எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, January 17, 2007

மனசை கல்லாக்கிட்டு படத்தை பார்க்கவும்!!!

Photobucket - Video and Image Hosting

கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கோங்க மக்களே. அப்பனும் மகனும் பண்ற ரவுசு
தாங்க முடியல. ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ விக்கெட் எடுத்துட்டாங்க
போலருக்கு அதான் அக்தர் ரேஞ்சுக்கு அலப்பறைய குடுக்கறாங்க.

எவண்டா அந்த காஸ்ட்யூம் டிசைனரு?

அதுவும் நாந்தாங்ணா!!

நெனச்சேன் அதுவும் நீயாத்தான் இருப்பேன்னு.


Photobucket - Video and Image Hosting

ஏம்பா உனுக்கு இந்த வேண்டாத வேலை? எங்கிட்டாசும் வழுக்கி விழுந்தா
என்னத்துக்கு ஆவ?

பதமா எதமா பாட்டு படிச்சிட்டு போவியா... அத விட்டுட்டு
சிங் இன் தி ரெய்ன் பாட்டு நம்மளுக்கெல்லாம் தேவையா?

கேட்டா கனவு பாட்டுன்னு கதைய குடுப்பிங்க! நான் தெரியாமத்தான்
கேக்குறேன் தமிழ் சினிமாவில கனவு பாட்டு எத்தனை எடுத்திருப்பிங்க?
அது என்ன உங்களுக்கு கனவு வந்தா பாட்டு மட்ட்ட்ட்ட்டும் வருது?

இதுக்கு மேல எதுவும் நான் கேக்குற மாதிரி இல்ல!

46 comments:

Anonymous said...

தந்தை மகனுக்காற்றும் உதவியில் விளைந்த வீராசாமியா ?

டி.ஆரு நல்லாத்தானே இருந்தாரு !
என்ன ஆச்சு ? சிம்பு பையனால் வந்த வினை !
:)))

Anonymous said...

என்னத்தை கல்லாக்கிட்டு பார்க்க,

சும்மா கடுப்புகளை கிளப்பிக்கிட்டு.... :(

செந்தழல் ரவி said...

:)))))))))))))))))

தம்பி said...

வாங்க கோவி!

ரெண்டு பேரும் சேர்ந்து நம்மள படுத்தாம இருந்தா சரிதான்!

//டி.ஆரு நல்லாத்தானே இருந்தாரு !
என்ன ஆச்சு ? சிம்பு பையனால் வந்த வினை !
:))) //

அவரு சும்மாவே இருந்துட்டாலும்...
விட்டா கதைப்படி அந்த ட்ரீம் சாங் மட்டும் இல்லேன்னா படமே படுத்துக்கும்னு பேட்டியே குடுப்பாரு!!!

தம்பி said...

வாங்க ராயலு!

//சும்மா கடுப்புகளை கிளப்பிக்கிட்டு.... :( //

டிக்கிட்டி வெல கம்மியாச்சி தல!
போய் பாருங்க!

பி.கு: காசு குடுத்து கடுப்புகள வாங்கிட்டு வாங்க

நாடோடி said...

என்னத்த பாக்க. ரெண்டு யானைகுட்டி டூயட் பாடுரதையா?..
இராமநாராமணன மிஞ்சிட்டாங்க...

Anonymous said...

தம்பி, இந்த பழி பாவத்துக்கெல்லாம் நா ஆளாகமாட்டேன். இந்த சிலுவைய 'மாயவரத்தான்' சுமக்கட்டும். நா'மயிலாடுதுறையான்'னாக்கும்.

மிதக்கும் வெளி said...

/
அது என்ன உங்களுக்கு கனவு வந்தா பாட்டு மட்ட்ட்ட்ட்டும் வருது?

/


தல வேறெதை எதிர்பார்க்கிறீங்க? ஆமா, மும்தாஜ் பக்கத்தில யாரு இருக்கா? (என் கண்ணுக்கு மும்தாஜ் மட்டும்தான் தெரியுது, நாங்களெல்லாம் அர்ஜுனன் மாதிரியாக்கும்..)

தம்பி said...

செந்தழல் ரவி!

பல கோபங்கள் இருந்தாலும் இது மாதிரி படத்தை பாக்கும்போது சிரிப்பு அப்படியே பீறிகிட்டு வருது

அப்படிதான...

தம்பி said...

