எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, May 24, 2007

அன்பு மலர்களே...

அந்தச் சிறிய பேருந்தில் ஒரு வரிசைக்கு ஐந்து உட்காரும் வசதி உள்ளது
மொத்தம் ஏழு வரிசை எல்லா இருக்கையிலும் ஆட்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
வண்டி கிளம்பி அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இரைச்சலான
நகரத்தை விட்டு வெளியே வந்ததாலோ என்னவோ பலர் தூக்கத்தை துணைக்கிழுத்திருந்தார்கள் சிலர் இழுக்க முயற்சி செய்து தோற்றவர்களாக
திரைச்சீலையை விலக்கி இருட்டு வெளியில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலோரின் முகங்கள் நாளை பத்தோ முதல் திரும்ப ஆறுநாட்கள் வெயிலில் பன்னிரண்டு மணிநேர முதுகொடிக்கும் வேலை செய்ய வேண்டும் என்ற மலைப்பு
கலந்த சலிப்புடன் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அமைதியான பேருந்தில் திடீரென்று ஒருத்தர் போன்ல பேசறார்.

ஹல்ல்லோ... ஹல்லோ நாந்தாம்மா பைசல் பேசறேன். நல்லாருக்கிங்களா

ஆங் ஆங்

நான் நல்லா இருக்கேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை லீவு அதான் மச்சான பாத்துட்டு
வர துபாய் போயிருந்தேன். இப்ப துபாயிலருந்து அபுதாபி போயிட்டு இருக்கேன்.

ஜமீலா... ஜமீலா

நான் பேசறது கேக்குதா உனக்கு?

.....

ஆனா எனக்கு சரியா கேக்க மாட்டேங்குது. ஒரு நிமிசம் இரு நான் லவுடு ஸ்பிக்கர்ல போட்டுக்கறேன்.

ஆங் இப்ப சொல்லு.

............

என்னம்மா பண்றது போன மாசம் அர்ஜண்டுனு சொன்ன அதனால ரெண்டாயிரம் அனுப்பினேன். இந்தமாசம் இன்னும் சம்பளமே வரல. அந்த மலையாளிகிட்ட சம்பளம் கேட்டேன் மொத மாச சம்பளம் குடுக்கமாட்டோம் கம்பேனிலதான் இருக்கும்னு சொல்லிட்டான். பார்ட் டயம் பாத்துதான் அனுப்பினேன்.
அது கெடக்கட்டும் இஸ்கூல்ல சேத்துட்டியா புள்ளைய.

.............

இன்னும் நோட்டு பொஸ்தகம் வாங்கணுமா?

.....................

அட்மிசனுக்கே ரெண்டாயிரம் ரூவாயா?

....................


சரிம்மா அடுத்த மாசம் அனுப்பறேன். கொஞ்சம் செலவானாலும் புள்ளய படிக்க வைக்கணும்ல.

அப்புறம் நர்கீசுக்கு எப்படியிருக்கு?

........

என்னது பொறந்துடுச்சா?

.......

என்ன கொழந்த?

.....

பொம்பள கொழந்தையா? நல்லது.

சரிம்மா ரொம்ப நேரம் பேசறேன் அப்புறம் மிஸ்ஸுடு கால் குடுக்க காசு இல்லாம
போயிடும். வச்சிரவா?

...........

ஆமாம்மா

இப்பவே மாசத்துக்கு நாலு கார்டு போடறேன். அதுக்கு நூறு திராம்சு போச்சுதுன்னா
பொறவு சாப்பாடு, ரூம் வாடவ சேத்து மாசம் அய்ன்னூறு ஆகுது.

வச்சிரவா....

புள்ளைய நல்லா பாத்துக்கோ....

வச்சிர்றேன்.

வச்சிர்றேன்.

____________________
பஸ்ல இருந்தவங்க பாதிப்பேரு எழுந்து அக்னிப்பார்வை பாக்கறாங்க அவர.
ஊருக்கு போன் பேசினதுக்கு அப்புறம் ரெண்டு பேர ஜெயிச்ச மாதிரி ஒரு தெனாவட்டு
வந்து உக்காந்திருச்சு முகத்துல.

ஆரம்பத்தில் மெல்லிய புன்னகையுடனும் போன் உரையாடலின் தொனி மாறி
சில விஷயங்களை பேச ஆரம்பித்ததும் எனக்குள் இருந்த பரிதாபக்காரன் எழுந்து
உக்கார்ந்து அழ ஆரம்பித்தான். எல்லாத்தையும் நான் பாத்துகிட்டுதான் இருந்தேன்.

