எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, November 30, 2006

கார்த்திகை, மார்கழி மாத நினைவுகள்!

இந்த கார்த்திகை மாசம்னாவே கொஞ்சம் அதிகமான உற்சாகம் இருக்கும் ஏன்னா
நம்ம ஊரு கூட ஊட்டி லெவலுக்கு மாறிடும். காலையில் வாசல் தெளிக்குற பொம்பளைங்கள்ல இருந்து ,பால்கேன் தூக்கிட்டு போற ஆம்பளைங்க வரைக்கும்
இந்த ரெண்டு மாசத்துக்கு வித்யாசமா ஸ்வெட்டர், மங்கி குல்லா எல்லாம்
போட்டுகிட்டு வித்தியாசமா இருப்பாங்க! பார்க்கவே படு வித்தியாசமா இருப்பாங்க
சில தாய்க்குலங்கள் காலையில குளிரும்னு புத்திசாலித்தனமா ராவிலயே சாணி
தெளிச்சிட்டு காலம்பற சொகமா தூங்குவாங்க. ரொம்ப குளிருதேன்னு பாதிநாளு
குளிக்கற பழக்கமே இல்ல நம்மளுக்கு அந்தளவுக்கு சோம்பேறி இதுல நாள்
முழுக்க வீட்டு வேலை செய்யிற தாய்க்குலங்கள எதுக்குடா வம்புக்கு
இழுக்குறன்னு கேக்காதிங்க நான் சொல்றது ஸ்கூல், காலேஜ் படிக்குற
புள்ளைங்கள.

சென்னை மாதிரி சிட்டில பொறந்து வளர்ந்திருந்தேன்னா இந்த மாசத்துல கார்த்திக்
பைன் ஆர்ட்ஸ், மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்னு கச்சேரிக்கு போகலாம். வெத்தல
பொட்டில தாளம் போட்டு ரசிக்கிற கூட்டத்துக்கு நடுவில உக்காந்துகிட்டு நாமளும்
புரிஞ்சா மாதிரியே தாளம் போடலாம். என்னா செய்யிறது நம்ம ஊரு பட்டிக்காடா
போச்சு கோயில் ஸ்பீக்கர்ல போடற பாட்டுகள்தான் நம்மளுக்கு கச்சேரி, பஜனை
எல்லாமே.

பிடிக்குதோ பிடிக்கலையோ காலையில கார்த்திகை மாசத்து ஐய்யப்பன்
பாடல்களும்,மார்கழி மாசத்துல பெருமாள் கோயில்ல திருவிளையாடல் புகழ்
தருமியும் நம்ம தூக்கத்தை பதம் பாத்துருவாங்க. ஒருவிதத்துல அதுவும்
நல்லதுதான் காலையில அந்த குளிர்லயும் காலையில எழுத்திரிக்கறது கஷ்டமா
இருந்தாலும் உடம்புக்கு நல்லதாமே. பசங்க எல்லாம் சேர்ந்துகிட்டு எவன் வீட்டு வைக்கபோரை இழுத்துகிட்டு வந்து பத்த வெச்சி குளிர் காயுற சுகம் காசு
குடுத்தாலும் கிடைக்காது. நெருப்ப பத்த வெச்சி சுத்திரும் உக்காந்துகிட்டு கையி,
காலு, அப்புறம் திரும்பி உக்காந்துகிட்ட காயிறது அடடா என்னா சொகம். குறிப்பா ரோட்டோரத்துல பத்த வெச்சோம்னா கொஞ்ச நேரத்துலயே நிறைய ஆளுங்க
சேர்ந்துருவாங்க அதுனால ஜாக்கிரதையா ஒதுக்குபுறமான இடத்துக்கு போயிடணும்.