//என்னத்த பாக்க. ரெண்டு யானைகுட்டி டூயட் பாடுரதையா?..
இராமநாராமணன மிஞ்சிட்டாங்க... //

இப்பல்லாம் நடிகர், நடிகைகள வெச்சி படமெடுக்கறது சுலபமா போச்சு. மிருகங்கள வெச்சி படமெடுத்துட்டு அவனவன் அல்லல் படறான் படத்தை ரிலீஸ் பண்ண முடியாம.

இந்த ரகசியம் ஒருவேளை கரடிக்கு தெரிஞ்சி போச்சோ என்னவோ :))

தம்பி said...

///தம்பி, இந்த பழி பாவத்துக்கெல்லாம் நா ஆளாகமாட்டேன். இந்த சிலுவைய 'மாயவரத்தான்' சுமக்கட்டும். நா'மயிலாடுதுறையான்'னாக்கும்//

யாரு பாவம்? எதுக்கு சொமக்கணும்!

ஒண்ணுமே பிரில தலைவா!

Hariharan # 26491540 said...

வீரத்துக்கு ஜான்சி ராணி, மங்கம்மான்னு படிச்சுருக்கேன். பார்த்ததில்லை.

மும்தாஜின் வீரத்தை மெச்சுகிறேன். கரடியப் பாத்துக் கண்கலங்கி பயப்படாம நடனமாடும் மும்தாஜின் வீரத்தினை மெச்சுங்க தம்பி!

கவுண்டமணி மாதிரி யானைக்கூட்டம் ரிட்டர்னாகி டான்ஸ் வேற ஆடுதுங்க... தியேட்டர் தாங்குமா?
ரசிகர்களின் (?!) மனோதிடத்துக்கு இது ஒரு சவால்!

எக்ஸாட்சிஸ்ட், ஓமன் படத்தைத் தனியாப் பார்க்க பயப்படணும்.. வீராச்சாமியைக் கூட்டமாப் பாத்த்தாலும் பயம் விடாது :-))

தம்பி said...

//தல வேறெதை எதிர்பார்க்கிறீங்க? ஆமா, மும்தாஜ் பக்கத்தில யாரு இருக்கா? (என் கண்ணுக்கு மும்தாஜ் மட்டும்தான் தெரியுது, நாங்களெல்லாம் அர்ஜுனன் மாதிரியாக்கும்..) //

இதுல கூட வெளிக்குத்து!!

எனக்கு கரடியும் சேர்ந்து தெரிஞ்சதுதான்
பிரச்சினையே!

முதல் வருகைக்கு நன்றி மிதக்கும் வெளி!

இந்த பேர சொல்லும்ப்போதே மிதக்குற மாதிரி ஒரு பீலிங்.

அருமையான வார்த்தை!

Anonymous said...

ம்ம்ம்ம்... என்னாஆஆஆஆஆஆஆஆஆஆல தாஆஆஆஆஆங்க முடியலை...
(இதை நடிகர் சிவகுமார் பாணியில் படித்துக் கொள்ளவும்)

லொடுக்கு said...

தம்பி,

எப்படிப்பூ...இதெல்லாம்.... கூகுள்ல வலை வீசி தேடுவீங்களோ??

தம்பி
நீயொரு தங்கக்கம்பி
ஒரு கூட்டம் இருக்குது உன்னை நம்பி
இப்படியெல்லாம் போடாதே பதிவுகளை மனம் வெம்பி

இந்த கரடியின் குட்டியின் பெயர் சிம்பு
அவனை சும்மா இழுக்காதே வம்பு
(கொஞ்ச நாளைக்கு முன்னாடி சென்னையில் சிம்பு போட்ட சண்டை தெரியும்ல?)

Anonymous said...

தம்பி...
அண்ணன் டி.ஆர் ஒரு சிங்கம்
அவர் மேலே நீங்க பொறாமைப் பட்டா அது அசிங்கம்
நகைச் செய்ய வேணும் தங்கம்
அண்ணன் புகழுக்கு நீ செய்யறது பங்கம்...

ஆ டண்டணக்கா டணுக்குனக்கா... எங்க தம்பி இதை அப்படியே சொல்லுங்கப் பார்ப்போம்

தம்பி said...

வாங்க ஹரிஹரன்!

என்னவிட ஜாஸ்தி நகைச்சுவை+ கோவம் வருதுங்க உங்களுக்கு!

கலக்கல் கமெண்ட் !!

தம்பி said...

//ம்ம்ம்ம்... என்னாஆஆஆஆஆஆஆஆஆஆல தாஆஆஆஆஆங்க முடியலை...
(இதை நடிகர் சிவகுமார் பாணியில் படித்துக் கொள்ளவும்) //

வினுச்சக்ரவர்த்தி ஸ்டைல்ல படிச்சி பாருங்க ப்ரதீப்!

