
சும்மா திகு திகுன்னு நமீதா உசரத்துக்கு இருப்பா மாப்ள
மாநிறந்தான் ஆனா அவ்ளோ அழகு
Black roseனு எழுதிருக்க கறுப்பு கார்லதான் வருவா
லெம்பு ரோட்லதான் எப்பவுமே பார்க் பண்ணியிருக்கும்
26 வயசுக்கு மேல இருக்கறவன ரிஜக்ட் பண்ணிடறாளாம்
ரேட்டு கொஞ்சம் ஜாஸ்திதான் என்று ரோபோ பாரில்
அமர்ந்தபடி 3 1/2 வெள்ளி பியரை அருந்திக்கொண்டிருந்த
20 வெள்ளி சம்பளக்காரனும் சும்மா அமர்ந்திருந்த
18 வெள்ளி சம்பளக்காரனும் பெருமூச்சொன்றை
விட்டபடி பேசிக்கொண்டிருந்தனர். அம்மூச்சின்
சிறு துகளொன்று சற்று தள்ளி ஏதோ ஒரு
அறையில் ஒப்பனையிலிருந்த கறுப்பு நமீதாவின்
அருகிலே செல்லமுடியாமல் ஏமாற்றத்துடன்
திரும்பிக்கொண்டிருந்தது.
4 comments:
/துகலொன்று/ துகளொன்று?
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர் :)
கலக்குறீங்களே!! எங்க எப்படி இருக்கீங்க தலைவா!
அம்மூச்சின்
சிறு துகளொன்று ...ஏமாற்றத்துடன்
திரும்பிக்கொண்டிருந்தது.. .
are you in safer side...
ie. below 26....
Post a Comment