ல...:)

இலவசக்கொத்தனார் said...

இப்படித்தான் இந்தோநேசியா போன பொழுது நான் கோடீஸ்வரனா இருந்தேன். :))

நெல்லை காந்த் said...

//
N95 மொபைல் கேமராவில் பிலிம் போட மறந்ததால்
//
Enna ithu.... :)

CVR said...

மொத பகுதியே கலை கட்டுது தம்பி அண்ணா!
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!! :-)

தம்பி said...

வாங்க அபிஅப்பா!
நாங்க கலக்கறது இருக்கட்டும் நீங்க பதிவ படிச்சிட்டு அப்புறம் கமெண்ட் போடுங்க.

வாங்க குமார்!
நீங்கலாம் படிக்கறிங்கன்னு நினைச்சாவே சந்தோஷம்.ஜோஹர்ல என்னோட தம்பி கூட இருக்கான் அடுத்த மாதம் இந்தியா போறான்.

எலேய் மின்னலு.

நான் எப்பவுமே சேச்சி ஆதரவாளன்னு உனக்கு தெரியாதா? ஏன் இப்படி சேம் சைட் கோல் போடற?

கொத்ஸ்,

நீங்க கோடீஸ்வரனா... அடுத்த தபா இந்தோனேசியா போயிட வேண்டியதுதான்.

நெல்லை காந்த்!

ஆமாங்க பிலிம் வாங்க மறந்துட்டேன்.

சீவீஆர்!
அடுத்த பகுதி இந்த மாதிரி காமெடியா இருக்காது. அது கொஞ்சம் அனுபவபூர்வமான உண்மை சம்பவம். நாளைக்கு படிச்சி பாருங்க.

ஜெஸிலா said...

பாஸ்போர்ட் காணாம போய் திரும்ப கிடைத்ததை ரொம்ப சர்வ சாதாரணமா எழுதி முடிச்சிட்டீங்க. என் பாஸ்போர்ட் சென்னையில் காணாம போயி கிட்டதட்ட ஒரு மாசம் நான் பட்டபாடு, அனுபவத்துல சொல்றேன்- பாஸ்போர்ட் ஜாக்கிரதை ;-)

கதிரவன் said...

நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க தம்பி.
அடுத்த பகுதியில ஆச்சரியமான சந்திப்பு - உங்க வலைப்பூ 'ரசிகரை'சந்திச்சீங்களா ? ;)

கப்பி பய said...

//அனுபவபூர்வமான உண்மை சம்பவம்//

அனுபவ சித்தர் ஆட்டத்தை ஆரம்பிக்கப் போறாரா!? :))

அய்யனார் said...

எலேய் ஏர்போர்ட்ல சிவாவ பரிதாபமா தவிக்க விட்டுட்டு வந்துட்டு பதிவு போடுறியா..கிர்ர்ர்

அண்ணன் said...

என்னமோ கொமெனி கூட பேச்சுவார்த்தை நடத்த ஈரான் போன மாதிரி ஓவர் பில்டப் கொடுக்கறிங்களே தம்பி.

Koothanalluran Shaboo said...

ஈரானியப் பெண்கள் நல்ல அழகானவர்கள் ஈரானியப் பெண்களின் முழு அழகையும் பார்க்க வேண்டுமெனில் துபாயில்தான் பார்க்க வேண்டும். ஈரானில் முக்காட்டோடு இருப்பவர்கள் துபாயில் அதை (து) திறந்து விடுவார்கள். ஈரானியப் பெண்களுக்கு நன்றாக உருது பேச வரும், உருது பிறந்ததே பார்சி மொழியிலிருந்துதான்.

வெற்றி said...

தம்பி,
நல்ல சுவாரசியமாக உங்களின் அனுபவத்தைச் சொல்லியுள்ளீர்கள்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தம்பி said...

ஜெஸீலா,

பாஸ்போர்ட் என்கிட்ட இல்லாம இருந்தது பத்தே நிமிஷந்தான். ஆனா அது இல்லாம அடுத்த நாட்கள் எப்படி போகும்னு பயம் கலந்த கற்பனை மட்டும் ரொம்ப நேரம் இருந்தது. மறக்கவே முடியாத சம்பவம். நீங்க என்ன விட ரொம்ப கேர்லஸ் போல :).நன்றி கதிரவன்.

சாதாரணமான ஆள்தான். என்னை போலவே.

//அனுபவ சித்தர் ஆட்டத்தை ஆரம்பிக்கப் போறாரா!? :)) //

கப்பி துள்ளல் விமர்சன் கர்த்தாவே. நான் எங்கய்யா ஆட்டம் போடறேன்.

அய்யனார்!

பச்சதண்ணி குடிச்சாவே பல்பு காட்டற ஆள் நீங்க. சிவா எல்லாம் தாங்குமா?
அபி அப்பாவுக்கே தாங்கல...

தம்பி said...

//அண்ணன் said...
என்னமோ கொமெனி கூட பேச்சுவார்த்தை நடத்த ஈரான் போன மாதிரி ஓவர் பில்டப் கொடுக்கறிங்களே தம்பி.//

நாலு பேராச்சும் வந்து படிக்க வேணாமா அதுக்குதான். நீங்க கோச்சிக்காதிங்க அண்ணன்.

வாங்க கூத்தாநல்லூரான்,

ரொம்ப உன்னிப்பா கவனிச்சிருக்கிங்க போலருக்கு. நானும் கவனிச்சிருக்கேன் ஆனால் லெபனீஸ் பெண்களுக்கு ஈரானிய பெண்களுக்கு ஒரே மாதிரி உருவ அமைப்பு இருப்பதால் குழப்பமா இருக்கு.

நமக்கு எந்த நாடா இருந்தா என்ன...
நல்லா இருந்தா சரிதான்.

நன்றி.

வருக வெற்றி.
கருத்துக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இரான் ரொம்ப அழகு,நாட்டு மக்களும் செழிப்பா இருப்பாங்கனு கேள்விப் பட்டு இருக்கேன். இருந்தாலும் பாஸ்போர்ட் தொலைக்கும் அளவுக்கு கவனம் சிதறிப் போச்சே
தம்பி...
:)))
நல்லாப் போகுது பயணம்.

Anonymous said...

ayyo ennayya ithu ?! "Iran payanam" appadinnu pottuttu, vimaana payanaththai varunichi ezhuthi irukeenga. thalaippai sariyaa choose pannunga saami