சினிமாக்களை பார்க்கும்போதும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு முழுவதுமாக
விலக சில நாட்கள் பிடிக்கும். இந்த உணர்வுகள் கதை, சினிமாக்களுக்கு
மட்டுமல்ல கவிதைகளுக்கும் உண்டு என்பது சில கவிதைகளை வாசிக்கும்
போது உணர முடியும். தற்செயலாக நகுலன் அவர்களின் கவிதை ஒன்றினை
ஆ.வியில் படித்தேன். படித்து முடித்த பிறகும் அதன் பாதிப்பு என்பது
என்னை விட்டு விலக வெகு நேரமாயிற்று.
பொதுவாக கவிதை என்பது எது என்ற புரிதலே இல்லாமல் நானும் சில
கவிதைகள் எழுதியிருக்கிறேன். பின்னாளில் நானே வாசிக்கும்போது அபத்தம்
போல தோன்றுவது மறுக்க முடியாத ஒன்று.
"நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த
வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது"
தன்னை பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும்போது, அவர்களிடம்
நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டுகோள் இதுதான். தமிழ் இலக்கியப்
பரப்பில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான இவர் தற்போது வசிப்பது திருவனந்த
புரத்தில், தனிமையில் வசிக்கிறார்.
தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில்
எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை.தற்போது எழுதுவதை முற்றிலும்
நிறுத்திவிட்டார். தற்போது நகுலனின் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத்
தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.
இனி அவரின் கவிதைகள்!
எந்தப் புத்தகத்தை
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது
அதை மீறி ஒன்றுமில்லை!
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்!
என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!
யாருமில்லா பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!
நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!
உன்னையன்றி
உனக்கு வெறு யாருண்டு?
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!
வந்தவன் கேட்டான்
"என்னைத் தெரியுமா?"
"தெரியவில்லையே"
என்றேன்.
"உன்னைத் தெரியுமா"?
என்று கேட்டான்.
"தெரியவில்லையே"
என்றேன்.
"பின் என்னதான் தெரியும்"
என்றான்.
"உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்"
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கு
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்
ற
ன!
இதிலும் சில கவிதைகள் புரியாததுபோல தோன்றினாலும் எல்லாமே ஆழமான
அர்த்தங்கள் கொண்டவை.
நன்றி: ஆனந்த விகடன்
11 comments:
தம்பி,
இத வேற யாரோ தொகுத்திருந்தாங்க.
மோகன்தாசுன்னு நினைக்கிறேன்..
இன்னொருமுறை வாசிக்கக்கிடைத்ததில் மகிழ்ச்சி.
தம்பி, மொதல்ல அட்டண்டன்ஸ், பின்ன மீதிய பாத்துக்கலாம்.
நன்றி சிறில்!
நன்றிங்க தொல்.குமார்
அன்பு கதிர்
அருமையான கவிதைகள்,...
\\படித்து முடித்த பிறகும் அதன் பாதிப்பு என்பது
என்னை விட்டு விலக வெகு நேரமாயிற்று.\\
இப்போது எனக்கும்...நன்றி நண்பா..
நன்றி தம்பி...
உங்களுக்குமா கோபி! சந்தோஷம்
நன்றி தூயா!
சிறுவார்த்தைகளில்
பெரும் உண்மைகளைச் சொல்லும் கவிதைகள்!
விகடனிலேயே வாசித்திருக்கிறேன். மற்றுமொருமுறை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி!
தம்பி,
thanks for sharing nagulan's kavithaihaL. he is one of my favourite writer/poet too.
incase you are interested.
நகுலன் நாவல்கள் - சன்னாசி எழுதியது - http://dystocia.weblogs.us/archives/182
பாம்பாட்டி சித்தன் - http://thaaragai.wordpress.com/2006/05/05/pudhukkavithai2/
va.manikandan - http://pesalaam.blogspot.com/2005/09/blog-post_04.html
es.Ramakrishnan - http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=24&fldrID=1
-மதி
நன்றி அருள், கவிதைகளை அதிகம் விரும்பாத நான் மிகவும் வியந்துபோனேன் அவற்றை படித்த போது. வாழ்வியல் தத்துவங்கள் இரண்டு மூன்று வரிகளில் சொல்லமுடியுமென்பதை.
நன்றி மதி கந்தசாமி அவர்களே!
மிகவும் உபயோகமான சுட்டிகளுக்கு மிக்க நன்றி. நகுலனின் மீதான என் புரிதலை மேம்படுத்த உதவியது.
மற்றுமொரு நன்றி!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
//என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்! //
எனக்கு ரொம்ப பிடித்திருந்தது . பதிவிற்க்கு நன்றி
தன்னை தன்னிலிருந்து விலக்கிப் பார்த்தல் ,தன் சுயம் அழித்தல், தானற்றுப் போதல், புறவுலகு என்ற சித்திரத்தை மறுதளித்தல்.(அ) அதனுடன் கரைந்து விடுதல்இவை நகுலனின் கவிதைகளில் திரும்ப திரும்பத் தென் படுகின்றன. தன் உடலை கழற்றிகோட் ஸ்டான்டில் தொங்க விட்டப் பின் நிகழும் பெரும் உரையாடல்.இங்கு உடல் மெய்ப்பொருள் உயிர் அகப்பொருள் இதனுடே கவி நிகழ்த்தும் படர்க்கையின் மூன்றாமிடத்து உவன்
அந்த உவனே நவீனன் (அ)நகுலன் .....
பார்க்க ப்ரியம் பக்கத்தில்
Post a Comment