மறுபடி அமைதி கவ்வ தொடங்கிய நேரம்...

அண்ணே உங்கள பாத்தா தமிழ்காரரு மாதிரி தெரியுது, தழிழாண்ணே?

ஆமாங்க.

நானே உங்ககிட்ட பேசலாம்னு இருந்தேன்.

இதுதான் நான் அபுதாபிக்கு ரெண்டாவது முறையா வரேன். முசாப்பா ஏரியா
வந்துதுன்னா கொஞ்சம் சொல்லுங்க நான் அங்கதான் இறங்கணும்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்.

எனக்கு தெரியும்ணே நான் சொல்றேன். கவலபடாதிங்க.

நீங்க உரக்க போன் பேசிகிட்டு இருக்கும்போது தோ அங்க உக்காந்திருக்கானே அந்த பாக்கிஸ்தானி பாகல் ஆத்மினு உங்கள சொன்னானே..

அட அவனுங்க கடக்குறானுங்க குளிக்காதவனுங்க. வாரத்துக்கு ஒரு முறைவீட்டுக்கு பேசறேன் ஒழுங்கா பேசவேணாமா இவனுங்களுக்கு பயந்துகிட்டு குசுகுசுன்னு பேசினா இன்னும் அஞ்சு நிமிசம் எச்சா ஆகி பில்லு கூடிப்போயிரும்ணே!

முசாப்பாவுல எங்க போகணும். அங்க லேபர் கேம்ப்ல எனக்கு அங்க கம்பெனி அக்காமடேஷன் அங்கதான் போயிட்டுருக்கேன்.

என்னா வேலை?

கம்பியூட்டர்ல வேலங்க..

ஓகோ

நல்ல கம்பேனியா, நல்ல வேலையான்னு விசாரிச்சிட்டு வாந்திகல்ல? ஏன்னா என்னை மாதிரி கஷ்டபடவேணாம்ல.

நான் பாருங்க ஊர்லயே மாசம் எட்டாயிரம் சம்பளட்துக்கு வேல செஞ்சிட்டு
இருந்தேன். பக்கத்து வீட்டு கருவாயன் ரிட்டர்ன்ட் வரும்போது நாலு காணி வாங்கிப்போட்டான். அட நாலு காணி வேணாம் புள்ளய நல்லா படிக்க
வைப்போம்னு வந்தேன். ஏ.சி ரிப்பேர் வேலை செய்றேங்க.மாசம் நானூரு
அய்னூறுதாங்க மிஞ்சுது. அதான் வந்த கடனை அடைச்சிட்டு ஊருக்கு போகலாம்னு
முடிவு பண்ணிட்டேன். அடுத்த வருசம் ஏப்ரல் வந்துச்சின்னா ஒரு வருசம் முடியிது, அப்படியே ஊருக்கு போக வேண்டியதுதான். நான் தூக்கற ஏ.சி என்னை விட ஒரு
கிலோ சாஸ்தியா இருகுங்க. வேற வேலையும் தரமாட்டேங்கறானுங்க.

என்னை பேச விடாமல் அவரே பேசிக்கொண்டிருந்தார்.

உங்க பக்கத்து வீட்டு கருவாயன் மாதிரி நீங்களும் ஊருக்குள்ள பந்தா காமிக்காதிங்க
அப்புறம் உங்கல பாத்து இன்னும் நாலு பேரு கிளம்புவாங்க.

அட ஆமாங்க இங்க அந்த கருவாயன் எவ்ளோ கஷ்டபட்டு வேலை செய்றான்னு
பாத்தேன். அந்தளவுக்கு செய்ய நம்மகிட்ட தெம்பு இல்லிங்க இல்லன்னா நானும்
செய்வேன்.

என்னது பந்தாவா?

இல்லைங்க வேலை செஞ்சு சம்பாதிக்கரத சொன்னேன். இன்னும் பத்து நிமிசத்துல
முசாப்பா வந்துடும் இறங்குங்க. அண்ணே உங்க டெலிபோன் நம்பர் குடுங்க நான்
பேசறேன்.

மொபைல்தாங்க இருக்கு என்கிட்ட.

அட அதத்தாங்க சொன்னேன் நானு.

சொன்னேன்.

ரூமுக்கு வழி தெரியுங்களா?

தெரியாது ஆனா போயிடுவேன். டாக்சிக்காரன்கிட்ட சொன்னா விட்டுடுவான்ல. அது
போதும்.

சரிண்ணே பத்கிரமா போனதும் போன் பண்ணுங்க. அப்படி இல்லன்னா நான் அபுதாபி போனதும் போன் பண்றேன்.

