எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, February 23, 2008

மாறாததும், மாறியதும்

சில பெருசுகள் மண்டைய போட்டுடுச்சு.

சில சிறுசுகள் ஓடிப்போச்சு.

சிகரெட் விலை ஏறி போச்சு.

சண்டை போட்ட பக்கத்து வீட்டு சனம் பாத்தவுடனே சிரிக்குது.
காலம் எல்லாத்தையும் தோசை மாதிரி திருப்பி போடும்ன்ற உண்மை உண்மைதான்.

மண்டபத்திலாவது எதும் தேறுமான்னு பாத்தேன், அங்கயும் ஒரு லோடு மண்.

ஒரு வீட்டுக்கு குறைந்தது இரண்டு மொபைல் போன் இருக்குது. எல்லாருமே
ரெண்டு மொபைலாவது வச்சிருக்காங்க. (ரேஷன்ல கூட தர்றாங்களாம்பா)

"இதெல்லாம் தேறும்னு" கணக்கு பண்ணி வச்சிருந்த பிகர்கள ஆட்டை
போட்டுட்டானுங்க.

துப்பாய்ல எங்க இருந்த? என்ற கேள்வியை அனைவரும் கேட்டு கேட்டு
சாகடித்தனர். யோவ் வடிவேலு உன்னய...

டீக்கடையில் டீ குடிச்சதும் கடைக்காரர் பத்திரமா டீகிளாசை வாங்கி
வைத்து நக்கல் சிரிப்பு சிரிக்கிறார்.

ஊர்ல உள்ள மக்கள விட அதிகமா ஒரு ரூபாய் தொலைபேசி பொட்டிகள் தொங்குது.

ஸ்கூல் பொண்ணுங்க கூட பக்கத்துல யார் வர்றாங்க போறாங்கன்னு கவனிக்காம
கை நிறைய ஒரு ரூபாய் வச்சிகிட்டு லொடக் லொடக்னு காச விட்டு கடல போட்டுகிட்டு இருக்குதுங்க. அப்படி போடற காச உண்டியல்ல போட்டா அத வச்சு ஒரு குடும்பமே
வாழலாம்.

எல்லா விலையும் ஏறினாலும் எங்க ஊர் தியேட்டர்ல இன்னமும் அஞ்சு ரூபாய்தான்
டிக்கெட் விக்கறாங்க. இடைவேளைல குடிச்ச டீ கூட அதே சுவை. முன்னல்லாம்
சூடா சமோசா போடுவாங்க. தட்டுல பரப்பி தியேட்டர் உள்ள வந்து விக்கறத
நிறுத்திட்டாங்க. தியேட்டர் பொட்டிக்கடைல ரஸ்னா பாக்கெட் அமோக விற்பனை.
ஆனா நான் ரஸ்னா குடிக்கறதை நிறுத்திட்டேன். :)

எவ்ளோ தாமதமா வீட்டுக்கு வந்தாலும் ஏன் எதுக்குன்னு எப்படின்னு ஒரு
கேள்வியும் இல்லாம கதவ திறந்து விடறாங்க. ரொம்ப ஏமாற்றமா இருந்தது.

ஆங்கிலப்படங்களுக்கு மிரட்டலான தமிழ் பெயர் வைக்கிறாங்க. உதாரணம்
சங்கிலிக்கருப்பன், பாதாள பைரவி.

எல்லார் வீட்டுலயும் கலைஞர் டீவிதான் பாக்கறாங்க.

ரெண்டு டீவி இருக்குற வீட்டுல மூணாவதா கலைஞர் டீவி கொடுத்துருக்காங்க.
கிட்டதட்ட எல்லா வீட்டுலயும் இதுதான்.

எல்லா ஊர்லயும் பிரம்மாண்டமான வினைல் போர்டுல பல்லாயிரக்கணக்கான
தலைகள் சிரிச்சிகிட்டும், செல்போன்ல பேசுற மாதிரியும், வணக்கம் வைக்கிற
மாதிரியும் போஸ் குடுத்துகிட்டு இருக்கறாங்க. புருடா புராணத்துல இதுக்கு
எதாச்சும் தண்டனை இருக்குதான்னு பாக்கணும் இல்லாட்டி உருவாக்கணும்.

ரூட் கிளியராயிடுச்சி, அப்ப அடுத்து உனக்குதான கல்யாணம் என்ற கேள்வியை
அனைவரும் வாயிலேயே வைத்திருந்தனர்.

பதிவர்களில் புலி மட்டும் கல்யாணத்திற்கு முதல் நாள் வந்து கொஞ்ச நேரம் உறுமி
விட்டு போனது. நான் புலிக்கு எதுமே செய்யலன்ற குற்றவுணர்ச்சி தினம் தினம்
என்னை கொல்லுது. துபாய் வா ராசா!

