எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, December 21, 2006

எச்சரிக்கை!!!

இது ஒரு எச்சரிக்கை பதிவு!!!

காலம் கடந்த எச்சரிக்கைதான் ஆனாலும் கவனமா இருங்க பின்னாடி இதே
தப்பை செஞ்சிறாதிங்க.

சென்னைக்காதல்

Photobucket - Video and Image Hosting

இந்த படத்தை நான் பார்க்க கூடாதுன்னு சில தரப்புகளில் இருந்து
எதிர்ப்புகளும், பல இடங்களில் இருந்து எச்சரிக்கைகளும் வந்தன். இதே
போல எச்சரிக்கைகள் வல்லவன் படம் பார்க்க முடிவு செய்த போது என்
நல விரும்பிகள் கொடுத்தார்கள். அதனை அலட்சியம் செய்து பார்த்தேன்.
அதன் பின்விளைவு அப்புறம் தெரிந்தது.

சரி படத்துக்கு வருவோம் அதுக்கு முன்னாடி இயக்குனர் விக்ரமன் பத்தி
கொஞ்சம் சொல்லுவோம். இவர பத்தி எனக்கு இருக்குற ஒரே கருத்து
செண்டிமெண்ட் கலந்த காமெடி படம் எடுப்பாரு. பெரும்பாலும் இவரோட
முந்தைய படங்களின் கதையயே மத்த படங்களுக்கும் உபயோகிப்பார்
ஆங்கிலப்படங்களையோ, வேற்று மொழிப்படங்களையோ பார்த்து காப்பி
அடிக்காம ஒரே கதையை திரும்ப திரும்ப எடுக்கறதினால இவரை
பாராட்டலாம். லாலாலா பிண்ணனி இசையும், ஆர்மோனியத்தின் அபஸ்வர
ஒலியையும் இவரையும் பிரிக்கவே முடியாது அப்படி ஒரு பந்தம்.

Photobucket - Video and Image Hosting

இவரு இயக்குனராக முயற்சி செய்யும்போது எழுதின கதைய இப்ப
எடுத்திருக்காரு படத்த பாத்தா அந்த மாதிரிதான் தெரியுது. இதே மாதிரி
கதையில ஆயிரத்தி சொச்சம் படம் தமிழ்ல வந்திருக்கு.இப்ப எதுக்கு இந்த
படத்தை எடுத்தாரோ தெரியல. ஒருவேளை தாணுகிட்ட ஏகப்பட்ட பணம்
இருந்திருக்குமோ தெரியல.

ஒரு சென்னைப்பயன் படிக்காம ஊர சுத்தி, வீட்டையும் மதிக்காம, யாரையும்
மதிக்காம ஒரு பிகரை(ஜெனிலியா) காதல் செய்கிறார். அவளையே கல்யாணம்
செய்யிறதுக்கு எல்லா விதமான எதிர்ப்புகளையும் சந்தித்து காதலில் வெற்றி
பெறுகிறார். " உன்ன வளர்த்ததுக்கு பதிலா ஒரு எருமை மாட்டையே
வளர்த்திருக்கலாம்"னு பரத்தோட அப்பா சொல்லப்போக ஒரு எருமை
மாட்டையே வீட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தறாரு பரத். இதுக்காக படத்தில
15 நிமிஷம் காமெடின்ற பேர்ல இந்த சீனை எடுத்திருக்காங்க. யெப்பா
சகிக்கலடா சாமி... ஹீரோவோட காதலுக்கு உதவி செய்யறதுக்காகவே
விக்ரமன் படத்தில குறைஞ்சது நாலு பேர் இருப்பாங்க. இவங்க உயிரை
குடுத்தாவது ஹீரோவை காப்பாத்துவாங்க. அந்த மாதிரி இதுல நாலு பேர்
நடிச்சிருக்காங்க அதில ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் கொஞ்சம் ஆறுதல் தருகிறார்.
ஏற்கனவே தொலைக்காட்சில செய்த காமெடியையே திரையிலும் பார்த்ததுதான்
கொஞ்சம் புதுமையா செஞ்சிருக்கலாம்.

