எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, December 04, 2006

அமீரக வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

ஆசிப் அண்ணாச்சியின் தலைமையில் மற்றுமொரு மாபெரும் மாநாடு
அமீரகத்தில் இனிதே நடைபெற்றது. சந்திப்புக்கு வருவதாக சொன்ன பிற
நண்பர்கள் பலர் வர இயலாதபடி செய்து விட்டார் வருணபகவான். இந்த சந்திப்பு அருமையான ஒரு விவாதக்களமாக அமைந்தது. பல தலைப்புகளில் நண்பர்கள்
நன்றாக பேசினார்கள். குறிப்பாக அண்ணாச்சியும் பெனாத்தல் சுரேஷ் அவர்களும் நகைச்சுவையாக அதே சமயம் நல்ல கருத்துக்களுடன் பேசினார்கள்.மாநாட்டில்
கலந்து கொண்டவர்கள் விவரம்.


ஆசிப் மீரான்
பெனாத்தல் சுரேஷ்
நண்பன்
இசாக்
முத்துக்குமரன்
கவிமதி
லியோ சுரேஷ்
தமிழன்பு
சுந்தரராமன்
செண்பகராஜன்
தம்பி.

லியோ சுரேஷ் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். நேரம் தவறாமை
என்பது மிக முக்கியம் என்பதை முன்வைத்து பதிவுகளின் நோக்கம் என்ன?
எதிர்காலத்தில் இதனால் நாம் சாதிப்பது என்ன? என்று விவாதத்தை துவக்கினார்.

பதிவுகள் அவசியமா? பதிவுகளுக்காக பின்னூட்டமா? பின்னூட்டத்துக்காக
பதிவுகளா? தமிழ்மண கவிதைகள், பெரியார் போன்ற பல தலைப்புகளில்
விவாதம் நடைபெற்றது. குறிப்பிட்ட நேரத்திக்கு சந்திப்பு நடபெற்றிருந்தால்
இன்னும் நிறைய பேசியிருக்கலாம். இந்த சந்திப்பில் என்னுடைய பங்கு எனபது பார்வையாளனுக்கும் கீழேதான் என்பது சந்திப்பில் இடம்பெற்ற அனைவருக்கும்
தெரியும். நிறைய விஷயங்களில் தெளிவான பார்வை இல்லாததும் ஒரு காரணம்.

எழுத்து என்பது தொழில்முறை எழுத்தாளருக்கு மட்டுமே சொந்தமில்லை,
அனைவருக்கும் பொதுவானது. வாசகன் என்பவன் வாசிக்க மட்டுமே அல்ல
அவனுக்கும் சில கருத்துக்கள் உண்டு அதை பொதுவில் வைத்து விவாதம்
நடத்த உதவியாக இருக்கும் இந்த பதிவுகள் என்பது மிக அவசியம் என்று
அருமையாக பேசி விவாதத்தை துவக்கி வைத்தார். ஒரு விஷயத்துல
நமக்குன்னு ஒரு கருத்து இருக்கும் அதை பொதுவில் வைத்து விவாதிக்கும்போது
புதிய சில விஷயங்கள் தெரிய வரும், மற்றவர்களின் பார்வையையும் அறிய
ஒரு வாய்ப்பு. சில முரண்பட்ட கருத்துக்கள். ஒரு காலத்தில் எழுத்தாளர்களுக்கு
மட்டுமே சொந்தமாக இருந்ததை இப்பொழுது யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக வெளியிடலாம் என்பது ஒரு மிகப்பெரிய
சுதந்திரம். வலைப்பூவின் சக்தி குறித்து நண்பன் ஒரு செய்தி குறிப்பிட்டது
சுவாரசியமானதாக இருந்தது. இராக் யுத்தத்தின் போது யுத்தக்கள செய்திகளை
இரு பெரும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு கொண்டிருந்தது. (CNN, Al JAZEERA) இரண்டுமே நடந்ததை நடுநிலையோடு வெளியிட்டதாக யாரும் நம்பபோவதில்லை.
அந்த நேரத்தில் இராக்கியர் ஒருவர் அங்கே என்ன நடந்தது என்பதை எவ்வித சார்புத்தன்மையும் இல்லாமல் தன் வலைப்பூவில் எழுதியது பரபரப்பை
உண்டாக்கியது. உலகமே அந்த வலைப்பூவினை வாசித்தனர் என்றார். இது போல சுதந்திரமாக செய்திகளையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள ஏதுவாக உள்ள
ஒரு ஊடகம் இது. எழுதி வைத்து பேசறதுக்கே நம்மாள முடியாத போது
அப்போதுதான் சொல்லப்பட்ட தலைப்பை வைத்து பேசுவது என்பது
பாராட்டக்கூடியது அந்த வகையில் முத்துக்குமரன் அருமையாக பேசினார்.

