எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, June 26, 2006

கனவுகளைப்பற்றி...

கனவுகளை பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன கருத்து சொல்றங்கனு வார இதழ் ஒன்றின்
கட்டுரை படித்ததால் இந்த பதிவு.


நாம் காணும் கனவுகள் சிலமுறை சந்தோஷத்தை தந்தாலும் பலமுறை வீணான குழப்பங்களையே தருவது போல தோன்றூம் காரணம் நம்மில் உலவி வரும் கனவுகள் பற்றிய மூடநம்பிக்கைகள்.காலையில் கண் விழித்ததும் இரவு நான் கண்ட கனவுகளை நினைவுபடுத்த முயன்றிருக்கிறேன் கடைசியில் தோல்விதான் மிஞ்சும். சில சமயம் நினைவுபடுத்துகையில் பாதி கனவுவரை நினைவில் வந்து திடீரென்று மறைந்து போகும் பிறகு எதைப்பற்றி கனவுகண்டோம் என்று எப்படி முயற்சித்தாலும் ஞாபகத்திற்கு வரவே வராது. சில கனவுகள் பயங்கரமான அனுபவத்தை தரும் அது இரண்டு மூன்று நாட்கள் கூட மறையாத கனவுகளும் காலத்திற்கும் மறக்கமுடியாத கனவுகளும் உண்டு. என்னை பொறுத்த தூங்க போகும்முன் என்ன நினைக்கிறோமோ அதுதான் பெரும்பாலும் கனவில் அதனால் புத்தகங்களை படித்துக்கொண்டே உறங்கி விட்டால் வீணான கனவுகள் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. முக்கியமாக பேய் படம் அடிதடி சண்டை படம் பாத்துட்டு தூங்க போனால் கண்டிப்பா எதாவது கெட்ட
கனவு வந்து தொல்லை கொடுக்கறதுனால இப்போ இரவில் படமே பாக்கரது இல்லை.

சரி ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்றாங்க பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருநாள் இரவில் ஆறு கனவுகள் வருவதாக ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர் ஒவ்வொரு கனவும் குறைந்தது 10 நிமிடங்கள் நீடிக்கின்றன!. என்கிறார் தூக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள செம்டெக் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் ஹார்ட்மென்.

கனவுகளுகு ஜாதக ரீதியாக பலன்கள் உண்டோ, இல்லையோ, ஆனால், விஞ்ஞான
ரீதியாக பலன்கள் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நமது தூக்க ஓய்வின் போது தசைகள் தூண்டிவிடபடுகின்றன. அதனால், மூளை லட்சக்கணக்கான நரம்பியல் தொடர்களை தூண்டி விடுகிறது. அவை பிம்பங்களாக தெரிகின்றன. நரம்பியல் சமிக்ஞைகளின் மூலம், தான் தோன்றி தனமாக தோன்றூம் பல்வேறு பிம்பங்களை நமது மூளை இணைத்து ஒரு கனவாக உருவாக்குகிறது.

விஞ்ஞான பூர்வமாக இப்படி 1973ல் கனவை பற்றி கூறினர். ஆலன் ஹாப்ஸன் மற்றும் ராபர்ட் மெக்கார்லே எனும் விஞ்ஞானிகள்.

ஒரு பிரச்சினையில் சரியான தீர்வுக்கு வரமுடியவில்லையா? கவலையை விடுங்கள். அந்த
பிரச்சினையை பற்றியே சிந்தித்தபடி தூங்கி விடுங்கள். அந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு
கிடைக்கலாம் என்கிறார் அமெரிக்காவின் அறிஞர் கார்பீல்டு. தினமும் ஏதேனும் பயங்கரமான கனவுகள் தோன்றினால் அது உங்களுக்கு ஏதொ ஒன்றை உணர்த்த முயல்கின்றன என தெரிந்துகொள்ளுங்கள் என்கிறார் கார்பீல்டுபிரபல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், துப்பறியும் நிபுணர்களுக்கு சில விஷயங்களில் அவர்கள் மண்டையை போட்டு உடைத்து கொண்ட போதெல்லாம் அவர்கள் கண்ட கனவுகள் மூலமே
நல்ல தீர்வு கிடைத்தது என்கிறது வரலாறு.