Photobucket - Video and Image Hosting

அது என்னவோ தெரியல ஹீரோயின் அப்பா பயங்கரமான ரவுடியா வருவது
தமிழுக்கு எத்தனையாவது படம்னு. அழகான ஜெனிலியாவுக்கு ராதாரவி
அப்பாவாக நடித்திருக்கிறார். எங்க சார் போயிருந்திங்க இவ்ளோ நாளா?.
இவ்வளவு நாளா காத்திருந்தது வீண் போகல. ஒரு அருமையான படத்தில
நடிச்சிட்டிங்க.

கிளிகள் மும்பைக்குதான் பறந்து போச்சின்னு ராதாரவிக்கு எந்த படை வீட்டு
அம்மன் கனவில வந்து சொல்றாங்கன்னு தெரியல அதுவும் இவரு தோஸ்தான
இன்னொரு ரவுடி வீட்டுலயே தஞ்சம் புகுந்து அங்கயே யாருக்கும் தெரியாம
இருக்கறது காமெடியின் உச்சம்.

இப்ப தமிழ் சினிமா இருக்கற சூழ்நிலைக்கு எப்படியெல்லாம் படம் எடுக்க
கூடாதோ அப்படி எடுத்திருக்கிறார் விக்ரமன் அதுக்காகவாச்சும் அவருக்கு
உதவி இயக்குனர்கள் நன்றி சொல்லணும். படத்துல ஆறுதல் அதில வரும்
பாடல்கள் அப்படின்னு கூடசொல்ல முடியாது பிண்ணனி இசை படு
கேவலம். சீரியல்ல கூட இதை விட பிரமாதமா கொடுக்கறாங்க. த்ரில்
காட்சிக்கு பிண்ணனிஇசையா டொட்ட டொய்ங் டொட்ட டொய்ங்தான்
போடறாங்க.

ஏண்டா நாயே படம் பாத்துட்டு இந்த வைய்யி வைய்யரேன்னு கேக்கறிங்களா?

ஜெனிலியான்னு ஒரு அம்மணி நடிச்சிருந்த ஒரே காரணத்துனாலயும், கூட பரத்தும் இருக்கறதினால பாத்து தொலச்சிட்டங்க.

பள்ளி ஆண்டுவிழா நாடகத்துல கண்ணுல மை வைக்க தெரியாம வெச்சி,
சாந்துபொட்டை உதட்டு சாயமா போட்டுகிட்டு ஏதாவது ஒரு பொண்ணு ஓரமா
ஒரே இடத்தில நின்னுகிட்டு கைய மட்டும் சுத்துவாங்க அதுக்கு பேரு டான்ஸ்.
ஆமாங்க அந்த மாதிரி ஒரு நாடகத்தை பார்த்திருந்திங்கன்னா அதுல வர்ற
பொண்ணு கேரக்டர்தான் ஜெனிலியா பண்ணது.

என்னவோ போ!

இன்னிக்கு வெயில் படம் பாக்கறேன் அதுவாச்சும் நல்லா இருக்குதான்னு பார்ப்போம்.

32 comments:

இராம்/Raam said...

கதிரு ,

நீ பார்த்து எழுதின படத்தே விட அதுக்காக ஒரு படமென்னு மொதல்லே போட்டுறுக்கே பார்த்தியா... அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!

கதிர் said...

இப்படிதான் நான் ஏமாந்து போனேன். நீங்களும் படம் பாக்கறேன்னு ஏமாந்துறாதிங்க!

Anonymous said...

ஐயா சாமி,

கையை கட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறதுனாலே நீ என்னா பெரிய விமர்சகனா.... மவனே கையிலே சிக்குனே?

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி..

படம் போறதுக்கு முன்னாடி அண்ணனுங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டிருந்தா இதெல்லாம் நடக்குமா?

பரத், ஜெனிலியா என்ன.. இந்த ஆள்கிட்ட மாட்டினா விஜயகாந்தையும் சூர்யா சரத்குமாரையும் கூட தயிர்சாதம் ஆக்கிடுவாரே..

கதிர் said...

//கையை கட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறதுனாலே நீ என்னா பெரிய விமர்சகனா.... மவனே கையிலே சிக்குனே?//

அய்யா டைரடக்கரு இது விமர்சனம் இல்லய்யா நல்லா பதிவ படிச்சி பாரு
எச்சரிக்கை, வகைப்படுத்தல்ல கூட பாத்தியா...

