நண்பர்களுக்கு
சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.
எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.
கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.
விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.
முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்
இதை இட்லிவடையில் வெளியிட்டு உதவும் உள்ளங்களுக்கு தெரியப்படுத்திய இட்லிவடை நண்பர்களுக்கு நன்றி.
வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே
Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk
முகவரி :
P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt
தொலைப்பேசி: 9791460680 கதிர்
அன்புடன்
கதிர்
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
எங்களாலான ஆனா உதவியை செய்கிறோம் தோழரே!
மனம் கனக்கச் செய்கிறது கதிர். நிச்சயம் எங்களால உதவியை செய்கின்றோம்.
Jaipur NGO's must have facility to help on this.. could anyone get the details on this.. I try to get it
நிச்சய முதவுவோம் கதிர்
ஆனவரை!
ஜெய்ப்பூர் புட் கேம்ப், மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி மற்றும் டவ் இந்தியா சார்பில் ஊனமுற்றோர்களுக்கான செயற்கை பாதம், காலிப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
நன்றி நண்பர்களே...
முதலில் எக்மோர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர் அங்கேயே செயற்கைக்கால் பொருத்துவதாக கூறியிருக்கின்றனர் பிறகு தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளுமாறு எழுதிக்கொடுத்தனர் அங்கே என்ன காரணத்தினாலோ இருமுறை திருப்பி அனுப்பிவிட்டனர். காயங்கள் முழுமையாக ஆறவில்லையென்பதாலா வேறு என்ன காரணமோ தெரியவில்லை.
http://www.jaipurfoot.org/default.asp
hi,
the place name you have given may not be correct
It is only shows as KACHARAPALAYAM
just check this and correct if wrong.
மின்னல் தகவல்களுக்கு நன்றி
branch name kacharapalayam.
நன்றி
@கவிதா...
ஜெய்ப்பூர் கால் பொருத்துவதென்றுதான் சென்னை செண்ட்ரல் மருத்துவமனையில் முடிவு செய்திருந்தார்கள் பிறகு பையனுக்கு அம்மை போட்டிருந்ததால் வீட்டிற்கு அனுப்பினார்கள். அம்மை சரியான பின்பு போனால் ஏதோ காரணம் சொல்லி இருமுறை திருப்பி அனுப்பியுன் இந்து மிஷன் மருத்துவமனைக்கு சிபாரிசு செய்தும் அனுப்பிவிட்டனர். தற்போது அவனுடைய வலது கால் எரிந்த நிலையிலேயே கட்டு போட்டதால் நீட்ட மடக்க முடியவில்லை. சதைகள் ஒட்டிக்கொண்டுவிட்டன அதை சரி செய்து நீட்டி மடக்க வழிசெய்யுமாறு சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது. அதேபோலவே இடது கையின் மூன்று விரல்களும் மடங்கிய நிலையிலேயே உள்ளது. அந்தப்பையனுக்கு உடலில் மொத்தமாக இயங்குவது இரண்டே இரண்டு விரல்கள்தான். சிகிச்சையளித்தால் மூன்று விரல்களை அசைவுக்கு கொண்டுவரலாம் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.
இதையெல்லாம் சரிசெய்வதற்கே இரண்டுமாதங்களுக்கு மேல் ஆகுமாம் அதன் பிறகே கால்கள் பொருத்த தேவையான முயற்சிகளை எடுக்கவேண்டும்.
Hi, we sent rs.30000 to the acct, thru icici transfer. pls confirm.
we pray for his speedy recover.
Thanks
Elango & Poorna
என்னால் ஆன தொகையினை அனுப்பிவிடுகிறேன். மேலும் என் வலையிலும் வெளியிடுகிறேன். எனக்கு அனுப்பிய தோழிக்கு நன்றி.
I've connected to the Jaipur NGO.Waiting for a positive reply.அதுவரை பிராத்தனைகளுடன்.
@poorna
Thanks for your helping heart
till now your contribution is not credited. expecting tomorrow. i will let you when it credited.
செந்தழல் ரவி
நன்றி ரவியண்ணா.
அருணா.
உங்களது முயற்சிக்கு நன்றிகள்.
@poorna & Elango
Just now got a SMS. rupees 30000 has been credited.
Thanks a lot again
Kathir
குறைந்த எதிர்பார்ப்புகளோடுதான் இந்தக்கோரிக்கையை உங்கள் முன் வைத்தேன். ஆனால் எல்லாத்திசைகளிலிருந்தும் நேசக்கரங்கள் நீண்டு வருகிறது குறித்து மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. உதவிய உங்களது கரங்கள் அச்சிறுவனது கரத்தை குலுக்கட்டும். சிறுவனின் அம்மாவிடம் இந்த நான்குபுறமிருந்து வரும் நிதிகளைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அவரால் நம்பவே முடியவில்லை. முகம் தெரியாத அந்த இளகிய உள்ளங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்கச்சொன்னார்.
