அழகிய தீயே படத்தில் வரும் விழிகளின் அருகினில்
வானம் என்ற பாடல் அடிக்கடி நான் கேட்கின்ற
பாடல்களில் ஒன்று.எளிமையான வரிகள், காதல்
வயப்பட்ட ஒருவனின் எண்ணங்களை அழகாக
பிரதிபலிக்கும்.
ரொம்பத்தான் குழம்பிபோனேன் அடுத்து என்ன
எழுதலாம்னு சரி அடிக்கடி நாம் கேட்கும்
பாட்டையாவது போட்டு ஒப்பேத்தலாம்னு தோணுச்சு.
அழகான கவிதையுடன் அமைந்த பாடல். இப்போ
வரும் இரைச்சலான பாடல்களுக்கு இடையில் தெளிவாக
புரியும்படி இருப்பதுதான் இதன் சிறப்பு. எல்லாரும்
இந்த பாடலை கண்டிப்பாக கேட்டு இருப்பீங்க.
கொஞ்சம் பழசுதான் ஆனால் அருமையா இருக்கும்.
கேட்டுதான் பாருங்களேன்.
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இந்த இரண்டு வரிகளுக்காகவே பலமுறை கேக்கலாம்.
தமிழ் சினிமா கண்டு கொள்ளாத ஒரு கதாநாயகன்
பிரசன்னா . பின்னால் ஜொலிக்க வாய்ப்பிருக்கிறது
பாடலின் தொடுப்பு இங்கே
ahttp://www.raaga.com/playerV31/index.asp?pick=20901&mode=3&rand=0.2848494474713584&bhcp=1
பாடல் வரிகள் இங்கே.
விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!
பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!
பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!
கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!
விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Thursday, July 20, 2006
Tuesday, July 11, 2006
தங்கரும் பிரச்சினையும்
விகடனில் தங்கரின் கட்டுரை படித்தேன். என்னமோ இவருக்கு மட்டும்தான் ஈழ தமிழர்கள் மேல் அக்கறை இருப்பது போல அறிக்கை விட்டுருக்கார் அவ்வளவா நல்லா இல்லை. இவ்வளவு
சீற்றமா பேசுற மனிதர் இவ்வளவு நாளா எங்க போயிருந்தார்.
இவர் ஏன் எதை பேசினாலும் எதிர்ப்புகள் அதிகம் வருது என்று அவரின் பேட்டியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன். ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு ஒரு பிரச்சினைக்கு வித்திடாமல் இருக்குமாறு பேச்சு இருக்க வேண்டும். ஏதோ ஆவேசமா பேசிட்டா எல்லா பிரச்சினைக்கும் தீர்வு எப்படி வரும்.
பணிவு பாதையை எளிதாக்கும்னு சொல்வாங்க.
மேலே சொன்ன மாதிரி அவர் பேசி இருந்தா தமிழக மக்களே திரண்டு வருவாங்க. மாறாக அவரு இமயமலைக்கு ஆயில் மசாஜ் செய்யதான் போவாரு போராட்டத்துக்கு எல்லாம் வரமாட்டாரு என்பது போல இவரே பேசிட்டா அப்புறம் எப்படி வருவாங்க?. சொல்கிற விதத்தில் சொன்னா யார் வேணாலும் வருவாங்க.யாருக்கும் ஈழப்பிரச்சினையை வளர விடணும்னு ஆசையில்லை. கமலும், ரஜினியும் சொன்னா மக்கள் கேப்பாங்க என்று சொல்றதெல்லாம் வீண். ஒரு நல்ல இயக்குனர் அழகாக கதை சொல்லவும்
படமெடுக்கவும் தெரிந்த ஒருவர் வார்த்தை விஷயங்களில் தெளிவில்லாமல் தனி மனித காழ்ப்புண்ர்ச்சிகளை கொட்டி வெறுப்பையே சம்பாதிக்கிறார். இந்த விஷயத்தை ஒரு பணிவான வேண்டுகோளாக வைத்திருந்தால் கண்டிப்பாக செவிமடுப்பார்கள் அதை விட்டுட்டு தேவையில்லாத வார்த்தைகளை பேசி தான் ஒருத்தர் தான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாளன் என்பது போன்ற மாயையை ஏற்படுத்துவது விளம்பரமே. தமிழகத்தில் நடிகர்கள் பேச்சைதான் மக்கள் கேப்பாங்களா மற்ற தலைவர்களின் பேச்சை கேக்க மாட்டார்களா.
அங்கே துப்பாக்கிகுண்டுகளின் தாக்குதலுக்கும் இனவெறிக்கும் பயந்து கொண்டு இங்கே அடைக்கலம் வருபவர்களின் முன் நம்மவர்கள் வீண் வார்த்தை சண்டை போடாமல்
ஏதாவது உபயோகமாக செய்தால் நல்லது.
இதை சொன்னவுடனெ யாரும் என்னை ரஜினி ரசிகன்னு நினைச்சிட வேணாம். எல்லாருக்கும்
பொதுவானவன் நான். தங்கர் குறிப்பிட்ட விஷயம் நல்லது ஆனால் வார்த்தைகள் தான்
தடித்து விட்டன.