டாக்டர் ஜக்கைல் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ராபர்ட் லூயிஸ்ஸ்டீவன்சனுக்கு அவர் கணட கனவு கனவுதான் உதவியது. தையல் இயந்திரம் கண்டுபிடிக்கும் போது, பல தவறுகள் செய்தபடி இருந்தார் எல்லீஸ் ஹோவோ என்பவர். இறுதியில் அவர் கண்ட கனவின் மூலமே அந்த தவறுக்கு சரியான தீர்வு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இரவில் நீங்கள் கண்ட கனவினை துல்லியமாக நினைவில் வைத்திருந்து திரும்ப நினைத்து பார்க்க முடியுமானால், அது உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேற பல நல்ல உத்திகளை தெளிவுபடுத்தும் என்கிறார் டாக்டர் கோல்டர் ரூல்.


இப்படி போகிறது கனவுகளின் ஆராய்ச்சி.


பெரும்பாலும் எனக்கு கனவில் நடந்தது ஞாபகத்தில் இல்லையென்றாலும் ஒரு சில கனவுகள் இன்னமும் என்னால் மறக்கவே முடியாது. அவற்றுள் ஒன்றுதான் என் அண்ணனை நானே அருவாளால் வெட்டுவது போல வந்த கனவு. அன்னிக்கு திருப்பச்சி மாதிரி எதாவது படம் பாத்து இருப்பேன்னு நினைக்கிறேன்.

என்னதான் இருந்தாலும் கனவுலகம் என்பது சுவாரசியமான ஒன்றுதான்.

14 comments:

Jay said...

யப்பா!
இறுதியில் போட்டீங்களே ஒரு அருவா வீச்சு புல்லரிச்சுப் போயிட்டேன்யா!

நாகை சிவா said...

கனவா....... ஹம், நல்ல ஆராய்ச்சி தான்.
உங்களுக்கு அந்த கொப்பரை தாத்தா சிறுகதை நல்லா இருந்தது அதற்க்கும் ஒட்டு போட்டேன். இந்த மாத போட்டியிலும் கலந்து கொள்ளவும். வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

Word Verification தூக்குப்பா ன :(

Costal Demon said...

நல்லாருக்கு. அருவா மேட்டர்தான் பயமுறுத்துது...

ஆமா அதெதுக்கு word verification?

Costal Demon said...

நல்லாருக்கு. அருவா மேட்டர்தான் பயமுறுத்துது...

ஆமா அதெதுக்கு word verification?

கதிர் said...

நன்றி சிவா. நமக்கும் னாலு பேர் ஓட்டு போட்டாங்கனு நினைக்கும்போது ஆச்சரியமா இருக்கு. ரொம்ப நன்றி சிவா

இந்த மாத போட்டியில கலந்துக்கணுமா வேணாமா யோசிச்சிட்டு இருக்கேன்.
ஏன்னா மரணம் பத்தி அதிகம் தெரியலை.

முயற்சி செய்கிறேன்.

அன்புடன்
தம்பி

கதிர் said...

எனக்கும் பயமாதான் இருக்குது ராம்ஸ்
எல்லாரும் கனவு மெய்படணும்னு வேண்டிக்குவாங்க. நான் அந்த கனவு மெய்யாக கூடாதுனு வேண்டிகிட்டு இருக்கேன்.

word verification வேணாம்னா எடுத்துடரேன்

அன்புடன்
தம்பி

கார்த்திக் பிரபு said...

good poest..keep it up tambi!

Chandravathanaa said...

கனவு பற்றிய தகவுல்களுக்கு நன்றி.
அந்த அரிவாள்தான் பயமுறுத்துது.

Jazeela said...

கனவு கலைந்து விட்டதா? நானும் கனவு கண்டால், மறந்து விடாமல் இருந்தால் intrepretation of dreams site போய் எட்டி பார்த்துவிட்டு வருவது வழ்க்கமில்ல எப்பவாவது அப்படி செய்வேன். ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.
http://jazeela.blogspot.com/2006/07/blog-post_09.html

மஞ்சூர் ராசா said...