என்ன எழவுடா இது???
என்னாஆஆஆஆஆஆஆஆஆஆல தாஆஆஆஆஆங்க முடியலை...

G.Ragavan said...

அப்பாஆஆஆஆஆஆஆஆஆங்க்....இந்தப் படத்த பெங்களூர் பக்கமா விடாதீங்க...ஒங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கேக்குறேன். சமீப காலமா பாக்குற படங்கள்ளாம் பெருங்கொடுமையா இருக்குது. இந்தப் படத்தப் பாத்தாலே பயமாருக்கு.

தம்பி said...

//தம்பி,

எப்படிப்பூ...இதெல்லாம்.... கூகுள்ல வலை வீசி தேடுவீங்களோ??//

நெஞ்சில கை வெச்சி சொல்லுங்க வலைல சிக்குற ஆளா அவங்க ரெண்டு பேரும்??

இதெல்லாம் தினமலருல போட்டுருந்தாங்க! :))


//தம்பி
நீயொரு தங்கக்கம்பி
ஒரு கூட்டம் இருக்குது உன்னை நம்பி
இப்படியெல்லாம் போடாதே பதிவுகளை மனம் வெம்பி//

ஆஹா கவுஜ சூப்பரு..

Anonymous said...

/////தம்பி, இந்த பழி பாவத்துக்கெல்லாம் நா ஆளாகமாட்டேன். இந்த சிலுவைய 'மாயவரத்தான்' சுமக்கட்டும். நா'மயிலாடுதுறையான்'னாக்கும்//

யாரு பாவம்? எதுக்கு சொமக்கணும்!

ஒண்ணுமே பிரில தலைவா!//

அதாவது தம்பி, டிஆரு நம்ம ஊருதான். அது அல்லாருக்கும் தெரியும் தான. அதனால படத்த பாத்துட்டு பொத்தாம் பொதுவா மாயவரத்து சிங்கம் எல்லாத்தையும் திட்டி பழி போடக்கூடாதுல்ல...அதனாலதான் (ஊர்)பாசக்கார தம்பி'மாயவரத்தான்' பக்கமா லைட்டா திருப்பிவுட்டேன். இப்ப பிரியுதா?

தம்பி said...

//அப்பாஆஆஆஆஆஆஆஆஆங்க்....இந்தப் படத்த பெங்களூர் பக்கமா விடாதீங்க...ஒங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கேக்குறேன். சமீப காலமா பாக்குற படங்கள்ளாம் பெருங்கொடுமையா இருக்குது. இந்தப் படத்தப் பாத்தாலே பயமாருக்கு.
//

இதுக்கே பயந்தா எப்படி? நீங்க எல்லாம் ஒண்ணு சேந்து இந்த படத்தை துபாய் பக்கம் வரவிடாம செய்யிங்க தலைவா!

படம் பார்க்கறவங்க எல்லாம் நொந்தசாமி ஆகிடுவாங்க போலருக்கு!

கப்பி பய said...

இதுக்கு :)))தா :(((தானே தெரிலியேப்பா!!

நாமக்கல் சிபி said...

எங்க தலய இவ்வளவு கேவலப்படுத்தக்கூடாது!!!

கட்டிப்புடி கட்டிப்படிடா பாட்டுக்கு போட்டியா இந்த பாட்டு இருக்கும்னு ஆல் வேல்ட் விஜய டீ.ஆர் ரசிகர் மன்றத்துல அறிக்கை விட்டுருக்காங்க...

Sivabalan said...

தம்பி,

என்னத்த சொல்ல.. Ha Ha Ha...

நாமக்கல் சிபி said...

:)

தம்பி said...

//இதுக்கு :)))தா :(((தானே தெரிலியேப்பா!! //

அவ்ளோ பெரிய உருவங்களே தெரியலயா?
அய்ய்ய்யோ பாவம்..

தம்பி said...

//எங்க தலய இவ்வளவு கேவலப்படுத்தக்கூடாது!!!//

அங்கதான் வெட்டி பிரச்சினையே இருக்கு! தல எது உடம்பு எதுன்னு தெரியலயே!