இந்த குளிர் காலத்துல ஒரு வசதி என்னன்னா தம்மடிக்காத ஆளுகளுக்கு கூட
வாய்லருந்து புகை வரும். இதை வயதுக்கு மீறிய வளர்ச்சியுடைய வாலிபர்கள
சரியா பயன்படுத்தி அங்கனயே ஒரு தம்ம பத்த வெச்சி அடிப்பாங்க. அங்கருந்து
அப்படியே கும்பலா பசங்க ஒண்ணு சேர்ந்து ஆத்து பக்கமா குளிக்க போவோம்.
ஆத்துல தண்ணி பயங்கர சில்லுன்னு இருக்கும். லேசா தொட்டு பாத்துட்டு
குளிக்கலாமா? வேணாமான்னு அஞ்சு பத்து நிமிஷம் யோசிக்க வெச்சிடும் அந்த
அளவுக்கு சில்தண்ணியா ஓடும் இப்படி யோசிச்சுட்டு இருக்கும்போதே எவனையாவது தண்ணிக்குள்ள தள்ளி விட்டுருவானுங்க. தண்ணி ஆழமா இருக்குற இடமா பார்த்து போய்தான் குளிக்கணும் ஏன்னா அந்த இடத்துக்குதான் யாருமே வரமாட்டாங்க
ஜாலியா இஷ்டம்போல குளிக்கலாம்.

இருக்கறதுலயே ஜாலியான மாசம் மார்கழி மாசம்தான். ஏன்னு கேக்கறிங்களா? இந்த
மாசத்துல பாதி நாள் விடுமுறையா போயிடும் புது வருஷம் வேற வரும்,
அடுத்ததா பொங்கலும் வரும் ஒரே ஜாலிதான். இந்த மாசத்துலதான் பெரிய பெரிய கோலமெல்லாம் போட்டு வாசல்ல காலே வைக்க முடியாதபடி பண்ணுவாங்க.
கோலத்துக்கு நடுவில ஒரு பூவும் வைப்பாங்க. இதுக்காகவே காலையில எழுந்திரிச்சி குமரிகள் கோலம் போடுற ஏரியாவா பார்த்து நம்ம (கி)ராமராஜன் பாட்டு பாடி
லொல்லு பண்றது.

வாசலிலே பூசணிப்பூ
வச்சுப்புட்டா...
வச்சுப்புட்டா...
நேசத்திலே எம்மனச
தச்சுப்புட்டா...
தச்சுப்புட்டா...

ஒரு முறை எதுக்கும்மா இந்த மாதிரி கோலத்துக்கு நடுவில பூ வைக்கற
பழக்கம்னு கேட்டு வெச்சேன். உனக்கு தேவையில்லாத கேள்விடா இதுன்னு
சொல்லிட்டாங்க (தெரிஞ்சவங்க சொல்லலாம்) வந்தது கோவம். இனிமேல்
யாருவீட்டுலயும் இந்த பூ வைக்க கூடாதுன்னு, குப்பமேடு, வயக்காடு,
கரும்புதோட்டம்னு எல்லா இடத்திலயும் போயி இருக்குற பூ, மொட்டு
எல்லாத்தையும் பிச்சி எறிஞ்சிட்டு வத்துட்டோம். இது தெரிஞ்சி எங்க தெரு
தாய்க்குலங்கள் எங்க நாலு பேரு மேல நடவடிக்கை எடுத்தது தனிக்கதை.

பொதுவா மார்கழி மாசத்துல கோயில் எல்லாமே பிசியா இருக்கும். நம்ம ஊரு
சின்ன ஊரா போயிட்டதால சில பஜனைப்பாடல்கள ஒலிபெருக்கில போட்டுட்டு
பூசாரி தூங்க போயிடுவாரு ஊருமக்கள்ஸ் எல்லாம் காலையிலே முழிச்சிக்கிட்டும்ன்ற
நல்ல எண்ணம்தான். ஒரு காலத்தில திருவிளையாடல் படத்துல வரும் வசனங்கள் எல்லாமே அத்துப்படி ஏன்னா பெருமாள் கோயில் பூசாரிக்கு அந்த படம் ஒண்ணுதான் பக்திப்படமா போயிடுச்சி. ஒரு கதை வசனம் கேசட்டை வச்சே ஊரை எழுப்பி
விடறதுல கில்லாடி அவரு. முக்கியமா சிவாஜிக்கும் தருமிக்கும் நடக்குற அந்த
கேள்வி கேட்டு பதில் சொல்ற இடத்துல காதை கூர்மையா வெச்சிக்கிட்டு பசங்க நாங்க எல்லாம் கேப்போம். அப்படியே அந்த வசனத்தை உல்டா பண்ணி வகுப்பறையில
காமெடி பண்ணுவோம்.