ஒரே காமெடிப்பா உங்கூட...

Anonymous said...

அடுத்து வெயில் படமா... "எச்சரிக்கை" இங்க சிங்கையில் மூணு நாளா இடைவிடாத மழை சரி தியேட்டர்லயாவது வெயில் காய்வோம்ணு பார்த்தா மண்டை காய்ஞ்சோம். எட்டுப் பேரு பட்டயக் கெளப்பாலாம்ணு போனா சோக கீதமா சொறிஞ்சுட்டாய்ங்க!

ஒருவேளை விமர்சனமெல்லாம் படிச்சுட்டு தனியா பார்த்திருந்தா பிடிச்சுருக்கலாம்... கூட்டமா போனதால சோகசீனுக்கெல்லாம் கும்மியடிச்சுட்டுதான் வந்தோம்.

பார்க்கலாம் ஒரு முறை அதீத சோகம் பிடிக்குமென்றால்

இராம்/Raam said...

//அய்யா டைரடக்கரு இது விமர்சனம் இல்லய்யா நல்லா பதிவ படிச்சி பாரு
எச்சரிக்கை, வகைப்படுத்தல்ல கூட பாத்தியா...//

கதிரு,

ஐ யம் ரியலி ப்ரவுட் ஆப் யூ டியர்.

யூ ஹாவ் வெரி குட் ஹீயூமர் சென்ஸ்... ;)

கதிர் said...

//சுரேஷ் (penathal Suresh) said...
தம்பி..
படம் போறதுக்கு முன்னாடி அண்ணனுங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டிருந்தா இதெல்லாம் நடக்குமா?

பரத், ஜெனிலியா என்ன.. இந்த ஆள்கிட்ட மாட்டினா விஜயகாந்தையும் சூர்யா சரத்குமாரையும் கூட தயிர்சாதம் ஆக்கிடுவாரே//

பல திசைகளில் இருந்து எதிர்ப்புகள் வந்துச்சுங்க சுரேஷ். என்ன பண்றது ஆப்புகள் யாரும் யாருக்கும் வைக்கறதில்ல ஆங்காங்கே இருக்கும் நாம்தான் அதில போய் ஜம்ப் பண்ணி உக்காந்துக்குறோம்.


முதல் வருகைக்கு நன்றிங்க சுரேஷ்!!

இராம்/Raam said...

//இப்படிதான் நான் ஏமாந்து போனேன். நீங்களும் படம் பாக்கறேன்னு ஏமாந்துறாதிங்க!//

அந்த தப்பே மட்டும் பண்ணவே மாட்டேன்'லே.... நானும் Dhoom 2 பார்த்திட்டு அதே தாளிக்கனுமின்னு இருந்தேன், ஆனா நம்ம தல சூப்பரா அதே தாளிச்சு சட்னியாக்கிட்டாரு.... :-)))

கதிர் said...

//ஒருவேளை விமர்சனமெல்லாம் படிச்சுட்டு தனியா பார்த்திருந்தா பிடிச்சுருக்கலாம்... கூட்டமா போனதால சோகசீனுக்கெல்லாம் கும்மியடிச்சுட்டுதான் வந்தோம்.//

நம்ம ஊர்லதான் அப்படின்னா அங்கயுமா கும்மி அடிப்பிங்க!!

//பார்க்கலாம் ஒரு முறை அதீத சோகம் பிடிக்குமென்றால் //

வெயில் பாக்க போறேன்னு சொன்னதும் யார்கிட்டருந்தும் எதிர்ப்பு வரல. சோ இது ஒரு நல்ல படமா இருக்கலாம்.

பார்த்துட்டு வந்து அதையும் எழுதறேன்.

கதிர் said...

//அந்த தப்பே மட்டும் பண்ணவே மாட்டேன்'லே.... நானும் Dhoom 2 பார்த்திட்டு அதே தாளிக்கனுமின்னு இருந்தேன், ஆனா நம்ம தல சூப்பரா அதே தாளிச்சு சட்னியாக்கிட்டாரு.... :-))) //

நானும் படிச்சேன் அந்த பதிவ :)))

உங்க பங்குக்கு நீங்க ஒரு கிச்சடியாவது போட்டுருக்கலாமில்ல.

