காற்றடிக்கும்போதெல்லாம் என்னறையின்
வாசல்புற சாக்கடையில் பூக்கள் மிதந்து
வருகின்றன. பக்கத்து வீட்டின்
காம்பவுண்ட் சுவர்களுக்கப்பால் வளர்ந்த
பவழமல்லிகை கிளையொன்று
காற்றுடன் சல்லாபிக்கும் ஒவ்வொரு
தருணத்திலும் பூக்களை உதிர்க்கின்றது.
இத்தெருவிலே பல பூமரங்களுண்டு
அனைத்துமே சுவரைவிட்டு தள்ளியே
கிளைபரப்புகிறது. அனைத்துமே பூக்களை
உதிர்க்கின்றது பல வண்ணங்களில்
சாக்கடைப்பூக்கள். இந்த நகரத்திலே
பெண்கள் பூக்களை சூடுவதில்லை
சாக்கடைக்குதான் வாய்த்திருக்கிறது.
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பூச்சுகளற்ற கவிதை...
கவிதை நல்லா இருக்கு கதிர்.
நல்லாயிருக்கு ;)
நன்றி கவிஞர் ரவுத்ரன்...
ஜ்யோவ்
கவிஞர் நீங்களே சொல்லிட்டிங்கன்னா இது நல்ல கவிதைதான்.
கோபி
நன்றி
Post a Comment