இந்த கார்த்திகை மாசத்துல அரைகுறையா நடக்குற ஒரு நல்ல விஷயம் என்னன்னு
கேட்டீங்கன்னா மாலை போடுறதுதான். ஊருல இருக்குற பாதி அயோக்கியனுங்க
இந்த மாலை போட்டுருக்குற நாட்களில் மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க.
சிலர் மாலையும் போட்டுகிட்டு எல்லா வேலையும் செய்வாங்க, செய்யறதையும்
செஞ்சிட்டு மைக்ல " அறிந்தும் அறியாமலும்" னு ஒரு பாட்டு பாடி பாவத்தை
தொடச்சி போடற ஆளுங்கள நிறைய பேரை பாத்திருக்கேன். ஒரு மண்டலம் மாலை போடணும்னு ஒரு விதி இருந்தாலும் கோயிலுக்கு போகறதுக்கு முந்தி ஒரு
வாரத்துல நானும் மாலை போட்டேன்னு போடறது ஒரு விளம்பரமாவே
ஆகிப்போனது எனக்கெல்லாம் வருத்தமே. ஏன்னா மாலை போட ஆரம்பிச்ச புதுசுல எங்கப்பாரு கூட நாப்பது நாள் விரதமிருந்துதான் மலைக்கு போவாரு.

"ஏஞ்சாமி மாலைய கழட்டற மாதிரி யோசனை எதுவும் இல்லையா?" ன்னு போன
வருசம் எங்கய்யன பாத்து ஒருத்தன் கேள்வியே கேட்டுபுட்டான். எங்க ஊருப்பக்கம் பள்ளிக்கூட பசங்க மாலை போடறதுல ஒரு போட்டியே இருக்கும் ஏன்னா அந்த ஒரு மாசத்துக்கு வாத்தியார் கூட மாணவனை பவ்யமா சாமின்னுதான் கூப்பிடணும். அதுவுமில்லாம வீட்டுப்பாடம், தேர்வுல கம்மி மார்க், ஓவர்டைம் மாதிரி ஸ்கூல்
டியூஷன் இந்த மாதிரி சில பல இம்சைகள் அந்த தற்காலிக சாமிகளுக்கு இல்லை.
கொஞ்சம் முயற்சி பண்ணி ரிஸ்க் எடுத்தோம்னா மதியம் சீக்கிரமே வீட்டுக்கு
போயிடலாம். இத்தனை சலுகைகள எடுத்தாலும் மலைக்கு போயிட்டு திரும்பினதும் "ஆசாமி"யா ஆகிடறதால சேர்த்து வெச்சி வாத்தியாருங்க குடுக்குற ஆப்புகள
தாங்கிக்குற சக்தி இருக்கணும்.

இப்பவே கொஞ்சம் ஓவரா சுத்திட்டனோ, சரி பாகம் ரெண்டுன்னு அடுத்த பதிவில போட்டுறலாம்

கட்டக்கடேசியா ஒண்ணே ஒண்ணு.

செல்லமே படத்தில ஒரு காமெடி சீன். விவேக் மற்றும் விஷால் டீம் கிரிஷ்
கர்னாட் வீட்டுல ரெய்டு போவாங்க போயி கதவை தட்டுவாங்க. வேலைக்கார
ஆள் கதவை தொறந்து பதில் சொல்வாரு.

வே.கா: அய்யா பூஜையில இருக்கார்

விவேக்: இது மார்கழி மாசம், அய்யா பஜனைல இருந்தாலும் பாத்துட்டுதான் போவோம்.

25 comments:

Divya said...

ரொம்ப அழகா, கோர்வையா மார்கழி மாதத்து மலரும் நினைவுகளை எழுதியிருக்கிறிங்க,

\"இப்படி யோசிச்சுட்டு
இருக்கும்போதே எவனையாவது தண்ணிக்குள்ள தள்ளி விட்டுருவானுங்க. தண்ணி ஆழமா
இருக்குற இடமா பார்த்து போய்தான் குளிக்கணும் ஏன்னா அந்த இடத்துக்குதான் யாருமே
வரமாட்டாங்க ஜாலியா இஷ்டம்போல குளிக்கலாம்.\"

தமாஷா இருக்குது இந்த வரிகள்

கப்பி | Kappi said...