சரிங்கண்ணே .

வர்றேங்க பைசல். வர்ற வெள்ளிக்கிழமை முடிஞ்சா வரேன் வந்து போன் பண்றேன்.

சரிங்கண்ணே.

உங்க பேர் சொல்லவேல்லயே!

கதிர்.

வாங்க கதிரண்ணே!

என்னிலும் பத்து வயது மூத்தவர் வார்த்தைக்கு வார்த்தை அண்ணே என்று அழைத்து கூச்சத்தை வரவழைத்தது.

அறையில் நுழையும்போது மணி பதினொண்ணு. ஒரு மிஸ்ஸுடு கால்.

யார்னு பாத்தா நம்ம பஸ்ல பார்த்தா ஆள்.

டாக்சி பிடித்து பாக்கிஸ்தானிகிட்ட தத்துபித்து இந்தி பேசி ரூமுக்குள்ள வர்றதுக்குள்ள
மறந்து போயிட்டேன். மெல்லியதாக ஒரு குற்ற உணர்ச்சி தாக்கியது.

கதிரண்ணே ரூம் போய்ட்டிங்களா?

நல்லபடியா வந்து சேந்துட்டேங்க, நீங்க எப்படி?

நல்லபடியா நானும் ரூம் வந்துட்டேங்க. நேரம் ஆச்சி நான் மறுபடியும் நாளைக்கு
மிஸ்ஸிடு கால் குடுக்கறேங்க. வச்சிர்றேன்.

சரிங்க பைசல். நாளைக்கு பாக்கலாம்ங்க!(நாளைக்கு பாக்க வாய்ப்பு இல்லன்னாலும்
இப்படி சொல்லி சொல்லி பழக்கமாகிடுச்சி :)) )

ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்த இந்த நபர் இந்த ஒரு வாரமா தினமும்
சாயந்திரத்துல போன் பண்ணி நலம் விசாரிக்கிறார். நினைச்சி பார்க்கவே ரொம்ப
ஆச்சரியமா இருக்கு.

நாளைக்கு வெள்ளிக்கிழமை அபுதாபி போகணும்.

*******************

சிலபல காரணங்களால கடந்த ஒரு மாதமா பதிவு போடமுடியாம போச்சி.
கோடானு கோடி வாசகர்கள ஏமாத்தறதா குற்ற உணர்ச்சி தாக்கினதுனால
பெரும் முயற்சி எடுத்து இந்த பதிவை போடறேன். நம்ம கோபி ஊருக்கு
போறான்றத ஒரு தட்டி வச்சி அறிவிக்க முடியாத அபாக்கியசாலியாகிட்டேன்.
மன்னிச்சிடு கோபி அன்னான் சாரி அண்ணன்.

அட பின்னூட்டம் கூட போடமுடிலங்க. நல்ல நல்ல பதிவுகள் விட்டுப்போயிருக்கும்.
சரி பரவால்ல நான் வரலண்ணா என்ன குடி முழுகி போயிடும். என்ன எழுதறதுன்னு யோசிச்சப்ப கடந்த வாரம் சந்திச்ச ஒரு நபர பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணி எழுதியிருக்கேன்.


வரேங்க _/\_

23 comments:

தம்பி said...

நமக்கும் ஒண்ணோ ரெண்டோ கமெண்டு வரும். போட்டவங்க வந்து திரும்ப பாப்பாங்க இந்த பய என்ன சொல்லி இருக்கான்னு. இனிமே ரெண்டு நாள் கழிச்சிதான் வரமுடியும் உடனுக்குடன் பப்ளிஷ் பண்ண முடியாது அதனால வாசல திறந்து வச்சிட்டே போறேன்.

எழுத்துப்பிழை இருந்துச்சின்னா தப்பா நினைக்காதிங்க. அவசரத்துல டைப்பியது.

நன்றி மக்கா!

இராம் said...

கதிரு,

நல்லா எழுதிருக்கே மக்கா....

Anonymous said...

good post


MR.x

செந்தில் said...

எப்படா தம்பி வருவார்ன்னு பார்த்திட்டிருந்தேன். இதோ பதிவ படிச்சிட்டு வர்றேன்.

செந்தில் said...

ரசித்தேன்...

பைசல் அண்ணனைக் கேட்டதாச் சொல்லுங்க.

ஜி said...