Monday, July 10, 2006
பிடித்த மற்றும் பிடிக்காத ஆறுகள்
ஜெஸிலாக்கா ஆறு விளையாட கூப்பிட்டாங்க. நம்மளை யாரும் இந்த விளையாட்டுக்கு கூப்பிடலியேனு சந்தோஷமா இருந்தேன். ஆட்டம் எல்லாம் முடியற நேரத்தில அழைப்பு வந்துடுச்சி. என்ன செய்யறது ஆடித்தான் பார்போம்னு களத்தில குதிச்சிட்டான் தம்பி.
எனக்கு பிடிச்ச விஷயங்களை இந்த ஆறுக்குள்ள அடக்க முடியுமானு தெரியலை.
பிடித்த ஆறு
1.அம்மா
எல்லாருக்குமே பிடிக்கும்தான் ஆனால் எனக்கு கொஞ்சம் கூடுதலாவே பிடிக்கும். அப்பாவின்
கோபத்தின் போது அம்மா ஒரு கேடயமாக இருப்பது. எந்த பிரச்சினையா இருந்தாலும் வீட்டுக்கு
வந்துட்டா எல்லாம் மறந்து போற மாதிரி ஒரு தெய்வீகம் அவங்ககிட்ட தான் இருக்கு. நம்மளுக்காக எவ்வளவு சிரத்தை எடுத்து எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ற அந்த குணம். நமக்கு வரும் மனைவி கூட அந்த அளவுக்கு செய்வாங்களா என்பது சந்தேகமே.
அதனால் அம்மாவுக்குதான் முதலிடம்.
2. கமலின் குரல்
உடனே கமலோட தீவிர விசிறி னு யாரும் நினைக்க வேண்டாம். அது என்னமோ தெரியலை
கமல் பேசினாலும், பாடினாலும் ரொம்ப பிடிக்கும். இஞ்சி இடுப்பழகா, ரகுபதி ராகவ
ராஜா னு ஹேராம்ல வரும் குரல் கேக்கும்போதே நரம்புக்குள்ள மராத்தான் பந்தயம் மாதிரி
ரத்தம் ஓடும். அபிராமி அபிராமி என்று முகத்தை அப்பாவி மாதிரி வச்சிகிட்டு நடிக்கறது
யாராலயும் முடியாது என்பது என்னோட கருத்து. இந்த சமயம் கடவுள் என் முன்னாடி
வந்தா நான் ஒரு வரம்தான் கேப்பேன். அந்த வரத்தை பதிவின் கடைசில போடுறேன்.
3. மாலை நேரம்
கீழ்வானம் மஞ்சல் நிறத்தில இருக்கும்போது என் வீட்டுல இருந்து ஏரிக்கரை வரைக்கும் ஒரு நடைய போட்டோம்னா அதுல வரும் சுகம் எதிலயும் வராது. தனியா நடந்து போகணும். யாருமே இல்லாத இடம் அது. தெற்கு பக்கமா இருக்கும் மதகுல அரை மணி நேரம் உக்காந்துட்டு வந்தோம்னா மனசுல இருக்கற குழப்பம் எல்லாம் எங்க போச்சுன்னே தெரியாது.
4. சித்தலிங்கமடம்
அம்மாவின் சொந்த ஊர். சின்ன வயசில பள்ளி விடுமுறைக்கு இந்த ஊர்தான் போவேன்.
மூணு வயசு வரைக்கும் பாட்டியிடம்தான் வளர்ந்தேன். அந்த ஊர்ல எனக்கு பிடிச்சதே அங்க
இருக்கும் வாய்க்கால்தான். முட்டிக்கால் வரைக்கும்தான் தண்ணி ஓடும். பளிங்கு மாதிரியான
தண்ணீர் போகும் பாக்கறதுக்கு கொள்ளை அழகா இருக்கும். காலுக்கடியில் மணல் கரைஞ்சி போறது, குட்டி குட்டி மீன்கள் கூட்டம் கூட்டமா போறது இதெல்லாம் ரசிச்சிகிட்டே இருப்பேன். காலையில் எழுந்ததும் வீட்டுக்கு பின்னாடி இருக்கும் வாய்க்காலுக்கு போய் பத்து மணி வரை குளிப்பேன் கரைக்கு வந்து சாலையோரம் இருக்கும் ஒரு வீட்டுல ஒருத்தர் பானை செய்வார். சக்கரத்தில களிமண்ணை அப்பி அதையே கொஞ்ச நேரத்தில அழகான பானையா மாத்திடுவார். என்னை மறந்து இதையெல்லாம் பாத்துகிட்டு இருக்கும்போது வீட்டுல இருந்து யாராவது ஆள் தேடிகிட்டு வந்திடுவாங்க.
