சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா விமர்சனம் பண்ற அளவுக்கு நம்ம பொதுஅறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு பிடிச்சது. அதுவும் ஆங்கில படம்னாவே ரெண்டு அடி தள்ளியே நிப்பேன். நேத்திக்கு என்னவோ ஆங்கிலப் படம் பாக்கணும்னு வெறி வந்துடுச்சி சரி பாத்துருவோம்னு பக்கத்துல இருக்குற டப்பா டி.வி.டிகடைக்கு போனேன். என் அறிவுக்கு எட்டிய வரைக்கும் ஆங்கிலத்துல தமிழ்ல டப் செய்யப்பட்ட படங்கள்தான் ஆங்கிலப்படங்கள்னு சொல்வேன். அதனால நம்ம விஷயத்துல ஆங்கிலப்படம்னாவே அனகோண்டா, ஜுராசிக்பார்க் இந்த லெவல்தான். கடைக்காரர்கிட்டயே கேட்டேன் எதுனா நல்லா ரசிச்சி பாக்கற மாதிரி படம் இருந்தா குடுங்கண்ணேன்னு அவரும் அருமையா இருக்கும்னு ஒரு படத்தை கிளி மாதிரி கவ்வி போட்டாரு. THREE BURIALSனு ஒரு படம். படம் பார்த்து முடிக்கற வரைக்கும் அந்த படத்தின் தலைப்பு கூட அர்த்தம் தெரியாது எனக்கு என்பதுதான் உண்மை.
வழக்கம்போல அமெரிக்காவில நடக்கற கதைதான். வறுமையின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க மெக்ஸிகோ நாட்டிலிருந்து மலைகள், பாலைவனங்கள் வழியாக பயணம் செய்து அமெரிக்காவிற்கு ஊடுருவும் மெக்ஸிகோ மக்கள். அதை தடுக்கும் அதிகாரிகள் அதையும் மீறி வருபவர்கள் என இதுதான் கதை. ஆனால் வித்யாசமாக சொல்லி இருக்கிறார்கள். படத்தில் யார் கதாநாயகன் என்பது தெரியவில்லை. எனக்கு தெரிந்து படத்தின் இயக்குனரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் டாம்மி லீ ஜோன்ஸ் என்பவரைத்தான் சொல்வேன். ஒவ்வொரு நொடியும் கவனமாக பார்த்தால்தான் புரியும் அவ்வளவு நுணுக்கமான கதை. படத்தில் நிறைய ஸ்பானிஷ் வசனங்கள் வருகின்றன. எனக்கு ஸ்பானிஷ் தெரியாது ஆனால் இந்த அலைவரிசையில் (ரேடியோ) வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்பேன். இனிமையான மொழி அது. என்று கண்தெரியாத ஒரு பெரியவர் சொல்வார். என்னை கவர்ந்த இரண்டாவது கதாபாத்திரம் அவருடையதுதான்.
மெல்கியுடெஸ் எஸ்ட்ரடா(Melquiades Estrada) என்னும் மெக்சிகோ இளைஞன் எல்லையை தாண்டி டெக்ஸாஸ் நகரத்திற்கு வருகிறான். நகரம் என்றால் ஒதுக்கு புறமான கிராமம், அங்கு பண்ணை வைத்திருக்கிறார் ஜோன்ஸ் அவரிடம் ஏதாவது வேலை கேட்கிறார். என்ன வேலை தெரியும் உனக்கு? எனக்கு மாடு மேய்க்க தெரியும் (கவ்பாய்) என்று சொல்கிறார். முதல் பார்வையிலேயே இருவருக்கும் சினேகம் ஏற்பட்டுவிடுகிறது. எஸ்ட்ரடாவை தன்னுடனே வைத்துக்கொள்கிறார் ஜோன்ஸ். எஸ்ட்ரடா தன் குடும்பம் பற்றியும், வீட்டை பற்றியும் விவரிக்கும் இடத்தில் நெகிழ்கிறார் ஜோன்ஸ். மிக்க மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் கதையில் குண்டு போடுகிறார் பெர்ரி பெப்பர் (Barry Pepper).