ரோட்டுல போற எதாச்சும் ஒரு பொண்ண ரெண்டு நிமிசம் தொடர்ந்தாப்புல
பாத்தம்னா அடுத்த அஞ்சாவது நிமிசத்துல ரெண்டு மூணு பேர் பைக்ல வந்து
"ஏன் பாத்த"ன்னு ஜோதிகா ரேஞ்சுல கேள்வி கேக்கறானுங்க.

ஒரு ஒயின்ஷாப் இருந்த ஊர்ல இப்ப அஞ்சு டாஸ்மாக் இருந்தும் கேட்ட
சரக்கு கிடைக்கவில்லை. என்ன கொடும இது...

ஒருநாளைக்கு மூணு என்ற வீதத்துல ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம்
மின்சாரத்தை நிறுத்தி வச்சிடறாங்க. முன்னாடி இதுபோல இல்ல. இப்ப மட்டும்
ஏன்னு தெரில. இங்கருந்து கர்னாடகாவுக்கு போகற மின்சாரத்துல எந்த
தடையுமில்லை.

முன்னவிட தினத்தந்தி சாணி பேப்பரின் தரம் குறைந்து சினிமா படங்களின்
விளம்பரங்களும், பிறந்தநாள் வாழ்த்து பக்கங்களாலும் நிறைந்திருக்கிறது.
இப்ப டீக்கடைய நம்பி பத்திரிக்கை நடத்துறாங்கன்னு யாரும் சொல்ல முடியாதுல்ல.

இப்பலாம் குங்குமத்துக்கு இனாமா எதுவும் கொடுக்கறதில்லயாம். என்ன ஏதுன்னு
கேட்டா இனாமா கொடுத்த பொருள் எதுவும் சந்தைக்கு வரும்போது காசு கொடுத்து
வாங்கறதில்லியாம். இத அடுத்த வாரம் இனாமா வாங்கிக்கலாம்னு விட்டுருப்பாங்க
போலருக்கு.

தாரே சமீன் பர் படத்தை அக்கா பசங்களுக்கு போட்டு காட்டணும்னு ஆவலோட
டிவிடி வாங்கி வந்து போட்டேன். அஞ்சாவது நிமிசத்துல "அட இதுவா மாமா
நான் ஏற்கனவே இந்த படத்தோட கதைய கேட்டுட்டேன்னு சொல்றான்.
அவங்க ஸ்கூல் மிஸ் சொன்னாங்களாம். மிஸ் பேர் என்ன? வயசு என்னன்னு
கேட்டதுக்கு "அய்யய்ய ஆய் மாமான்னு" சொல்லிட்டு தூங்கிட்டான்.

நிறைய பேர பாக்கணும்னு நினைச்சு பாக்கமுடில. எங்க ஊர்லருந்து சென்னை
போகணும்னா குறைந்தது 10 மணி நேரம் ஆகுது. பத்து மணி நேரம், பன்னெண்டு
மணி நேரம் ட்ராபிக் எல்லாம் சாதாரணம். ரோடு போடறாங்களாம். இதுக்காகவே
போகவில்லை.

பதிவர்களில் சந்தித்தது இரண்டு பேர்தான். சுரேகா மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர்.
ரெண்டு பதிவர்களின் பேரும் சுந்தர். அப்புறம் என்னுடைய தீவிர ரசிகர்(?)
ஒருத்தரையும் பார்த்தேன். யோவ் அய்யனார் எனக்கும் ரசிகர் இருக்காங்க!

"பக்கத்து சீட்டுல பாட்டி உக்காராம பிகர் உக்காரணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்குங்க
அய்யனார்னு சொன்னேன். உனுக்குலாம் ஆயாதாண்டா பக்கத்துல உக்காரும்னு சாபம்
விட்டார். பத்தினன் சாபம்தான் பலிக்கும்னு நினைச்சேன்.

சினிமாக்கு போற வழில ஒரு ஆயா எலந்தபழம்னு கூவிகிட்டே போச்சு. ரெண்டு
ரூபாய்க்கு வாங்கி பேண்ட் பாக்கெட்ல போட்டு கடிச்சி தின்னுகிட்டே போனேன்.
"ஏண்டா நீ உண்மைலயே துபாய்லருந்துதான் வந்தியா"ன்னு கேட்டுட்டான்.

இல்லடா மச்சி, நான் அபிதாபி...

சும்மா இது ஒரு வருகைப் பதிவு மட்டும்தான்.

19 comments:

ஆயில்யன் said...