ஆரம்பமே ரொம்ப அருமையா இருந்தது தம்பி.... உங்களோட சமீபத்திய பதிவுகள் மிகவும் ரசிக்கும்படியா இருக்குது தம்பி... :)))

Anonymous said...

naanum padithuvitten thambi -

manitharkal palavitham -

unkalin karunaiyaana visarippu avar manathai thottu irukkavendum -
kudumpathai vittu veli ooril ippadi oru manithar pesukirare enta aathangam - mothathil paasathukku enkum manitharkal - karisanamaga one or two words pesiyavudan madai pol manam thiranthathupolum - paavam - unkalodu pesuvathil oru arruthal - oru eluthaalanukku irrukka vendiyathu - nalla sevai thaan (service) bas....

தம்பி said...

வாங்க நவீன கைப்புள்ள

நான் என்ன எழுதினாலும் நல்லாருக்குன்னு சொல்றிங்க பாருங்க...
நீங்க ரொம்ப நல்லவரு.

நன்றி ராயல் கைப்ஸ்

மஞ்சிளா said...

மாமா எங்கிட்டு போனிங்க இம்புட்டு நாளா ,,இந்த ராமு,மின்னலு எல்லாம் என்ன கரெக்ட் பண்ண பாத்தாங்க நான் கரீட்டா சொல்லிட்டேன் நான் கதிர் மாமனுக்குதான்னு

லொடுக்கு said...

பாசமான ஆளை சந்தித்திருக்கிறீர்கள். உங்கள் நட்பு தொடர வாழ்த்துகிறேன்.

தம்பி said...

நன்றி மிஸ்டர் எக்ஸ்.

யெய்யா செந்திலு எம்மேல அம்புட்டு பாசமாய்யா உனக்கு.
நல்லாருய்யா!

தம்பி said...

வாய்யா ஜி!

ரொம்ப நாளா வலைப்பக்கமே வரமுடியாம போச்சு. நீயும் கதை கவிதைன்னு கலக்கிட்டு இருந்திருப்பல்ல. மறுக்கா அமேரிக்கா போயிட்டியாமே. அங்க எதுனாவது.....
இல்ல அடிக்கடி அங்க போற வர இருக்கியே அதான் கேட்டேன்.

வினிதா சுனிதா said...

மாமா எங்கிட்டு போனிக
நீங்க இல்லாத நேரம் பாத்து வெட்டி வெளில கூப்டாக நாங்களும் ஒரு வீக் எண்டு போயிட்டு வந்தோம்..ஆனா இந்த மஞ்சிளா வ நம்பாதீங்க அவள அய்யனாரோட பீச்சில பாத்தோம்

கல்பனா said...

எவடி அவளுக என் மாமன் வீடல கொட்டம் அடிக்கிறது??

தம்பி said...

அம்மா தங்கமணிகளா யாரும்மா நீங்கள்லாம்??

ச்ச்சே ச்ச்சே வயசுப்பசங்க வெளில நடமாட முடிலப்பா!

தம்பி said...

வாங்க லொடுக்கு!

காது குடுத்து கேக்க நேரம் மட்டும் இருந்துச்சின்னா இந்த மாதிரி லட்சம் பேர பாக்கலாம்.

இங்கதான் நிக்கவே நேரம் இல்லயே :(

வல்லிசிம்ஹன் said...

பாலைவனத் தனிமை மனதுக்கு
வருத்தமாக இருக்கு.
இப்படி ஒரு பாசத்துக்கு ஏங்குகிறார்களே.
நல்லா இருந்தது தம்பி.

மின்னுது மின்னல் said...

ஆனா எனக்கு சரியா கேக்க மாட்டேங்குது. ஒரு நிமிசம் இரு நான் லவுடு ஸ்பிக்கர்ல போட்டுக்கறேன்.

..........

...........

///


லவுடு ஸ்பிக்கர்ல போட்டும் உங்களுக்கு காதுல விழவில்லையா...:)


MR.X

அபி அப்பா said...

தம்பி! நல்ல டச்சிங்கா இருந்துச்சி. மனசு லைட்டா பாரமா இருக்கு இப்போ!

அபி அப்பா said...

சரி தம்பி யாரு இந்த புள்ளங்க! யாருக்காவது ஒரு தாலிய கட்டபட்டாதா?

கல்பனா அக்கா said...

ஹாய் மாம்ஸ் பிஜி யா கீறியா ?

கதிரவன் said...

நல்ல பதிவு தம்பி.
"ரொம்ப நாளா ஆளக்காணோமே,ஒருவேளை புது எடத்துல ஏதாவது முக்கியமான வேலையோ..."ன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் :-)

PPattian said...

Touching! hardships one goes through for the family!!! We are so gifted with education.

Hopefully Faisal will educate his kids and they'll also blog like us and not lift A/C that is one kilo more than their weight..