//கட்டிப்புடி கட்டிப்படிடா பாட்டுக்கு போட்டியா இந்த பாட்டு இருக்கும்னு ஆல் வேல்ட் விஜய டீ.ஆர் ரசிகர் மன்றத்துல அறிக்கை விட்டுருக்காங்க...//

ல.தி.மு.க விலயே எத்தனை பேரு இருக்காங்கன்னு தெரியல, இதுல ஆல் வேல்ட் வேறயா?

தம்பி said...

தம்பி,

என்னத்த சொல்ல.. Ha Ha Ha...

எதுவும் சொல்ல முடியாதுங்கறிங்க! ம்ம் என்னத்த பண்றது...


நாமக்கல் சிபி said...
:)

:))!

மிதக்கும் வெளி said...

/இந்த பேர சொல்லும்ப்போதே மிதக்குற மாதிரி ஒரு பீலிங்./


இருக்கும்பா இருக்கும்

கோபிநாத் said...

தம்பி....
வயிறு வலிக்குதுப்ப.. உங்காந்து யோசிப்பீங்களோ !!!!

கோபிநாத் said...

தம்பி....
வயிறு வலிக்குதுப்ப.. உங்காந்து யோசிப்பீங்களோ !!!!

லொடுக்கு said...

ஆமா தம்பி... நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?

Anonymous said...

TR ரொம்ப இளசுதான் பொங்க!

தம்பி said...

//தம்பி....
வயிறு வலிக்குதுப்ப.. உங்காந்து யோசிப்பீங்களோ !!!! //

அப்போ உக்காந்து யோசிச்சா வயிறு வரும் அப்படிதான கோபி??

தம்பி said...

//ஆமா தம்பி... நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா? //

நா நயமானவன்.

வாங்க முகில்!
அவரு பொங்கறதினாலதான் பிரச்சினையே!!

கார்த்திக் பிரபு said...

nalla iruku ippo than padichane..

சிவமுருகன் said...

கடவுள் ஏன் கல்லானார்? மனம் கல்லாய் போன மனிதர்களாலே!!! :(

நல்ல விமர்சனம்

Anonymous said...

தம்பிக்கு பொறாமைன்னு அவரு பேட்டி குடுக்காத வரைக்கும் சரிதான் ;)

துளசி கோபால் said...

எதோ 'மிருகவதை'யோன்னு நினைச்சுப் பயந்துக்கிட்டே வந்தேன்.
கடைசியில் பார்த்தா........

மனிதவதை:-)

தம்பி said...

//தம்பிக்கு பொறாமைன்னு அவரு பேட்டி குடுக்காத வரைக்கும் சரிதான் ;) //

நான் பொறாமை படுற அளவுக்கு அசினோ, பூஜாவோ நடிக்கலையே! :))

தம்பி said...

//எதோ 'மிருகவதை'யோன்னு நினைச்சுப் பயந்துக்கிட்டே வந்தேன்.
கடைசியில் பார்த்தா........

மனிதவதை:-)//

படிச்சதும் சிரிச்சிட்டேன் :))

இந்த படத்தை பாக்குறதுக்கும் ஒரு தில் வேணும்ல. அதான் அப்படி சொன்னேன்.

நன்றிங்க டீச்சர்!

SurveySan said...

:) சூப்பர்.

டி.ஆர் சன் டி.வி காமெடி டைம்ல ஒரு நாள் வந்தாரு. பாத்தீங்களா?

அத பாத்து பத்து நாள் சிரிச்சோம். சூப்பர் காமெடி!

சினேகிதி said...

Netru intha padathinta trailer parthen.enatha solrathu?? kurtha ellam podu kondu.hmm mums vadiva irukira oru paadila.

\\என்னத்த பாக்க. ரெண்டு யானைகுட்டி டூயட் பாடுரதையா?..
இராமநாராமணன மிஞ்சிட்டாங்க... \\

:-) :-) :-)
yaru eluthina comment ithu.pear vasika mudiyala..enkaum intha pirachanai irunthichu ipa okay code venum enda sollunga.

தம்பி said...

//Netru intha padathinta trailer parthen.enatha solrathu?? kurtha ellam podu kondu.hmm mums vadiva irukira oru paadila.//

வாங்க சினேகிதி!

அட கொடுமையே! மும்தாஜ் வடிவா இருக்காங்களா னான் வடிவுக்கரசி மாதிரி இருக்காங்கன்னு சொல்றேன் :((

அந்த கமெண்ட போட்டது நம்ம நாடோடி அண்ணாச்சி.

பட காமெடியான ஆளு.

நன்றி சினேகிதியே!

ShRaj said...

how to wite in tamil ?
emai me on nshanmugaraj@gmail.com
nandri.