எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, June 19, 2006

ஜுஜுபி மேட்டர்

என்னத்த சொல்றது. ஏதோ நாமளும் போட்டியில கலந்துக்கலாம்னு சிறுகதை (நிசமாதாங்க) எழுதி போட்டு வச்சேன். சரி இதுக்கு வரும் பின்னூட்டம் மற்றும் வசவுகளை வச்சி அடுத்த விஷப்பரிட்சையில இறங்கலாமா வேணாமானு முடிவு பண்ணிட்டுதான் எழுதினேன். எழுதி முடிச்சுபதிச்சும் பார்த்த பிறகுதான் தெரிஞ்சது பின்னூட்டம் இட தேவையான சுட்டி இருக்க வேண்டிய இடத்தில ஒண்ணுமே இல்ல. என்னடா இது வம்பா போச்சுனு கூடுமானவரைக்கும் முயற்சி பண்ணி பாத்துட்டு கடைசில இதுக்கு மேல நோண்டினா எங்க வலையே காணாம போய்டுமோ என்ற பயத்தில அப்படியே விட்டுடேன்.

யார்கிட்ட போய் கேக்கறது எப்படி கேக்கறது. என்னை போல புதுசா வலைப்பதிய வந்தவங்களுக்கு யாராச்சும் நம்மள படிக்கறாங்களா இல்லையானு தெரிஞ்சிக்கறதே பின்னூட்டத்தை வச்சிதான். கொஞ்சம் மனசை தேத்திகிட்டு நம்ம சாத்தான் கிட்ட கேட்டேன் தெரியலை தம்பினு சொல்லிட்டார். சரி நமக்கு நாமே திட்டதிலதான் முடியும்னு தோணவே பொறுமையா உக்காந்து தேடினேன் பின்ன சிக்கிடுச்சி.என்னடானு பாத்தா ஜுஜுபி மேட்டர். பப்ளிஷ் பண்ற இடத்திலயே பின்னூட்டம் தேவையா தேவையில்லையா என்ற ஆப்ஷன் இருக்கும் அது நோ என்று இருந்ததை யெஸ் என்று மாத்தின உடன் பிரச்சினை தீர்ந்தது.

இதுக்கெல்லாம் ஒரு பதிவானு நீங்க மனசுல நினைக்கறது தெரியுது. மத்தவங்க (புதியவர்கள்) இதனால பாதிக்கப்பட்டிருந்தா சுலபமா பிரச்சினை தீர்த்துக்கலாமே என்ற நல்ல எண்ணம்தாங்க.

4 comments:

கார்த்திக் பிரபு said...

Hi thambi..nalama..edharkum kavalai padamal padhivugali podungal..ippa than ennaku oru nambikkai pirandhiruku..

udhavi edhenum vendumnnal anugungal..nan oralavuku pick up pannvitane..varatumma..bye

தம்பி said...

நன்றி கார்த்திக். சந்தேகம் இருந்தால் கட்டாயம் கேக்கறேன்.

மஞ்சூர் ராசா said...

தம்பி, முக்கியமான ஒரு விசயத்தெ சொல்லியிருக்கீங்க. இது பலருக்கும் பயன்படும்.

நன்றி.

கீதா சாம்பசிவம் said...

நீங்களே இப்படின்னா நான் எல்லாம் எம்மாத்திரம்? ஆனால் என்னோட நோக்கமே பின்னூட்டம் வாங்கறதுங்கறதாலே அதிலே எல்லாம் ஜாக்கிரதையா இருப்பேன். முக்கியமா அதுக்கெல்லாம் யெஸ் சொல்லிடுவேன்.