அடுத்து பதிவுகள் எழுதப்படுவது பின்னூட்டங்களுக்காக மட்டுமா?. சில
மொக்கையான பதிவுகள் (என் பதிவுகள் போல) பின்னூட்டங்கள் நிறைய பெறுவதும்,அருமையான படைப்புகள் பல கவனிக்கப்படாமல் போவதும் எதனை அறிவுறுத்துகிறது? வாசிப்பவர்கள் நகைச்சுவையை மட்டுமே விரும்புபவர்களா?
எதனால் இப்படி என்ற சுவாரசியமான விவாதம். என் பதிவில் நான்
பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை நேரமின்மையும் நேரவிரயமும்
காரணங்கள். நான் எழுதிய கவிதைகளை சேமித்து வைக்கும் ஒரு இடமாக
வலைப்பூவினை பயன்படுத்துகிறேன். என்னை பாராட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக எனது மின்னஞ்சல் முகவரி, உலாபேசி எண் அங்கேயே
உள்ளது. என்பதை இதற்கு முன்பு நடைபெற்ற சந்திப்பில் சொன்னதை நினைவு
கூர்ந்தார் நண்பர் இசாக். வலைப்பூக்களில் ஒருபுறம் கடுமையான விவாதங்கள் நடைபெற்றாலும் ஒருபுறம் நகைச்சுவை பதிவுகள் வந்துகொண்டு இருக்கின்றன.
தீவிரமான விவாதங்களில் பங்கேற்க விரும்பாதவர்களும் சர்ச்சைகளில் சிக்க
விரும்பாதவர்களும் நகைச்சுவை பதிவுகள் எழுதுவதையே தேர்ந்ததெடுக்கின்றனர்.
இதில் என்னுடைய கருத்து என்பது பின்னூட்டங்கள் என்பது அவசியமே
பதிவு வெளியிட்டு சில நொடிகளில் மற்றவர் கருத்தை பின்னூட்டங்களில்
அறிய முடிவது வரமே.

கவிதைகள் குறித்து பேச்சு வந்த போது கவிமடத்தலைவர் கவுஜைகளின்
மன்னன் ஆசிப் அவர்கள் பெரும்பாலான கவிதைகள் காதலை மையமாக
வைத்தே எழுதப்படுவது எதனால்? இதுபோல எழுதப்படும் கவிதைகள்
புலம்பல்கள் போலவே தோற்றமளிக்கிறது. காதல் என்ற பொருளைத்தாண்டியும்
நிறைய விஷயங்க உள்ளன. வெறும் அலங்கார வார்த்தைகளைக் கொண்டு
புனையப்படுவது கவிதை என்று சொல்ல முடியாது. கவிதைகளின்
பாடுபொருள் என்பது காதல் மட்டுமேயல்ல.

எளிதில் தீப்பற்றக்கூடிய, முடிவில்லாததுமாகிய பெரியார் என்ற விவாதம்
வந்த போது அது எளிதில் முடியக்கூடியதாக இல்லை. முக்கியமான எனது
கருத்து என்னவென்றால் பெரியாரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட
பெரியாரை விமர்சிப்பர்களே அதிகம். மக்கள் மதித்த ஒரு சீர்திருத்தவாதியை
சகட்டு மேனிக்கு தூற்றும் பதிவுகளை பார்க்கும்போது வேதனையே வருகிறது. எதிர்கருத்துக்களுக்கு வாதிட யாரும் தயாராக இல்லாதபோது விவாதம் நடத்தி
பயனில்லை.