//இதெல்லாம் தேறும்னு" கணக்கு பண்ணி வச்சிருந்த பிகர்கள ஆட்டை
போட்டுட்டானுங்க.//
//எல்லா ஊர்லயும் பிரம்மாண்டமான வினைல் போர்டுல பல்லாயிரக்கணக்கான
தலைகள் சிரிச்சிகிட்டும், செல்போன்ல பேசுற மாதிரியும், வணக்கம் வைக்கிற
மாதிரியும் போஸ் குடுத்துகிட்டு இருக்கறாங்க//
//ரூட் கிளியராயிடுச்சி, அப்ப அடுத்து உனக்குதான கல்யாணம் என்ற கேள்வியை
அனைவரும் வாயிலேயே வைத்திருந்தனர்.//
அட..! அங்கேயும் இதே கதைதானா? இங்கேயும் அதே கதைதான் பிரதர் !

CVR said...

வாங்க வாங்க!!!
Welcome back!!

//
ரூட் கிளியராயிடுச்சி, அப்ப அடுத்து உனக்குதான கல்யாணம் /////

ரிப்பீட்டேய்!!! B-)

கோபிநாத் said...

வாய்யா...வா ;)))


\\எவ்ளோ தாமதமா வீட்டுக்கு வந்தாலும் ஏன் எதுக்குன்னு எப்படின்னு ஒரு கேள்வியும் இல்லாம கதவ திறந்து விடறாங்க. ரொம்ப ஏமாற்றமா இருந்தது.\\

ஆஹா...எனக்கும் இப்படி தான்...ஒருவேலை நம்மளை நம்ப ஆரம்பிச்சிட்டாங்க போல!!!


\\பதிவர்களில் புலி மட்டும் கல்யாணத்திற்கு முதல் நாள் வந்து கொஞ்ச நேரம் உறுமி
விட்டு போனது. நான் புலிக்கு எதுமே செய்யலன்ற குற்றவுணர்ச்சி தினம் தினம்
என்னை கொல்லுது. துபாய் வா ராசா!\\

ராசா புலிக்கு செய்யுறது இருக்கட்டும் முதல்ல எங்களுக்கு செய்யா! ;))

ILA (a) இளா said...

Superbpa. ithuvaraikkum unnoda pathivai padichuttu comment podama escape agiyirukein. Sangam makala irunthum namakkulla neriya thooram irukku. but inthap pathuivu DOWN TO EARTH. nalla irukkuppa..ennamo naane oorukku poyittu vanthaa maathiri oru uNarvu.

கப்பி | Kappi said...

:)

வாங்க அண்ணாத்த வாங்க! :))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

(புயலிலே ஒரு தோணி படிக்க ஆரம்பித்து விட்டேன்.!).

வெட்டிப்பயல் said...

ஊரு எப்படிப்பா இருக்கு???

ஆமா அது என்ன ஊருல இருந்து மெட்ராஸிக்கு பத்து மணி நேரம்னு சொல்ற? திருவண்ணாமலை ரூட்ல போனா நல்லா தான் இருக்கு...

பதிவு சூப்பர்...

கதிர் said...

ஆயில்யன்,
வாலிப பசங்கன்னாவே இந்த பிரச்சினைகள் வரத்தானே செய்யும் அதெல்லாம் பாத்தா முடியுமா...

நன்றி சீவியார்
ஏகப்பட்ட ட்ராபிக் ஜாம். க்ளியர் ஆன உடனே மத்தத யோசிக்கலாம்.

அரை ப்ளேடு
:) :)

ஜஸ்டிஸ் கோபிநாத்,

அப்படியே நாங்க கூப்பிட்டா வந்துட்டுதான் மறுவேலை பாப்ப நீ!
லேய் நீ மொதல்ல இந்த பக்கம் வா
பொறவு பேசிக்கலாம்.

கீழை ராஸா said...

வளைப்பூங்காவில் நான் முதலில் படித்தது தங்களின் வளைப்பூ தான்..
(ஒரு வருடத்திற்கு முன்) அப்போது எனக்கு இது பற்றி அவ்வளவாகத்
தெரியாது...பின்னூட்டம் எழுதம்னு நினைப்பேன்...அப்படியே விட்டு விடுவேன்...சமீபத்தில் தான் நான் என் வளைப்பூவை ஆரம்பித்தேன்...நீங்கள் ஊருக்கு போய் இருப்பதாய் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.. வந்த வேகத்தில் தங்கள் நகைச்சுவை உணர்வால் நாட்டு நடப்பை நச் சென்று கூறி இருக்கீங்க...தொடருங்கள்..

கதிர் said...