:))

கார்த்திகைல தீபம் வைப்பாங்க..நீங்க கொசுவத்தி வச்சிருக்கீங்க தம்பி!

//வாசலிலே பூசணிப்பூ
வச்சுப்புட்டா...
வச்சுப்புட்டா...
நேசத்திலே எம்மனச
தச்சுப்புட்டா...
தச்சுப்புட்டா...
//

பசுநேசனுக்கு இப்படி ஒரு ரசிக கண்மணியா??


//ஒரு கதை
வசனம் கேசட்டை வச்சே ஊரை எழுப்பி விடறதுல கில்லாடி அவரு. //

இப்பல்லாம் கதை-வசனம் கேசட் கிடைக்குதுங்களா????

இலவசக்கொத்தனார் said...

அண்ணா, கொஞ்சம் உங்க அலைன்மெண்டை மாத்தக் கூடாதா? நெருப்பு நரியில் படிக்கவே முடியலையே. Justified வேண்டாம் Left Aligned ஆகவே இருக்கட்டுமே.

இலவசக்கொத்தனார் said...

//ஒரு முறை எதுக்கும்மா இந்த மாதிரி கோலத்துக்கு நடுவில பூ வைக்கற
பழக்கம்னு கேட்டு வெச்சேன். உனக்கு தேவையில்லாத கேள்விடா இதுன்னு சொல்லிட்டாங்க
(தெரிஞ்சவங்க சொல்லலாம்) வந்தது கோவம். இனிமேல் யாருவீட்டுலயும் இந்த பூ வைக்க
கூடாதுன்னு, குப்பமேடு, வயக்காடு, கரும்புதோட்டம்னு எல்லா இடத்திலயும் போயி இருக்குற
பூ, மொட்டு எல்லாத்தையும் பிச்சி எறிஞ்சிட்டு வத்துட்டோம். இது தெரிஞ்சி எங்க தெரு
தாய்க்குலங்கள் எங்க நாலு பேரு மேல நடவடிக்கை எடுத்தது தனிக்கதை.//

இதுல விக்கிபசங்க கிட்ட வேற கேள்வி கேட்டு இருக்கே. நினைச்சாலே பயமா இருக்குதேப்பா. எங்க வலைப்'பூ'வெல்லாம் பத்திரமா இருக்குமா?

கதிர் said...

//ரொம்ப அழகா, கோர்வையா மார்கழி மாதத்து மலரும் நினைவுகளை எழுதியிருக்கிறிங்க,//

இதையும் நான் கிண்டலாவே எடுத்துக்கறேன்!

//பசுநேசனுக்கு இப்படி ஒரு ரசிக கண்மணியா??//

இந்த முறை ஊருக்கு போனேன்னா எங்க பசுநேசர் ரசிகர் மன்ற போர்டை புதுசா பெயிண்ட் அடிச்சி தலைவர் பதவிய தட்டி பறிச்சிடலாம்ணு இருக்கேன். இஸ்கூல் பசங்ககூடா போடறதுக்கு கூச்சப்படுற ஸ்மால் செகப்பு கலர் டவுசர போட்டுகிட்டு படம் முழுக்க நடிச்சதுக்கு அவருக்கு அவார்டே தரல தெரியுமா?

நாமக்கல் சிபி said...

தம்பி,
அப்படியே நம்ம ஊர கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்ட...

அதுவும் அந்த குளிர் காயவே நான் சீக்கிரம் எழுந்திரிப்பேன். அப்பறம் வெயில் வந்தவுடனே மறுபடியும் போய் தூங்கிடுவேன் :-)

அதே மாதிரி மலைக்கு மாலை போட்டதும் மறக்க முடியாது. நம்மல எல்லாரும் சாமினு சொல்லும் போது ஒரு கெத்தா இருக்கும் ;)

//தருமிக்கும் நடக்குற அந்த கேள்வி கேட்டு பதில் சொல்ற இடத்துல காதை கூர்மையா
வெச்சிக்கிட்டு பசங்க நாங்க எல்லாம் கேப்போம். அப்படியே அந்த வசனத்தை உல்டா பண்ணி
வகுப்பறையில காமெடி பண்ணுவோம்.//

அதை பத்தி ஒரு பதிவு போடுப்பா!!!

