எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, November 01, 2008

நெடிதுயர்ந்த பனையின் நிழல்


நெடிதுயர்ந்த பனையின் நிழல் நகரும்
கதிரவனின் நகர்விற்கேற்ப
நகர்கிறோம் நானும் நீயும். நிரந்தரமென்றோ
தற்காலிகமென்றோ வரையிடமுடியாத
தனிமை. தனிமை சுகிக்கும் கணங்களாக
நான் குறிப்பிடுபவையாவன சிலது கேள்.
தொட்டாற்சிணுங்கி தொடு பின் தழை
விரியும் கணங்கள் காத்திரு.
அடர்மழை காண் அதன் கடைசித்துளி
ஓசை உற்று கேள்.
அடங்காக் காமத்தின் உச்சமாய் சுயபுணர்ச்சி
செய், உடலதிரும் குற்றவுணர்ச்சி உணர்.
சாந்த குணமும் விஷம் நிரம்பிய நாகம்
ஒன்றும் உன் முன் நிற்பதாக கற்பனை கொள்.
நிலைக்கண்ணாடி முன் உடல் வருடி
முழுநிர்வாணம் ரசி, காற்றுப்புக அனுமதி கொடு.
இவையாவும் நாளுக்கொன்றாய் உரு மாறும்
நிலாவாகவும்
அது தரும் தற்காலிக குளிர்மை போலவும்
சுகிக்கவில்லையெனில் எப்போதாவது ஒன்றின்
மற்றொன்று தொடர்ச்சியாய் நடக்கும்
விசேஷ கணத்திற்காய் காத்திரு.

10 comments:

சென்ஷி said...

//நெடிதுயர்ந்த பனையின் நிழல் நகரும்
கதிரவனின் நகர்விற்கேற்ப
நகர்கிறோம் நானும் நீயும். நிரந்தரமென்றோ
தற்காலிகமென்றோ வரையிடமுடியாத
தனிமை. தனிமை //


கலக்கலான வரிகளுடன் ஆரம்பிக்கும் கவிதை.. நல்லாருக்குது தம்பி..!!

கோபிநாத் said...

ரொம்ப நல்லாயிருக்கு ராசா ;))

KARTHIK said...

// அடர்மழை காண் அதன் கடைசித்துளி
ஓசை உற்று கேள்.//

அருமை

Anonymous said...

கலக்கிட்டீங்க கதிர்.. கவிதை ரொம்ப நல்லா வந்திருக்கு. நிறைய எழுதுங்கள்

கதிர் said...

கோபி, சென்ஷி, கார்த்திக், அனானி

4 நன்றி

*அருமை என்ற வார்த்தை இங்கு தடை செய்யப்படுகிறது :)

வண்ணான் said...

*அருமை என்ற வார்த்தை இங்கு தடை செய்யப்படுகிறது :)

/

ரீப்பிட்டேய்ய்ய்ய்

வண்ணான் said...

அடங்காக் காமத்தின் உச்சமாய் சுயபுணர்ச்சி
செய்,
//

குபிர் இலக்கியவாதி,

அய்யனாரோட சேராதே....:)

வண்ணான் said...

காற்றுப்புக அனுமதி கொடு.
//


காற்று போக தான் நாங்க அனுபதிப்போம்

:)

வண்ணான் said...

உடலதிரும் குற்றவுணர்ச்சி உணர்.
///

சிக்கிரம் கல்யாண்ம் பன்னு

குற்றண்ர்ச்சியை தவிர் :)

வண்ணான் said...

சாந்த குணமும் விஷம் நிரம்பிய நாகம்
ஒன்றும் உன் முன் நிற்பதாக கற்பனை கொள்
//


குசும்பனும் அய்யனாரையும் கற்பனை பண்ணிக்கிறேன்

(போட்டோ அனுப்ப சொல்லவும்)