அமீரகசெய்திகளுக்கு வலைப்பதிவாளர்கள் யாரும் முன்னுரிமை கொடுத்தால்
வாசகர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நண்பர் செண்பகராஜன்
குறிப்பிட்டார். தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தின செய்திகள்
போன்றவைகளையும் பதிப்பித்தால் நன்று என்றார். இங்கு வெளியிடப்படும் செய்தித்தாள்களின் செய்திகளே தணிக்கை செய்யப்பட்ட செய்திகள்தான்.
வெளியிடுவதில் உள்ள சிரமங்கள் சட்டச்சிக்கல்கள் போன்றவைகளை
நயமாக எடுத்துரைத்தார் நண்பர் ஆசிப்.

நான் என்ன பேசினேன்னு கேக்கறிங்களா? நான் பேசவில்லை பேசுவதை கேட்டு
கொண்டிருந்தேன். என் கைதான் பேசியது என் கைகள் சிவ்ஸ்டார் பவனின்
மூன்று வடைகளை பதம் பார்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏண்டா மொத்தத்துல வடை சாப்பிட மட்டுமே வாய் தொறந்திருக்க நீயி.
அப்படின்னு யாரும் கேக்ககூடாது ஆமாம்.

மீதி அடுத்த பதிவில்!

24 comments:

ரவி said...

போண்டா இல்லாத ஒரு பதிவர் மீட்டிங்கா ? இதை எங்களது மத்திய குழு அனுமதிக்காது...!!!! நீர் இதற்க்கு இம்போசிஷனாக பத்து போண்டாவை காரச்சட்னியோடு உள்ளே தள்ளவும்...:)))))

பொன்ஸ்~~Poorna said...

//ஏண்டா மொத்தத்துல வடை சாப்பிட மட்டுமே வாய் தொறந்திருக்க நீயி.
அப்படின்னு யாரும் கேக்ககூடாது //
ஓ, காபியும் சாப்பிட்டீங்களா ? :))

கதிர் said...

//போண்டா இல்லாத ஒரு பதிவர் மீட்டிங்கா ? இதை எங்களது மத்திய குழு அனுமதிக்காது...!!!! நீர் இதற்க்கு இம்போசிஷனாக பத்து போண்டாவை காரச்சட்னியோடு உள்ளே தள்ளவும்...:)))))//

உத்தரவு மன்னா!

கதிர் said...

//ஓ, காபியும் சாப்பிட்டீங்களா ? :))//

தேநீர் என்று தமிழில் சொல்லுங்க நட்சத்திரமே!

என்ன ஒரே நட்சத்திர பின்னூட்டமா இருக்கு!!!

பாரதி தம்பி said...

//பெரியாரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட
பெரியாரை விமர்சிப்பர்களே அதிகம். மக்கள் மதித்த ஒரு சீர்திருத்தவாதியை
சகட்டு மேனிக்கு தூற்றும் பதிவுகளை பார்க்கும்போது வேதனையே வருகிறது. எதிர்கருத்துக்களுக்கு வாதிட யாரும் தயாராக இல்லாதபோது விவாதம் நடத்தி
பயனில்லை.//

தன் வாழ்நாளில் கண்ணுக்கெதிராகவே எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்த அந்த கிழவனின் தேவை இப்போதும் இருக்கிறது.

நாமக்கல் சிபி said...

//தேநீர் என்று தமிழில் சொல்லுங்க நட்சத்திரமே!//

காபிக்கு தமிழ்ல தேநீரா???

சரி... நீதான் பேசாம எல்லாத்தையும் நல்லா கவனிச்சிருக்கியே! அது போதும் :-)

கப்பி | Kappi said...

போட்டோல இருக்கற மாதிரியே அங்கயும் கைகட்டி பவ்யமா நல்ல பையன் மாதிரி இருந்தீங்களா ;))

நீங்க ஏன் பேசவேயில்லைன்னு காரணத்தைத் தான் பெனாத்தலார் அடுத்தப் பதிவுல அம்பலப்படுத்தப் போறாரே ;)

முத்துகுமரன் said...