இலக்காக ஒரு லட்சம் வரும் என்று நினைத்திருந்தேன். கிட்டத்தட்ட அதில் பாதியளவு இந்த நிமிடம் வரை சேர்ந்திருக்கிறது. இந்தப்பதிவு இன்னும் பலரை சென்றடைய படிக்கும் அனைவரும் தங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
கதிர்
சிறு வயதில் ஒரு முறை இந்த மாதிரி ஒரு வயரில் டெஸ்டரை வைத்து சோதிக்க போனேன். ஒரு பெரியவர் தடுத்தார். அவரை இப்போதும் அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். இன்று என் மகன்களோடு நடந்து வந்தபோது ஒரு மிகச்சிறிய பறவைக்குஞ்சு இறந்து கிடந்தது. மகன்களிடம் அரிது, அரிது மானிதராய்ப் பிறத்தலரிது பற்றி விளக்கிக்கொண்டு வந்தேன். வீட்டில் வந்து பார்த்தால் இந்த செய்தி. கஷ்டமாய் இருக்கிறது. என்னாலான உதவி செய்திருக்கிறேன்....
நன்றி நாகு, பெரும்பாலும் வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சார அளவு குறைந்த அழுத்தம் கொண்டதாகவே இருக்கும். நான்கூட சிறுவயதில் ஃப்ளக்குகளின் உள்ளே ஆணிகளை விட்டு ஆட்டியிருக்கிறேன் இரண்டு நொடிகள் உதறிப்போடும் அவ்வளவே. இருப்பினும் ஆபத்தில் என்ன பெரிய ஆபத்து சின்ன ஆபத்து. அந்தப்பெரியவர் நினைவுகூறத்தக்கவர்தான்.
நன்றி.
கதிர், ஐசிஐசிஐ ஆன்லைன் மூலமாக அனுப்ப முயற்சித்தால் கச்சராப்பாளையத்திற்கு அனுப்ப முடியவில்லை. பெருநகரங்களில் இருக்கும் வங்கிக்கணக்கு எதாவது கிடைக்குமா, அல்லது எதாவது ஐசிஐசிஐ கணக்கைத் தர இயலுமா?
இந்தியன் வங்கி கச்சிராப்பாளையம் குறித்த மேலதிக தகவல்கள்.
Bank Name: Indian Bank
Branch: Kacharapalayam
Center: Kacharapalayam
IFSC Code: IDIB000K001
MICR Code: 606019007
Address: 10-f Gomuhi Dam Road Kacharapalayam Vadakkanandal Post 606207
District: Villupuram
State: Tamil Nadu
kandippa kathir... naanum kalla kuruchi than... poie parthuttu kandippa help panren...
ICICI மூலமாக ட்ரான்ஸ்பர் செய்ய முடியாதவர்கள் கீழ்க்கண்ட நண்பரின் அக்கவுண்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யலாம். அவர் எனக்கு மாற்றி விடுவார்
Account Number : 00821140064566
Bank : HDFC Bank
Brach : Nungambakkam, Chennai
Name: TV Pradeepkumar
Mr.Hello
நீங்கள் கள்ளக்குறிச்சியாக இருந்தால் எனக்கு தொலைபேசியிருக்கலாம். செல் 9791460680
அமெரிக்காவில் இருப்பவர்கள் வரிச்சலுகையுடன் நன்கொடை அனுப்பலாம். உங்கள் காசோலையை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
Channels of Glory
404 E Laurelwood Dr
Bloomington, IN 47401
காசோலையை 'Channels of Glory' பெயருக்கு அனுப்பவும். காசோலையில் குறிப்பு எழுதுமிடத்தில் 'Towards Suman, Kacharapalayam, India" என்று எழுத மறக்காதீர்கள். பிறகு கதிருக்கு Channels of Glory க்கு அனுப்பிய தொகை என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிடுங்கள். அவருடைய எண்: +91-9791460680
ஐசி ஐசி ஐ மூலம் அனுப்ப முடியவில்லை என்று ஒரு நண்பரும் சொன்னார். money2india மூலம் அனுப்ப முடியும்.
https://m2inet.icicibank.co.in/m2iNet/m2iNetLoginForm.jsp
தேவையான மூன்று விஷயங்கள்:
கதிரின் செல்பேசி எண், வங்கியின் தொலைபேசி எண்(பெறுநரின் எண்ணாகப் போட்டேன் :-))
கச்சராப்பாளையத்தின் பின்கோடு.
மற்ற விஷயங்கள் எல்லாம் கதிரின் பதிவில் இருக்கிறது.
//ICICI மூலமாக ட்ரான்ஸ்பர் செய்ய முடியாதவர்கள் கீழ்க்கண்ட நண்பரின் அக்கவுண்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யலாம். அவர் எனக்கு மாற்றி விடுவார்//
தனிமடலிலும் விபரத்தை அனுப்பியமைக்கு நன்றி கதிர்
Kathir, I will do my best.