ஒருமுறை தூரத்தில் உள்ள பண்ணையை பார்க்கசெல்லும் எஸ்ட்ரடா ஒரு நரியை சுடுகிறார். தன்னைத்தான் சுடுகிறார்கள் என்று பெப்பர் எஸ்ட்ரடாவை சுட்டு விடுகிறார். அதை மறைத்தும் விடுகிறார். இதை கண்டுபிடித்து அந்த காவலதிகாரியான பெப்பரை பழி வாங்குகிறார் ஜோன்ஸ் இதுதான் கதை என்றாலும் அதை திறம்பட சொன்னதுதான் படத்தின் சிறப்பு. முன்பொரு முறை நான் இறந்தால் என்னை என் வீட்டில் அந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் புதைக்கும்படி விருப்பம் தெரிவித்ததை நினைவில் கொண்டு அதை நிறைவேற்ற அதே போலிஸ் அதிகாரியை கடத்தி வந்து எஸ்ட்ரடாவை புதைத்த இடத்தில் இருந்து பிண்த்தை தோண்டி எடுத்து அதை அவனையே சுமக்க வைத்து குதிரையில் மெக்சிகோ புறப்படுகிறார் ஜோன்ஸ். இந்த பயணத்தில் ஜோன்ஸிடமிருந்து தப்பிக்க பெப்பர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இந்த நீண்ட நெடும்பயணத்தில் பல அனுபவங்கள் நமக்கே ஏற்படுவது போல இருக்கிறது.
வழியில் பல இன்னல்களை இருவருமே சந்திகிறார்கள். மலைகள், பாலைவனங்கள் பல கடந்து பிணத்தை எடுத்து செல்வதென்பது சாதாரண விஷயமில்லை. எஸ்ட்ரடாவின் ஆசைக்கிணங்க அதை செய்கிறார். படத்தில் இவரின் நடிப்பி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. மனுசன் கொஞ்சம் கூட அலட்டிக்கவே இல்லை இத்தனைக்கு இவரேதான் இயக்குனர். இந்த பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மெக்ஸிகோ மக்கள், கண் தெரியாத கிழவர், ஆற்றை கடக்கவும் விலாசத்தை கண்டுபிடிக்க உதவும் உள்ளூர்வாசியும்
நடிப்பில் மனதில் பதிகிறார்கள்.
பல இன்னல்களுக்கிடையில் எஸ்ட்ரடாவின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள் யாருமே இல்லாத மலைக்காட்டில் சுற்றுச்சுவர்கள் மட்டுமே உள்ள இடம்தான் அந்த வீடு. இந்த இடத்தில் புதைக்கவா இத்தனை கஷ்டப்பட்டு பிணத்தை வைத்துக்கொண்டு வந்தார்கள் என்று நினைக்கவே முடியவில்லை. அத்தனை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். பெப்பரின் கையாலேயே அந்த வீட்டை செப்பனிட வைத்து குழியும் பறித்து அதில் புதைக்கிறார்கள். எஸ்ட்ரடாவின் குடும்ப புகைப்படத்தை வைத்து மன்னிப்பு கேட்கச்சொல்லுகிறார் ஜோன்ஸ்.
தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பும் கேட்கிறார் பெப்பர்.
கேட்பதற்கு பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் படத்தில் பார்க்கும்போது மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
கடைசியில் கழுதையை தனக்கு எடுத்துக்கொண்டு குதிரையை பெப்பருக்கு அளித்து விட்டு அமெரிக்கா புறப்படுகிறார் ஜோன்ஸ். இத்துடன் கதை முடிகிறது. படத்தில் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்த்தால் மெக்சிகோ மலை வாழ் மக்களின் ஏழ்மை நிலையையும், எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் கண்மூடித்தனமாக அந்த மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் பற்றியும் தொட்டு சென்று உன்னதமான ஒரு நட்பின் பிரிவை சொல்லியிருக்கிறார்.