Anonymous said...

படமா அது .... விக்கிரமனை பாத்தா ..." பழைய கதை எல்லாம் மறந்து போச்சானு கேக்கனும் .."

நான் பாதியிலேயெ ... எழுந்து வந்துடென் ...

" வெயில் " பார்க்கலாம் .... " அழகி மாதிரி இருக்கு ....

கதிர் said...

//படமா அது .... விக்கிரமனை பாத்தா ..." பழைய கதை எல்லாம் மறந்து போச்சானு கேக்கனும் .."//

அவரு அவரோட பழைய படங்களின் கதையையே எடுத்திருக்கலாம். இந்த படத்தை எடுத்ததுக்கு :))

ஒரு அனுபவ இயக்குனர் இவ்வளவு கொடுமையாவா படம் எடுப்பாங்க!!

வருகைக்கு நன்றிங்க சுந்தர்!

கப்பி | Kappi said...

//இவரு இயக்குனராக முயற்சி செய்யும்போது எழுதின கதைய இப்ப
எடுத்திருக்காரு படத்த பாத்தா அந்த மாதிரிதான் தெரியுது//

இதை அவர் அப்பவே எடுத்திருந்தா நாம இத்தனை நாள் தப்பிச்சிருப்போம் :))

சமீபத்துல பார்த்த படங்களில் மிக மோசமான படம்ங்க இது!!

இராம்/Raam said...

கதிரு,

வெயில் படம் பார்க்க போறியா... நல்லாயிருக்குன்னு கேள்விப் பட்டேன்ப்பா!

குமுதம் டைரக்டருக்கு கீரிடம் போட்டாங்க... விகடன்'லே 42 மார்க், குங்குமத்திலே பார்க்கவேண்டிய படமின்னு விமர்சனம் பண்ணிருந்தாங்க....

நீ படத்தே பார்த்திட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லு, பார்க்கலாம்... :)

கப்பி | Kappi said...

போட்டதுதான் போட்டீங்க...வேற ஏதாவது படத்துல இருந்து ஜெனிலியா ஸ்டில் போட்டிருக்கலாம்ல? இந்த படம் தான் கிடைச்சுதா?? ;)

கதிர் said...

//சமீபத்துல பார்த்த படங்களில் மிக மோசமான படம்ங்க இது!! //


மக்கள்ஸ் வேதனைய ஒரு கையெழுத்து வேட்டையா மாத்தி அதை அப்படியே விக்ரமன் கதை விவாத குழுவுக்கு அனுப்பனும். எலேய் பசங்களா இது 2006டா அதுவும் முடிய போகுது. இன்னும் 80லயே இருக்கிங்களேன்னு.

கதிர் said...

//குமுதம் டைரக்டருக்கு கீரிடம் போட்டாங்க... விகடன்'லே 42 மார்க், குங்குமத்திலே பார்க்கவேண்டிய படமின்னு விமர்சனம் பண்ணிருந்தாங்க.... //

அடடே அப்படியா!


//நீ படத்தே பார்த்திட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லு, பார்க்கலாம்... :)//

கண்டிப்பா சொல்றேங்க ராம்.

Anonymous said...

இந்த படத்துல ஒரு விசேசம் கவனிச்சீங்களா? விக்ரமன் படத்துல எல்லாம் ஹீரோ தியாகச் செம்மல்லா இருப்பரு. இந்தப் படத்துல அந்த கொலவெறி எதுவும் பண்ணல...

அதனாலத்தான் அவனுக்கு இது புதுவித படமா தெரிஞ்சுது....

கதிர் said...

//போட்டதுதான் போட்டீங்க...வேற ஏதாவது படத்துல இருந்து ஜெனிலியா ஸ்டில் போட்டிருக்கலாம்ல? இந்த படம் தான் கிடைச்சுதா?? ;) //

என்ன பண்றது கப்பி நானும் கூகிளாண்டவர்கிட்ட நல்லதா நாலு போட்டோ இந்த திரைப்படத்திலருந்து வேணுமின்னு கேட்டேன். ரொம்ப நேரம் தேடிட்டு கடேசில என்னால முடியலப்பான்னு அவரே கதறிட்டாரு

அதுசரி

குடுகுடுப்பைய ஒட்டினாப்புல இருந்தாதனப்பா ஆட்டினா சத்தம் வரும்.