//அப்போதுதான் சொல்லப்பட்ட தலைப்பை வைத்து பேசுவது என்பது
பாராட்டக்கூடியது அந்த வகையில் முத்துக்குமரன் அருமையாக பேசினார்.//

தம்பி, தலைப்பு முன்னரே கொடுக்கப்பட்டதுதான். தயாரிப்போடுதான் வந்திருந்தேன்.:-)

கதிர் said...

//தன் வாழ்நாளில் கண்ணுக்கெதிராகவே எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்த அந்த கிழவனின் தேவை இப்போதும் இருக்கிறது.//

சரியா சொன்னீங்க ஆழியூரான்.

வருகைக்கு நன்றி.

கதிர் said...

//காபிக்கு தமிழ்ல தேநீரா???//

இல்லப்பா வெட்டி, நான் குடிச்சது தேநீர்தான். அதத்தான் தமிழ்ல சொன்னேன்.

கதிர் said...

//தம்பி, தலைப்பு முன்னரே கொடுக்கப்பட்டதுதான். தயாரிப்போடுதான் வந்திருந்தேன்.:-)//

ஆஹா இங்கய்யும் கயமையா? திட்டமிட்ட சதிதானா அது??இருந்தாலும் உமது பேச்சு அருமைதான் முத்தான முத்தே!!

கதிர் said...

//போட்டோல இருக்கற மாதிரியே அங்கயும் கைகட்டி பவ்யமா நல்ல பையன் மாதிரி இருந்தீங்களா ;))//

ஆமாப்பா மழை, ஊதக்காத்து ரெண்டும் சேர்ந்து அடிச்சதால கைகட்டிதான் உக்காந்திருந்தேன். ஆமா அதெப்படி உனக்கு தெரிஞ்சது??


//நீங்க ஏன் பேசவேயில்லைன்னு காரணத்தைத் தான் பெனாத்தலார் அடுத்தப் பதிவுல அம்பலப்படுத்தப் போறாரே ;)//

இது என்ன ஸ்கூப் நியூசா? அம்பலப்படுத்தறதுக்கு. ஒண்ணுமே தெரியலண்ணா சும்மாத்தான்யா உக்காந்திருக்கணும். அதான் மருவாதையும் கூட!

லொடுக்கு said...

// மக்கள் மதித்த ஒரு சீர்திருத்தவாதியை
சகட்டு மேனிக்கு தூற்றும் பதிவுகளை பார்க்கும்போது வேதனையே வருகிறது.//

அப்ப, நீரும் திரா'விட' பெத்தடின் கூட்டமா? அப்படின்னு முத்திரை விழ தம்பிக்கு வாழ்த்துக்கள். ஜோதியில் ஐக்கியம்.

லொடுக்கு said...

சிவ்ஸ்டார் பவன் சாப்பாடு நல்லாருக்கா? அடுத்த வாரம் போகலாம்னு இருக்கேன். அதற்கான விமர்சனம் தேவை.

கதிர் said...

//அப்ப, நீரும் திரா'விட' பெத்தடின் கூட்டமா? அப்படின்னு முத்திரை விழ தம்பிக்கு வாழ்த்துக்கள். ஜோதியில் ஐக்கியம். //

எப்ப? எப்பன்னு? காத்திட்டு இருப்பிங்களோ? இதுல வாழ்த்து வேறயா! நல்லாருங்க அண்ணாத்த! ஜோதியில் ஐக்கியம் ஆக வாழ்த்து சொல்றதே திராவிட கொள்கைகளுக்கு எதிரானதுதான் லொடுக்காரே! :))

//சிவ்ஸ்டார் பவன் சாப்பாடு நல்லாருக்கா? அடுத்த வாரம் போகலாம்னு இருக்கேன். அதற்கான விமர்சனம் தேவை. //

என்னையும் கூட்டிட்டு போனிங்கன்னா நல்லா இருக்கும்! இல்லன்னா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். :))

- யெஸ்.பாலபாரதி said...