நான் படம் பார்த்து தெரிஞ்சிகிட்டது இவ்வளவுதான். படம் பார்த்தவங்க நான் எழுதினதுல குத்தங்குறை இருந்தா எடுத்து சொல்லுங்க. ஏன்னா எனக்கு புரிஞ்ச மாதிரிதான் எழுதி இருக்கிறேன்.
இதையெல்லாம் எழுதி முடிச்சி வாசிச்சா எனக்கே பொறுக்கல, என்னடா ஒரு நல்ல படத்தை இப்படி நாஸ்தி பண்ணி எழுதிட்டமோன்னு. என்ன செய்யிறது எல்லாம் அந்த கடைக்காரன சொல்லணும்!.
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Friday, December 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
ஓ..நீங்க சொல்றத பாத்தா படம் நல்லா இருக்கும் போலத் தெரியுதே தம்பி.. சீக்கிரம் பாத்துட்டு சொல்றேங்க
தம்பி என்னாச்சு உனக்கு???
ஹிந்தி படமெல்லாம் பாக்கறயா???
இரு நான் படிச்சிட்டு திரும்ப வறேன் :-)
நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்..
அருமை..
//ஓ..நீங்க சொல்றத பாத்தா படம் நல்லா இருக்கும் போலத் தெரியுதே தம்பி.. சீக்கிரம் பாத்துட்டு சொல்றேங்க//
நல்லா இருந்ததாலதான் எழுதினேன் கார்த்திக். வாய்ப்பு கிடைச்சா பாருங்க! ரொம்ப அருமையான படம்.
//ஹிந்தி படமெல்லாம் பாக்கறயா???
இரு நான் படிச்சிட்டு திரும்ப வறேன் :-)//
யோவ் வேலமெனக்கெட்டு உக்காந்து எழுதினா இந்திப்படம்னு நக்கலா பண்றே?
உன்னயெல்லாம்...
//நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்..
அருமை.//
உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க. நான் எழுதினது கூச நல்லா இருக்குன்னு சொல்றிங்களே!
வழக்கம்போல இதையும் காமெடியாவே எடுத்துக்கறேன். :))
மிக்க நன்றி!
தம்பி,
அருமையா சொல்லியிருக்க...
நீ சொல்றத பார்த்தா படம் பாக்கனும் போல இருக்கு... நானும் எப்படியாவது இந்த படம் பார்க்க முயற்சி செய்யறேன் :-)
தம்பி அருமையா, இயல்பா விமர்சனம் பண்ணியிருக்கீங்க! இதை நானும் என் நண்பனும் blockbuster கடையில் இரவல் வாங்கிப் பார்த்தோம்!
அருமையான கதை!
நம்மூரிலும் காசியில் கொண்டு போய் கரைப்பார்களே, இல்லையென்றால் இறுதி ஆசையாச் சொன்னார் என்பதற்காக சிரமம் பார்க்காது செய்வார்களே, அதைத் தான் நினைவுபடுத்துகிறது!
இந்தக் கதையில் ரெண்டு பெண் பாத்திரங்கள் வருவார்கள்! அதைப் பத்திச் சொல்லவே இல்லையே!
ஒரு பெண் பெப்பரின் மனைவி! அவள் தனிமை வாழ்க்கையை நல்லாப் படம்பிடிச்சிக் காட்டியிருப்பாங்க! இன்னொரு பெண்...வேண்டாம் விவகாரமானது...
சில சமயம் நீண்ட வசனங்கள் வரும்! மத்தபடி சிறப்பான கதை! அதை சிறப்பாவும் சொல்லி இருக்கீங்க!!