இளா,
நான் வந்துட்டேன்னு சொல்லணும்னு போட்ட பதிவு. கொடுத்த காசுக்கு மேல கூவற மாதிரி இருக்கு. இருந்தாலும் ரொம்ப நன்றி.
---

வந்தாச்சு கப்பி
---
சுந்தர்

எனக்கும் மகிழ்ச்சியாதான் இருந்தது. ஒரே ஒரு மனக்குறை என்னன்னா சரியான நேரம் அமையல. அடுத்த முறை நிறைய நேரம் ஒதுக்கி சந்திக்கலாம்.

படிச்ச பிறகு உங்க கருத்தை எழுதுங்க.
ஆவலாக காத்திருக்கிறேன்.
---

வாங்க விக்கி :)
---

முபாரக் said...

செம சுவாரஸ்யம்,

இன்னும் 15 வருசத்துல உங்க "கற்றதும் பெற்றதும்" தொடராக வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் :-)

நல்லா எழுதி இருக்கீங்க. நன்றி

கதிர் said...

வெட்டி,

ஊரெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா சாயந்திரமாச்சுன்னா AKT ஸ்கூல் பஸ், ஆட்டோக்காரணுங்க் பண்ற ராவடி தாங்க முடில. ஒரே ரோட்டுல 70 பஸ், 100க்கும் அதிகமான ஆட்டோ ஒரே நேரத்துல கிளம்பினா எப்படியிருக்கும். ஒருநாள் வசமா சிக்கி சின்னாபின்னமாயிட்டேன். அதுலருந்து சாயந்திரநேரத்துல எங்கயும் போறதில்ல.

ரோடு போடறதுனால அங்கங்க பஸ் நின்னுடுது. அதனாலதான் இவ்ளோ நேரம். முடிஞ்சவுடனே இந்த தொல்லை இருக்காது.

நன்றி வெட்டி

குசும்பன் said...

கோபிநாத் said...

ராசா புலிக்கு செய்யுறது இருக்கட்டும் முதல்ல எங்களுக்கு செய்யா!///

ரிப்பீட்டேய்:)))

கோபி ஊரில் இருந்து என் ரூமுக்குதான் நேரா வந்தார் என்ன “வாங்கிட்டு வந்தார்” என்று நீ கேளேன்!!! சென்ஷி நீ கேளேன்:)))

சுரேகா.. said...

நல்லா இருக்குங்க....
இவ்வளவு மாறிப்போச்சா??

அடடே..

ஆமா அந்த 'பஸ் டிக்கெட்' எங்கங்க போச்சு?

கதிர் said...

நன்றி கீழை ராஸா!

நகைச்சுவையா எழுதிருக்கேன்னு சொல்லுங்க பரவாயில்ல, ஆனா எனக்கு தெரியாம நாட்டு நடப்பை எழுதிட்டேன்னு முழிச்சிட்டு இருக்கேன்.

நன்றி
---

முபாரக்,

உங்கள பத்தி ஜ்யோவ்ராம் சுந்தர் நிறைய சொன்னார். சந்தோஷம்

நன்றி.
---

//கோபி ஊரில் இருந்து என் ரூமுக்குதான் நேரா வந்தார் என்ன “வாங்கிட்டு வந்தார்” என்று நீ கேளேன்!!! சென்ஷி நீ கேளேன்:)))//

கோபி எப்ப ஊருக்கு போனான்?
---

சுரேகா,

அந்த பஸ் டிக்கெட்ட காக்கா தூக்கினு போச்சு. :(

வல்லிசிம்ஹன் said...

தம்பி,
ஊருக்கு வந்திருக்க்கிறதா,
உங்க ஊர்ப் பெரியவர் ஒருத்தர் சொன்னார்.

சரி நமக்கும் ஒரு போன் வரும்னு நினைச்சேன்.

வேலையா இருந்திட்டீங்க போல,.
உடம்பு நல்லா குணமாயிடுசா.

ஊரு மாறாம இருக்குமா. முன்னேற்றம்பா முன்னேற்றம்:))

களவாணி said...

ராவையா ராவைய்யா

//ஊரு மாறாம இருக்குமா. முன்னேற்றம்பா முன்னேற்றம்:))//

அதே அதே...

களவாணி said...

ராவையா ராவைய்யா


//ஊரு மாறாம இருக்குமா. முன்னேற்றம்பா முன்னேற்றம்:))
//

அதே... அதே..

சென்ஷி said...

நான் கேட்டு பாத்து வாங்கிட்டு போயாச்சு மாப்ளே :))

எனக்கு அன்னிக்கு நல்ல நாள் போல... குறையொன்றுமில்லை.. மறைமூர்த்தி கண்ணா....! வேறென்ன சொல்ல :))