கதிர் said...

//அண்ணா, கொஞ்சம் உங்க அலைன்மெண்டை மாத்தக் கூடாதா? நெருப்பு நரியில் படிக்கவே முடியலையே. Justified வேண்டாம் Left Aligned ஆகவே இருக்கட்டுமே.//

அடுத்த தபா மாத்திடறேன் தலிவா! இந்த ஒரு தபா மன்னிச்சி விட்டுடுங்க!

//இதுல விக்கிபசங்க கிட்ட வேற கேள்வி கேட்டு இருக்கே. நினைச்சாலே பயமா இருக்குதேப்பா. எங்க வலைப்'பூ'வெல்லாம் பத்திரமா இருக்குமா?//

ச்செ அப்படிலாம் பண்ணமாட்டேன்.
வார்த்தையில விளாடுறிங்களே உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாதான் இருக்கணும் போல!!

நம்ம கேள்விக்கு வடையே காணுமே!

கதிர் said...

//அதுவும் அந்த குளிர் காயவே நான் சீக்கிரம் எழுந்திரிப்பேன். அப்பறம் வெயில் வந்தவுடனே மறுபடியும் போய் தூங்கிடுவேன் :-)//

நம் இனமடா நீ!

//அதை பத்தி ஒரு பதிவு போடுப்பா!!! //

போடறேன் கண்டிப்பா!

நாமக்கல் சிபி said...

//
நம்ம கேள்விக்கு வடையே காணுமே!//

கேள்வி கேட்ட வடை கொடுப்பாங்களா???

கொத்ஸ் அப்படினா தினமும் ஆயிரம் கேள்விகளால் வேள்விகள் செய்ய நான் ரெடி :-)

கதிர் said...

//கொத்ஸ் அப்படினா தினமும் ஆயிரம் கேள்விகளால் வேள்விகள் செய்ய நான் ரெடி :-)//

அப்போ வடை குடுத்தா கேள்வி கேப்பிங்களா நீங்க?

நான் ஏதோ ஒரு சுழில தப்பு பண்ணிட்டேன். நீ அதையே பெரிய சுழியா புடிச்சிகிட்டயே.

என்ன பண்றது!

நம்ம சுழி அப்படி!! :))

துளசி கோபால் said...

தம்பி,

மனுசியை நிம்மதியா இருக்க விடவே மாட்டிங்களா? :-)

மார்கழி மாசக் கதை எல்லாம் இப்ப எதுக்கு? கொசுவர்த்தி வாங்கியே காசெல்லாம்
போச்சுன்னு இவர்வேற கத்திக்கிட்டு இருக்கார்.

வாழ்க்கையிலே ஒரு மார்கழி மாசம் மறக்க முடியாததா ஆகிப்போச்சு.

அப்ப ஒரு ச்சின்ன ஊர்லே இருந்தோம். ஊர்லே 98% கிறிஸ்தவங்க. எனக்கோ
அப்பக் கோலப் பைத்தியம். கற்ற வித்தைகளைக் காமிக்கணுமா இல்லையா?

தெருவாசலை அடைச்சுப் பெரூசாக் கோலம் போடுவேன். அந்த வீட்டுலே
ரெண்டு குடும்பம். இன்னொருத்தர் கிறிஸ்தவங்கதான். ஆனாலும் அந்தக்காதான்
நல்லா சாணி தெளிச்சு வீட்டுவாசலைப் பெருக்கித் தருவாங்க. கோலம்
முடிஞ்சவுடன், பூசணிப்பூ பறிக்க ஓடுவேன். எங்கே ? மயானத்துலே! நம்ம வீட்டுப்
பின்புறம் பள்ளி வாசல். சின்ன கட்டை சுவர். அந்தப்பக்கம் குதிச்சா........
ஆஹா... ஏராளமா பூத்துக்கிடக்கும். சமாதி மேலே எல்லாம் கொடியாப் பரவி
இருக்கும் பூக்களை தினம் 'வேட்டையாடி விளையாடு'னது மறக்கற விஷயமா என்ன?