இப்படத்தை தமிழாக்க முடிந்தால் எப்படி இருக்கும்?
வாங்க கண்ணபிரான் அலுவலகத்துலருந்து தூங்கி எழுந்தாச்சா?:))
அந்த ரெண்டு பெண்களின் கதாபாத்திரம் வேண்டிய எழுதலாம்னு நினைச்சேன். கடைசில அவ்வளவு முக்கியமா படல. ஜோன்ஸ், எஸ்ட்ரடா, பெப்பர் ஆகியவர்களின் நடிப்பில் அவர்களை மறந்துவிட்டேன். அதான் உண்மை.
//இப்படத்தை தமிழாக்க முடிந்தால் எப்படி இருக்கும்? //
பாஸ்தாவை பானையில செஞ்சா நல்லா இருக்குமா? இல்ல கூழைத்தான் குக்கர்ல செஞ்சா நல்லா இருக்குமா?
அது மாதிரிதாங்க இதுவும். பார்ப்போம் அந்த அளவுக்கு திறமை நம்ம ஆட்களுக்கு வருதான்னு.
//பாஸ்தாவை பானையில செஞ்சா நல்லா இருக்குமா? இல்ல கூழைத்தான் குக்கர்ல செஞ்சா நல்லா இருக்குமா?//
என்னா நக்கலு??????
//பாஸ்தாவை பானையில செஞ்சா நல்லா இருக்குமா? இல்ல கூழைத்தான் குக்கர்ல செஞ்சா நல்லா இருக்குமா?//
என்னா நக்கலு??????
வாய்யா அனானி வரும்போதே திரிய கொளுத்திக்கிட்டு வர்றியே நியாயமா இது?
நல்லா இருப்பா! அம்புட்டுதேன் சொல்லுவேன்.
விமர்சனம் நல்லா வந்திருக்கு கதிரு...
//விமர்சனம் நல்லா வந்திருக்கு கதிரு...//
ஒத்துக்கறேன் ராம்!
சும்மா சொல்லணுமேன்னு சொல்லக்கூடாது. நிஜத்தை சொல்லுங்க எனக்கே எழுதின பிறகு பிடிக்கல. சரி இருந்தாலும் மெனெக்கெட்டு எழுதிட்டமோன்னு அப்படியே போட்டுட்டேன். இதுல இந்தி விமர்சனம் சூப்பர்னு வேற நக்கல் உடறாரு.
கொஞ்ச நாளைக்கி முன்னாடி copper canyon, chihuahua, Ciudad Juárez அப்படின்னு விக்கியில தேடிட்டு இருந்தேன். கதைக்களன் அந்த ஏரியா போல இருக்கு.
சமீபத்தில Blockbusterல DVDய பாத்த ஞாபகம். புதுப்படமோ?
ஆர்வத்த தூண்டி இருக்கீங்க. பாத்திடவேண்டியதுதான்.
//பெத்த ராயுடு said...
கொஞ்ச நாளைக்கி முன்னாடி copper canyon, chihuahua, Ciudad Juárez அப்படின்னு விக்கியில தேடிட்டு இருந்தேன். கதைக்களன் அந்த ஏரியா போல இருக்கு.
சமீபத்தில Blockbusterல DVDய பாத்த ஞாபகம். புதுப்படமோ?
ஆர்வத்த தூண்டி இருக்கீங்க. பாத்திடவேண்டியதுதான்//
நீங்க என்னெனமோ பேர் சொல்றிங்க ஒண்ணுமே புரியல. சமீபத்துல 2005ல வெளிவந்திருக்குன்னு நினக்கிறேன்.
கட்டாயமா வாய்ப்பு கிடைச்சா பாருங்க! ரொம்ப அருமையான படம்.
வருகைக்கு நன்றி பெத்த ராயுடு!!