வாழ்த்துக்கள்.
அடுத்த பதிவையும் எதிர்பார்த்து..

"மாநாடு கொண்டான்"
யெஸ்.பா

லொடுக்கு said...

//தம்பி சொன்னது...…

//அப்ப, நீரும் திரா'விட' பெத்தடின் கூட்டமா? அப்படின்னு முத்திரை விழ தம்பிக்கு வாழ்த்துக்கள். ஜோதியில் ஐக்கியம். //

எப்ப? எப்பன்னு? காத்திட்டு இருப்பிங்களோ? இதுல வாழ்த்து வேறயா! நல்லாருங்க அண்ணாத்த! ஜோதியில் ஐக்கியம் ஆக வாழ்த்து சொல்றதே திராவிட கொள்கைகளுக்கு எதிரானதுதான் லொடுக்காரே! :))

//சிவ்ஸ்டார் பவன் சாப்பாடு நல்லாருக்கா? அடுத்த வாரம் போகலாம்னு இருக்கேன். அதற்கான விமர்சனம் தேவை. //

என்னையும் கூட்டிட்டு போனிங்கன்னா நல்லா இருக்கும்! இல்லன்னா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். :))
//



சொல்றதச் சொல்லிட்டு நைசா நழுவுற மாதிரி தெரியுது. சரி சரி, அப்போ ஆர்யக் கூட்டமா?

சிவ்ஸ்டார் பவனுக்கு போனா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கனும். அப்போ என்ன செய்யலாம்?

கதிர் said...

வாங்க "மாநாடு கொண்டான்"

உங்க அளவுக்கு ஒரு மாநாட்டை நடத்திபுடணும்னு எங்க தலைவர் ஆசைப்படுறார்.

அங்கயும் இட்லிவடை இருந்தாரு, எப்படின்னு கேக்குறிங்களா? சாப்பிடுற தட்டுலதான் :))

//சொல்றதச் சொல்லிட்டு நைசா நழுவுற மாதிரி தெரியுது. சரி சரி, அப்போ ஆர்யக் கூட்டமா?//

அய்யா லொடுக்கு,

ஏன் இந்த கொலவெறி?

ரொம்ப ரொம்ப நல்லாவே இருங்க!!! :)

ramachandranusha(உஷா) said...

அங்கயும் இட்லிவடை இருந்தாரு, எப்படின்னு கேக்குறிங்களா? சாப்பிடுற தட்டுலதான் :))//
:-))))))))))))))))))))))))))))

Anonymous said...

அங்க பேசலநா என்னா தம்பி இங்க இவ்வளவு தெளிவா எழுதிட்டீங்களே.
அப்புறம் நாளை பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்.

(எல்லாரும் பார்ட்டி கேப்பாங்க.. அதுக்குத் தான் மாட்டிவிட்டேன்)

லியோ சுரேஷ்
துபாய்

கதிர் said...

வாங்க உஷாக்கா!

மொத முறையா வீட்டுக்கு வந்து சிரிச்சிட்டு போறீங்க. நல்லாவே இருக்கு!


நன்றிங்க லியோ சுரேஷ்! இப்படி மாட்டி விட்டுட்டிங்களே!

நல்லா இருங்க! உங்க விட்டுலதான் ட்ரீட்டுன்னு சொன்னா எனக்கும் சம்மதம்.. :)))

பரத் said...

தம்பி,
நன்றாக பதிவு செய்துள்ளீர்கள்.

//என் கைதான் பேசியது என் கைகள் சிவ்ஸ்டார் பவனின்
மூன்று வடைகளை பதம் பார்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.//

ROFTL :))

Anonymous said...

போனதனால் ஆன பயனென்கொள் மூன்று முழு வடையே! கட்சியா நீங்க, நானும் கேள்விப் பட்டேன் அமீரக மாநாடு பட்டய கெளப்புச்சுன்னு!

நல்ல பதிவு!

கதிர் said...

நன்றி பரத்!

ராசுக்குட்டி அண்ணே!

மாநாடு ரொம்ப சிறப்பாவே நடந்து முடிஞ்சது!