ஆமாம். அது என்ன 'வடை'ன்னு என்னவோ சத்தம் கேக்குது?

Divya said...

\" தம்பி said...
//ரொம்ப அழகா, கோர்வையா மார்கழி மாதத்து மலரும் நினைவுகளை எழுதியிருக்கிறிங்க,//

இதையும் நான் கிண்டலாவே எடுத்துக்கறேன்! \"

தம்பி, நான் உண்மையாகத்தான் சொன்னேங்க, அதையும் நீங்க கிண்டலா எடுத்துக்கிறீங்க, என்ன நியாயம் இது??

மு.கார்த்திகேயன் said...

//என்னா செய்யிறது நம்ம ஊரு பட்டிக்காடா போச்சு கோயில் ஸ்பீக்கர்ல
போடற பாட்டுகள்தான் நம்மளுக்கு கச்சேரி, பஜனை எல்லாமே//

அட நம்மாளு.. எனக்கும் இதே கோயில் ஸ்பீக்கர் பாடல்கள் தான் எல்லாமே..

தம்பிக்கு எந்த ஊரு..

//ஒரு காலத்தில திருவிளையாடல் படத்துல வரும் வசனங்கள் எல்லாமே அத்துப்படி//

எனக்கும் தாங்க தம்பி...

கதிர் said...

//மனுசியை நிம்மதியா இருக்க விடவே மாட்டிங்களா? :-)//

வாழ்க்கையில ரீவைண்ட் பண்ணி பாக்குற தருணங்கள் எல்லாமே சுவையா இருக்குங்க துளசியம்மா! இத போயி நிம்மதி இல்லன்னு சொல்றிங்க!
உங்களுக்கும் நிறைய அனுபவங்கள் இருக்கும் அதையும் இங்கே பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க.

எங்க வீட்டுல அம்மா, அக்கா கூட 12 புள்ளி, 24 புள்ளின்னு கோலப்புள்ளிகள கொறைச்சி போடுவாங்க. ஆனா எங்க பாட்டிகெளவி போடும் பாருங்க வாசல்கொள்ளாம போடும். அதுலதான் அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அதிலயும் கலர் கோலம் போடணும்னா தெருலயே மாஸ்டர் அவங்க.

வருகைக்கு நன்றிங்க!!

கதிர் said...

//தம்பி, நான் உண்மையாகத்தான் சொன்னேங்க, அதையும் நீங்க கிண்டலா எடுத்துக்கிறீங்க, என்ன நியாயம் இது?? //

அப்படியே பழக்கமாயிடுச்சிங்க திவ்யா!!
இதுவே ஒரு நகைச்சுவை பதிவுதான!

கதிர் said...

//அட நம்மாளு.. எனக்கும் இதே கோயில் ஸ்பீக்கர் பாடல்கள் தான் எல்லாமே..

தம்பிக்கு எந்த ஊரு..//

அடடே மாரியம்மன் பாட்டு கேட்ட்ருக்கிங்களா சாய்ங்காலத்துல போடுவாங்களே!

வேற்காட்டில் குடியிருக்கும் வேதவள்ளி மாரி...

புங்கைநல்லூர் மரியம்மா புவனம் போற்றும் வேலியம்மா..

இதெல்லாம் தூக்கத்துல எழுப்பி கேட்டாக்கூட பாடுவேன். அந்தளவுக்கு கேட்டு கேட்டு பழக்கமாயிடுச்சி.

நம்ம ஊரு கள்ளக்குறிச்சி பக்கத்துல ஒரு கச்சிராயபாளையம்னு ஒரு ஊருங்க கேள்விப்படுருக்கிங்களா.

நாமக்கல் சிபி said...
This comment has been removed by a blog administrator.
நாமக்கல் சிபி said...

//நம்ம ஊரு கள்ளக்குறிச்சி பக்கத்துல ஒரு கச்சிராயபாளையம்னு ஒரு ஊருங்க கேள்விப்படுருக்கிங்களா.//

இங்க நான் கள்ளக்குறிச்சிக்கே பல ஊர் பேர் சொல்ல வேண்டியதா இருக்கு. நீ அத ரெபரென்ஸிக்கு சொல்றியா???