ஒரு சிறுதொகையினை, சிறுவனின் விலாசத்திற்கு ICICI Smart Money Order மூலம் அனுப்பியுள்ளேன்.
சரிங்கண்ணா... செய்வோம்.
கதிர்
சுமனின், இப்போதைய நிலையை (மற்றும் தேவைப்படும் பணம்) தெரிவிக்க முடியுமா? நான் என்னாலான முயற்சியை செய்கிறேன்.
கதிர்,
சுமனின் தற்போதைய நிலை (மற்றும் தேவைப்படும் தொகை) தெரிவிக்க முடியுமா?
நன்றி.
அன்பு மாதேஸ்வரன்.
தாமதத்திற்கு மிகவும் வருந்துகிறேன். இணையம் பக்கம் வர சந்தர்ப்பமில்லாத சூழ்நிலை அதனால் தகவல்களை பெற முடியவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு சேர்ந்திருந்த நிதி மொத்தமாக சுமனின் தாயிடம் கொடுத்து விட்டோம். மொத்தம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய். பேச வார்த்தைகளின்றி கண்ணீரால் மட்டுமே பதில் சொன்னார். முகம் தெரியாத இளகிய மனம் கொண்டோரின் உதவியால் ஒரு சிறுவனின் எதிர்காலம் பிரகாசமடைந்திருக்கிறது. உதவியளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
சுமனின் தற்போதைய நிலவரம் செயற்கை கை மற்றும் கால்களை பொருத்த போதுமான நிதி கையிருப்பில் உள்ளது. மேலும் அசைவது போன்ற செயற்கை கை பொருத்துவதானால் மிகுந்த செலவாகும் என்று மருத்துவர் கூறினார். மேலும் அதுபோன்ற செயற்கை கை வளர்ந்துகொண்டிருக்கும் சிறுவர்களுக்கு பொருத்த இயலாது என்றும் சொல்லிவிட்டார். நண்பர்களின் உதவியால் தேவைக்கு மேல் உள்ள தொகையை சிறுவனின் எதிர்கால படிப்பு செலவுக்கு செய்யுமாறு கூறியுள்ளேன். தற்போது விரல்கள் ஒட்டியிள்ளவற்றை பிரித்து அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. சிறுவனின் உடலும் சிகிச்சைக்கு ஒத்துக்கொள்வதில்லை. மேலும் சில சிறிய பிரச்சினைகளினால் செயற்கை கை, கால் பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த மாதத்திற்குள் கால் பொருத்த திட்டமிட்டபடி மருத்துவரின் ஆலோசனையுடன் முயற்சி செய்து வருகிறோம்.
சமீபத்தில் துபாயிலிருந்த ஒரு நண்பர் விடுமுறைக்கு வந்திருந்தபோது சிறுவனை சந்தித்து ஆறுதல் அளித்தார். எளிமையான அந்தக்குடும்பத்திற்கு அது மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் நண்பரே.
அன்புடன்
கதிர்
Nanum enathu kaloori nanbarkalum engalal ana uthaviyai seikindrom....
Nanum enathu kaloori nanbarkalum engalal ana uthaviyai seikindrom....
தகவல்களுக்கு நன்றி கதிர்
> ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய்.
Great. Thats a huge sum. உங்கள் முயற்சி மற்றும் பதிவுலக நண்பர்களின் உறுதுணை இதை சாத்தியமாக்கியது. அனைவருக்கும் நன்றி.
> நண்பர்களின் உதவியால் தேவைக்கு மேல் உள்ள தொகையை சிறுவனின் எதிர்கால படிப்பு செலவுக்கு செய்யுமாறு கூறியுள்ளேன்.
மிகவும் சரி.
> இந்த மாதத்திற்குள் கால் பொருத்த திட்டமிட்டபடி மருத்துவரின் ஆலோசனையுடன் முயற்சி செய்து வருகிறோம்.
நல்லது நடக்கட்டும். இந்த பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.
இப்போ பையன் எப்படி இருக்கான் ?
பூரண நலமுடன் தரமான கல்வியுடனும் மகிழ்ச்சியாக இருக்கிறான். கால்பொருத்திய பிறகு மீண்டும் பழையபடி ஓடியாடி விளையாடுவதா அவனது தாய் போனில் சொல்லுவார். கை பொருத்தியபிறகு பார்க்கவில்லை. பொங்களுக்கு ஊருக்குப்போகும்போது புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.
நன்றி ரவி அண்ணா.
இணையம்பக்கம் முன்பு மாதிரி வர இயலவில்லை. தாமதமான மன்னிக்கவும்
We are glad that boy is doin gd.May god bless him...
அவ்வப்போது நினைப்பதுண்டு இந்தப் பையனைப் பற்றி.
எப்படி இருக்கிறான் இப்போது என்று எழுதவும். படம் கிடைத்தாலும் போடுங்கள்.
Post a Comment