எனக்கு பத்து வருடங்களுக்கு முன்பு வரை தூங்க ஆரம்பிக்கும் போதும் இல்லே எப்பனாச்சி முழிப்பு வரும் போதும் ஒரு துப்பாக்கி என் கையில் இருப்பது போலவும் அதன் மூலம் அநியாயம் செய்பவர்காள் பலரை சுட்டு கொல்பது போலவும் கனவாகவும் இல்லாமல் நினைவாகவும் இல்லாம்ல வரும். ஆனால் இப்பொழுதெல்லாம் வருவதில்லை.

இருந்தாலும் சில கனவுகள் வேறு ஏதாவது இடத்தில் நமக்கு நெருங்கிய சொந்தங்களுக்கு நடந்திருக்கும் நிகழ்ச்சியுடன் தொடர்புடையதாக இருப்பது தான் ஆச்சரியம். இதுபோல எனது மனைவிக்கு அடிக்கடி வரும். உடனே அவள் இன்று என்னமோ நடந்திருக்கு ஊரில் என்பாள். அதுபோலவே ஏதவது நிகழ்ச்சி அன்று நடந்திருக்கும். தொலைபேசி செய்தி வரும். இப்படி பல முறை நடந்திருக்கிறது.

aravindaan said...

எனக்கு பல கனவுகள் பளித்துள்ளது. அதுவும் அடிக்கடி ஒரு கணவு வரும் நான் காரில் போவது போல் அது ஆச்சிடன்டு ஆகுவது போல். கார் பறந்து போவது போல். அது மாதிரி தான் ஆனது.

அடுத்த கணவு. ஒரு மரம் முறிவது போல் ஒரு காணவு அடுதனால் காலை எனது நன்பர் உண் காண்ட்ராக்ட் இந்த மாதத்துட்ன் முடிந்தாலும் முடிந்துவிடும் என்றார். இப்போதே அடுத்த வேலை தேடிக்கோ என்றார்.

கதிர் said...

சந்திரவதனா,

"கனவு பற்றிய தகவுல்களுக்கு நன்றி.
அந்த அரிவாள்தான் பயமுறுத்துது. "

வருகைக்கு நன்றி வதனா. எனக்கும் பயமதான் இருக்குங்க. இந்த கனவு மட்டும் பலைக்கவே கூடாதுனு வேண்டுகிறேன்.

ஜெஸிலா,

கனவு கலைஞ்சதும் பிரச்சினை, அது இன்னும் ஞாபகத்தில இருக்கறதும் பிரச்சினை. நன்றிங்க அக்கா.

மஞ்சூர் ராசா,

வாங்க ராசா.

"எனக்கு பத்து வருடங்களுக்கு முன்பு வரை தூங்க ஆரம்பிக்கும் போதும் இல்லே எப்பனாச்சி முழிப்பு வரும் போதும் ஒரு துப்பாக்கி என் கையில் இருப்பது போலவும் அதன் மூலம் அநியாயம் செய்பவர்காள் பலரை சுட்டு கொல்பது போலவும் கனவாகவும் இல்லாமல் நினைவாகவும் இல்லாம்ல வரும்."

கண்டிப்பா இது திரைப்படங்களின் தாக்கம்தான். தூங்கப்போகும்முன் பார்க்கும் விஷயங்கள் தூக்கத்தில் பரதிபலிப்பதின் விளைவே அது. கவலைபடாதிங்க அதுதான் இப்போ சரி ஆகிடுச்சே. வருகைக்கு நன்றி


அன்புடன்
தம்பி

கதிர் said...

அரவிந்தன்,

//எனக்கு பல கனவுகள் பளித்துள்ளது. அதுவும் அடிக்கடி ஒரு கணவு வரும் நான் காரில் போவது போல் அது ஆச்சிடன்டு ஆகுவது போல். கார் பறந்து போவது போல். அது மாதிரி தான் ஆனது.//

அச்சச்சோ அப்புறம் என்னங்க ஆச்சு?.
இப்போ சரி ஆகிருச்சுல்லே கவலைய விடுங்க. அடுத்தமுறை அது போல கனவு வந்தால் ஞாபகமா மறந்திடுங்க. :)


உங்களுக்கு எதோ அசாத்திய திறமை இருக்குனு நினைக்கிறேன். இல்லைனா பின்னாடி நடக்க போறது முன்னாடி தெரியுமா? :) :)

தொடர்ந்து வருகை தாருங்கள்.

அன்புடன்
தம்பி