விழுப்புரம் மாவட்டம்னு ஈஸியா சொல்லிடு ;)

Anonymous said...

Nalla eshuti irunteenga, malarum ninaivugal ;)

கைப்புள்ள said...

//"இப்படி யோசிச்சுட்டு
இருக்கும்போதே எவனையாவது தண்ணிக்குள்ள தள்ளி விட்டுருவானுங்க. தண்ணி ஆழமா
இருக்குற இடமா பார்த்து போய்தான் குளிக்கணும் ஏன்னா அந்த இடத்துக்குதான் யாருமே
வரமாட்டாங்க ஜாலியா இஷ்டம்போல குளிக்கலாம்."//

யூ மீன் கட்டோடு குழலாட... ஆட...?
:)

கதிர் said...

//யூ மீன் கட்டோடு குழலாட... ஆட...?
:) //

தல நீயா இப்படி கேட்ட? இதுல ட்ரிபிள் மீனிங் எதுவும் இல்லயே?

கதிர் said...

இனிமேல் அப்படியே சொல்லிடறேன் வெட்டி.

உங்க கருத்துக்கு நன்றிங்க ஹனீப்!

நாமக்கல் சிபி said...

//இதுவே ஒரு நகைச்சுவை பதிவுதான!//

ஓ!!! அப்படியா???

Santhosh said...

தம்பி,
நல்லா கோர்வையா அழகா எழுதி இருக்கிங்க. மார்கழி மாசம் அப்படின்னாலே நமக்கு லீவும் பாட்டி வீடும், அங்க ஊரில் இருக்கிற கோயில் பிரசாதமும்(எழுவதற்கே மதிய ஆகிவிடும் இதுல கோயிலுக்கு எங்க போவது தாத்தா தான் ஆசையா பேரனுக்காக கோயில் பிரசாத்த்தை எடுத்து வப்பாரு.) தான் ஞாபகத்துக்க்கு வருது :))

////"இப்படி யோசிச்சுட்டு
இருக்கும்போதே எவனையாவது தண்ணிக்குள்ள தள்ளி விட்டுருவானுங்க. தண்ணி ஆழமா
இருக்குற இடமா பார்த்து போய்தான் குளிக்கணும் ஏன்னா அந்த இடத்துக்குதான் யாருமே
வரமாட்டாங்க ஜாலியா இஷ்டம்போல குளிக்கலாம்."///
நம்மால இந்த ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாதுப்பா, அதுக்கு தான் மதியம் வரைக்கு தூங்கிவிட்டு மதியானமா வெயில் இருக்கும் பொழுது குளிக்க போறது.
//நம்ம ஊரு கள்ளக்குறிச்சி பக்கத்துல ஒரு கச்சிராயபாளையம்னு ஒரு ஊருங்க கேள்விப்படுருக்கிங்களா.//
நல்லா கிளம்பி இருக்காங்கய்யா அந்த ஏரியாவுல இருந்து கூட்டம் கூட்டமா :))

கதிர் said...

//ஓ!!! அப்படியா???//

ஆமாப்பா உன் அளவுக்கு இல்ல, என்ன செய்யிறது சட்டியில இருக்கறதுதான அகப்பைக்கு வரும்!

//தம்பி,
நல்லா கோர்வையா அழகா எழுதி இருக்கிங்க. மார்கழி மாசம் அப்படின்னாலே நமக்கு லீவும் பாட்டி வீடும், அங்க ஊரில் இருக்கிற கோயில் பிரசாதமும்(எழுவதற்கே மதிய ஆகிவிடும் இதுல கோயிலுக்கு எங்க போவது தாத்தா தான் ஆசையா பேரனுக்காக கோயில் பிரசாத்த்தை எடுத்து வப்பாரு.) தான் ஞாபகத்துக்க்கு வருது :))//

அடடா மிஸ் பண்ணிங்களே!
நன்றிங்க சந்தோஷ்.
பிரசாதத்த எல்லாம் ஆன் தி ஸ்பாட்ல வாங்கி அடிக்கணும். ஆறவிட்டோம்னா அத சாப்பிடறதே புண்ணியமில்ல!

அதெல்லாம் திரும்ப வராது. போயே போச்ச். :((