படத்தை எடுத்ததுதான் சரியில்ல போட்டோ கூடவா ஒழுங்கா எடுக்கல?

என்ன கொடும இது கப்பி.

என்னை மன்னிச்சிருப்பா.

கதிர் said...

//இந்த படத்துல ஒரு விசேசம் கவனிச்சீங்களா? விக்ரமன் படத்துல எல்லாம் ஹீரோ தியாகச் செம்மல்லா இருப்பரு. இந்தப் படத்துல அந்த கொலவெறி எதுவும் பண்ணல... //

அட அது ஒண்ணு இல்லன்னா வித்யாசமா போயிடுச்சா அவருக்கு. இந்த படம் வரதுக்கு முன்னாடி ஒரு பேட்டில சொல்லியிருந்தாருங்க முழுக்க முழுக்க இந்த தலைமுறையினருக்காக என் முந்தைய படங்களில் இருந்து வித்யாசமாக எடுக்கிறேன்னு.

அந்த வித்யாசம் இதானா?

வெளங்கிரும்யா!

இராம்/Raam said...

//போட்டதுதான் போட்டீங்க...வேற ஏதாவது படத்துல இருந்து ஜெனிலியா ஸ்டில் போட்டிருக்கலாம்ல? இந்த படம் தான் கிடைச்சுதா?? ;) //

ஏம்பா மொத படத்திலே அழகாதானே இருக்கா ஹரிணி.... :)

Anonymous said...

நான் போன வாரம்தான் இந்த படத்தப் பாத்தேன். அப்பவே ஒரு எச்சரிக்கை பதிவு ஒன்னு போடலாம்னு பாத்தேன். சரி... யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு உட்டுட்டேன்... ஹி..ஹி..

நாமக்கல் சிபி said...

தம்பி,
ஏன் தமிழ் படம் பாக்க மாட்றனு கேட்டியே இப்ப பிரியுதா???

நானும் ஒரு அட்டகாசமான படம் நேத்து பார்த்தேன்.. அதை பத்தி சீக்கிரம் எழுதறேன்...

படத்தோட பேரு "தர்மபுரி"

கதிர் said...

//ஏம்பா மொத படத்திலே அழகாதானே இருக்கா ஹரிணி.... :) //

ஹி.. ஹி...
ஆமாங்ணா அதனாலதான் போட்டேன்!

//நான் போன வாரம்தான் இந்த படத்தப் பாத்தேன். அப்பவே ஒரு எச்சரிக்கை பதிவு ஒன்னு போடலாம்னு பாத்தேன். சரி... யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு உட்டுட்டேன்... ஹி..ஹி..//

எவ்ளோ பெரிய மனசுப்பா உமக்கு...
நல்லா இருப்பா நல்லா இரு..

கதிர் said...

//தம்பி,
ஏன் தமிழ் படம் பாக்க மாட்றனு கேட்டியே இப்ப பிரியுதா???//

இந்த மொக்கை படம் வந்ததால எல்லா படத்தையும் சொல்ல முடியாது வெட்டி. நேத்து கூட வெயில்னு ஒரு அருமையான படம் பார்த்தேன்.

//படத்தோட பேரு "தர்மபுரி"//

வொய் திஸ் கொலவெறி?

Boston Bala said...

வெயில் எப்படி இருக்குது?

கதிர் said...

வாங்க பாபா!
படம் ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க.
விமர்சனமும் எழுதிட்டேன் பாருங்க.

Anonymous said...

ம்ம்ம் விக்ரமன் நல்லா தானே இருந்தாரு??

கதிர் said...

//விக்ரமன் நல்லாத்தானே இருந்தாரு!//

அவருக்கென்ன நல்லாதான் இருக்காரு, படத்தை பார்த்த நம்மளாலதான் நல்லா இருக்க முடில!

லொடுக்கு said...

ஹய்யோ! ஹய்யோ!!

கதிர் said...

//ஹய்யோ! ஹய்யோ!!//

என்ன ஆச்சு?
அங்கயுமா?
அடப்பாவமே!!