5. கிரிக்கெட்
சோறு தண்ணி இல்லாம நாலு நாள் விளையாட சொன்னாலும் விளையாடுவேன் ஆனால் நாந்தான் மட்டைய பிடிக்கிறவனா இருக்கணும். அடிக்கிற வெய்யில்ல ரேஷன் கடைக்கு போகணுமா போம்மா எல்லாம் சாயங்காலம் வாங்கிக்கலாம்னு சொல்லிட்டு பக்கத்து ஊருக்கு சைக்கிள்ல போய் விளையாடிட்டு வந்ததை இப்பொ நினைச்சாலும் சிரிப்பா இருக்கு.
6. ஜீப்
ஏதோ ராணுவத்துல வரும் ஜீப் என்று நினைக்காதிங்க. எங்க வீட்டுக்கு பக்கத்தில சவுண்ட் சர்வீஸ் ஒண்ணு
இருக்கு அங்க கல்யாணத்துக்கு மாப்பிள்ளை ஊர்வலம் போக வர என்று ஜீப் வச்சுருக்காங்க அவரோட
பையன் நமக்கு தோஸ்த். அவங்கப்பா இல்லாத நேரத்தில அந்த ஜீப்ல ஒரு ரவுண்ட் போய் வருவது
பிடித்த விஷயம். அதுவும் அவன் உதவி இல்லாம ஏரிக்கரை வரைக்கும் தனியா ஓட்டிகிட்டு போய்
வந்தா விமானத்தையே ஒட்டிட்டா மாதிரி ஒரு பீலிங் வரும் பாருங்க.
பிடிக்காத ஆறு
1. குறட்டை
பிடிக்காததில முதலிடம் இதுக்குதான். வீட்ல இருந்த வரைக்கும் ஒண்ணும் தெரியலை. இங்க (துபாய்) வந்த
பிறகு பிரச்சினை பூதாகரமா வெடிச்சிடிச்சி. நான் தங்கி இருந்த அறையில மொத்தம் அஞ்சு குறட்டை
குறட்டைல இத்தனை ரகமா என்பது இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது.
2. இந்தி
உடனே தாத்தா மாதிரியான ஆளுன்னு நினைச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல. எனக்கு இந்தி பேச
தெரியாது என்பதால்தான் அதை பிடிக்கவில்லை. எனக்கு இந்தி தெரியாதுடா என்று தலைப்பாடா
அடிச்சிகிட்டாலும் என்கிட்ட இந்தி பேசுறவனை கண்டா கல்லாலே அடிக்கணும் போல தோணும்.
என்னவோ தெரியலை இந்திய கத்துக்கணும் என்ற ஆர்வமே இல்லை.
3. காய்கறி
சாம்பார்லயோ குழம்புலயோ காய்கறி இருந்தால் சாப்பிடவே மாட்டேன். அப்படியெ இருந்தாலும்
காய்கறி தவிர மீதி இருக்கற ரசத்தில சாப்பிட்டு சமாளிச்சிடுவேன். இதனாலயே என் அப்பா
பக்கத்தில உக்காந்து சாப்பிடவே மாட்டேன் ஏன்னா அவர் என் தட்டு நிறைய காய அள்ளி
போடுவார் அதை சாப்பிட முடியாம அப்படியே உக்காந்து இருப்பேன். முக்கியமா கத்திரிக்கா,
முட்டைகோஸ் என்றால் ஒரு கிலோ மீட்டர் ஓடிடுவேன்.
4. தூக்கத்தில யாராவது எழுப்பினா கடுங்கோவம் வரும்.
5. தொலைக்காட்சில வரும் தொடர் நாடகம்னா சுத்தமா பிடிக்காது. ரெண்டு நாடகம் பத்துட்டு
ஏதாவது ஒரு பொண்ணை பாத்தா வில்லியாதான் தெரியுது. அது என்னனு தெரியலை பெண்களை
கேவலமாக சித்தரிக்கும் நாடகங்களை பெண்கள்தான் அதிகமா பார்க்கிறார்கள்.
6. ஜோசியக்காரன் & கல் விக்கறவன்
இவனுங்க சொல்றதை கேட்டோம்னா உருப்படவே வழி இருக்காது. இதை போட்டிங்கன்னா எண்ணி
பத்தே நாள்ல உங்களுக்கு செல்வம் தேடி வரும், உங்க வீட்ல தோஷம் இருக்கு அதை நீக்க
ஒரு பரிகாரம் செய்யணும்னு சொல்லிகிட்டு கைல ஒரு எலுமிச்சம்பழத்தை வச்சிகிட்டு லோலாயி
பண்றவனை கண்டா அப்படியே கொண்டு போய் பாகிஸ்தான் பார்டர்ல விட்டுறணும். வீட்டுகுள்ள
விட்டா அவ்ளோதான் உங்க நிம்மதிய துடைச்சி எடுத்துகிட்டு போய்டுவான்.
அந்த வரம்
100 கோடி ரூபாய் சூடான பணமா (அதாங்க ஹாட்கேஷ்) வேணும்னு கேப்பேன் அதை அப்படியே கமலுக்கு மணியார்டர் அனுப்பி நின்று விட்ட மருதநாயகத்தை தொடர சொல்வேன்.
ரொம்ப ஓவரா இருக்கோ.

Subscribe to:
Posts (Atom)