பாட்டெல்லாம் எப்படி இருந்துச்சு? அதைப் பத்தி சொல்லவே இல்லை! :(
நானும் சில நாட்களுக்கு முன் இந்த படத்தைப் பார்த்தேன் தம்பி..எனக்கும் டிவிடி கடைக்காரர் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததுதான் :)
இந்த படத்துடைய வெற்றியாக நான் கருதுவது - படத்தினூடே நமக்கு இரு நேரெதிர் உணர்ச்சிகளை எழுப்பிச் செல்வது. பெப்பர் அடையும் துன்பங்களைப் பார்த்து ஒரு பிணத்திற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என்ற அனுதாபமும், ஜோன்ஸ் கதாபாத்திரத்தின் மூலமாக அவர் நட்பின் மீது கொண்ட மரியாதையும், நண்பனின் ஆசையை நிறைவேற்ற அவர் கொண்டிருக்கும் உறுதியும், பெப்பரின் மீது வெறுப்பும் ஏற்படும்.
சிறப்பான காட்சியமைப்புகளுடன் மெக்சிக மக்களின் வாழ்வுநிலையை அருமையாக படம்பிடித்திருப்பார்கள்.
பெப்பரின் மனைவியைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? :))
அருமையானதொரு விமர்சனத்திற்கு நன்றி தம்பி! :)
//இதையெல்லாம் எழுதி முடிச்சி வாசிச்சா எனக்கே பொறுக்கல, என்னடா ஒரு நல்ல படத்தை இப்படி நாஸ்தி பண்ணி எழுதிட்டமோன்னு. //
முதல்ல உங்க தன்னடக்கத்துக்கு அடக்கம் பண்ணனும்யா ;))
உடனே படத்தை பார்க்க தூண்டுகிறது...
கப்பி,
நம்மள மாதிரிதானா?
எனக்கு பெப்பர் மேல வெறுப்பு வருதுன்னு சொல்ல முடியாது. ஒரு பதட்டத்திலதான் அந்த கொலை நடந்து விடுகிறது பின்பு தன் குணத்தை தானே அறிய ஜோன்ஸ் ஒரு வாய்ப்பு கொடுத்ததாகவே நினைப்பேன். அமெரிக்க சூழ்ழ்நிலையில் வளர்ந்தவர்கள் அனைவரும் ஒரு வித சைக்கோத்தனமானவர்கள் என்ற என் அனுமானமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
//சிறப்பான காட்சியமைப்புகளுடன் மெக்சிக மக்களின் வாழ்வுநிலையை அருமையாக படம்பிடித்திருப்பார்கள்.//
சரியாக சொன்ன கப்பி, அருகாமையில் உள்ள நாடுகளில் ஒரு நாடு வல்லரசாகவும், ஒரு நாடு ஏழ்மையான நாடாகவும் இருப்பது ஏன் என்று புரியவில்லை. அரசியலாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
//பெப்பரின் மனைவியைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? :))//
அந்த அம்மணி கேரக்டர் பார்த்ததும் எனக்கு தோன்றியது இதுதான். மூன்றாம் பிறை படத்தில் சில்க் ஸ்மிதா செய்த அதே பாத்திரம்தான் மனதுக்கு தோன்றியது. அதுவுமில்லாம படத்தில அந்தம்மாவுக்கு "வசனமே" சரியா குடுக்காத மாதிரி ஒரு எண்ணம் இருந்தது எனக்கு.
//அருமையானதொரு விமர்சனத்திற்கு நன்றி தம்பி! :)//
இது 20 மச் :(((
//உடனே படத்தை பார்க்க தூண்டுகிறது... //
DVD கிடைச்சா உடன்னே பாருங்க செந்தழல் ரவி. ரசிச்சி பார்க்க நிறைய காட்சிகள் இருக்கு இந்த படத்தில.
வருகைக்கு நன்றி ரவி.
Really Nice movie.
not your Review..
just kidding :))
ASMA Ahmedi
Post a Comment